கணிணிக்கு ஏற்ற மொழி தமிழ்

சில நாட்களுக்கு முன் தமிழ் இணையத்தில் பக்கங்கள் பார்த்திருந்தபோது கணிணிக்கு ஏற்ற  மொழி தமிழ் என சொல்லி இருந்தது.

இதைப் பற்றி மேலும் தேடியபோது sanskrit மொழி கணினிக்கு ஏற்ற மொழி என ஆய்வு செய்துள்ளதாக யாரோ எழுதி இருந்தனர்.

இந்த இரு முடிவுகளும் எதை சொல்கின்றன என எனக்குப்  புரியவில்லை. கணிணிக்கு என C மொழியும் அதைத்தொட்டு வேறு ஜாவா, html ஆகியனவும் இருப்பது அறிகிறேன். இவற்றில் எங்கு மனிதர் பேசும் மொழிகள்  தமிழ், sanskrit வருகின்றன?

எனக்கு எதோ இவர்கள் சொல்வது புரியவில்லை என அறிகிறேன். யாராவது சொல்வீரா?

செம்மொழி  தமிழ் அறிவியல் படைப்புகளைக் கொண்டு உள்ளதா? தற்போதைய அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் கொண்டுள்ளதா? இல்லை என்பதே விடை.
இதை சரி செய்வது அவ்வளவு எளிது அல்ல. உலகின் பெரும்பாலான ஆராய்ச்சி இதழ்கள் english உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் தான் உள்ளன. இவற்றை தமிழில் மொழி பெயர்ப்பது நிச்சயம் கால விரயம் என்று சொல்ல முடியாவிட்டாலும் அது தான் உண்மை.

தாய் மொழியில் படிக்கும் ஜப்பான், ஜெர்மனி, சீன மக்கள் அனைவரும் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் தான் வெளி இடுகின்றனர் .(பெரும்பாலும்)

ஆங்கில அறிவு இருந்தால், கற்கும் ஆர்வம் இருந்தால், தற்போதைய எந்த அறிவு இதழ்களையும் கற்று நம் அறிவை விரிவாக்கலாம். ஆனால் இந்த நிலை தமிழ் மட்டும் அறிந்த, கற்கும் ஆற்றல் உள்ளவருக்கு கிடைக்க நீண்ட காலம் ஆகும்.
புதிய கண்டுபிடிப்புகள் தமிழ் மூலம் வருவது கடினம். ஏனெனில் அதற்கென அடிப்படை அறிவு சொத்துகள் தமிழில் இல்லை. எந்த ஒரு புதிய அறிவியல் கலை சொல்லும் உலகின் எல்லோராலும் ஏற்கத்தக்க சொல்லாகவே இருக்க வேண்டியது அவசியம்.
அதனைத் தமிழ் செய்வது ஒரு புதிய கண்டுபிடிப்புக்கு  ஈடு.

ஆனால் அறிவியலின் பலன் எல்லோரையும் சென்று அடைய அது வட்டார மொழிகளில் பயனாளி இயக்கும் வழியில் வேண்டும்.

விவசாயத்துக்கு வயலும், வாழ்வும் போல. வேளாண்மையில் நாள்தோறும் ஏற்படும் முன்னேற்றங்கள் தமிழில் இல்லாவிட்டாலும் ஒரு அறிஞர் அதன் பயனை தமிழில் சொன்னால் போதும்.

இதைப் போலவே எல்லா அறிவியல் துறை முன்னேற்றங்களையும் தமிழில் செய்தியாக வெளியிடலாம். இதற்கு நாம் கலைச்சொல் அகராதி உருவாக்க வேண்டியதில்லை.

விண்டோஸ்? டெஸ்க்டாப்? இப்படி மொழி பெயர்ப்பது சரியா?
html, C, php, இதை எல்லாம் எப்படி பெயர்ப்பது?

நாம் எல்லோரும் அறிந்த cos, sin, tan இவற்றை எப்படி பெயர்ப்பது?
விலங்கு, தாவர அறிவியல் வகைப்பாட்டியல் பெயர்களை?

ஒரு தனி மனிதனுக்கு வேண்டிய அறிவியல் அறிவு அவன் மொழியில் கிடைக்க முதலில் முயல்வோம். அவன் பயன் படுத்தும் சாதனங்களை முதலில் அவன் மொழியில் பயன் செய்யும் நிலை உருவாக்குவோம்.

புதிதாக உங்கள் துறைகளில் நீங்கள் உண்டாக்கும் மாற்றங்களை தமிழ் செய்ய முயலுங்கள்.அறிவியல் தவிர்த்த மற்ற கலை, ஆராய்ச்சிகளை தமிழில் பெயர்த்தல் சிரமமாக இராது. அதை முதலில் செய்வோம். நம் அடுத்த தலைமுறை அடிப்படை அறிவை சிரமம் இல்லாமல், வெட்கம் இல்லாமல் தமிழில் பெற முயல்வோம்.
ஆங்கிலத்தைத் திறனுடன் படித்து அறிவைப் பருக்கும் வண்ணம் பழக்குவோம்.

4 comments:

தமிழரண் said...

வணக்கம்.
//புதிய கண்டுபிடிப்புகள் தமிழ் மூலம் வருவது கடினம். ஏனெனில் அதற்கென அடிப்படை அறிவு சொத்துகள் தமிழில் இல்லை.//

அப்படியானால் அடிப்படை அறிவு சொத்துகள் ஆங்கிலத்தில் மட்டும் எவ்வாறு தோன்றியது?? வானத்தில் இருந்து விழுந்ததோ? அல்லது தேவபாசை போல் அதுவாகத் தோன்றியதா??

அறிவியல் நாட்டாம் கொள்ளாது, வெறும் கலை, இன்பம் நுகர்ச்சியிலே துயில் கொண்டிருப்பது தமிழர்களின் குற்றமே அன்றி அது தமிழின் குற்றம் ஆகாது. அறிவியல் அறிவை அவரவர் அவர்தம் தாய்மொழியிலே பெறலாம். அவ்வாறு பெறுகின்றவர்களால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். ஆங்கிலேயர்கள் எல்லாம் எந்த மொழியைப் படித்துவிட்டு கண்டுபிடிப்புகள் செய்தனர்? அதை எந்த மொழியில் பதிவு செய்தனர்? சப்பானியர் எந்தமொழியில் படித்துவிட்டு இன்று இயவியல்(Robotic) துறையில் வெள்ளையர்களைப் பிச்சையெடுக்கும் அளவிற்கு வளர்ந்தனர் என்று உங்களால் சொல்ல முடியுமா??

'டெஸ்தோப்' என்பதற்குத் தமிழில் மொழிபெயர்த்தல் வீண் வேலையன்று. அது அம்மொழியாரின் கடமை. கலைசொற்களை வீண் வேலை என்றால், கூகலில் பல மொழிகள் இருக்கின்றனவே. பயனர்ப்பெயர், கடவுச்சொல் எனப்பல கலைசொற்கள் பல மொழிகளில் பல்வேறாகப் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே! கூகல் நிறுவனம் என்ன வெட்டி வேலை செய்கின்றதோ??? எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் மட்டும் விட்டுவிடலாமே???

தமிழரின் இயலாமைக்குத் தமிழை பலிகெடாவாக ஆக்காதீர்கள்.

நாளும் நலமே விளையட்டும் said...

திரு. தமிழ் அரண்,

தங்கள் கேள்விக்கு நன்றி. பதிவு நிச்சயம் தேவ பாசை பற்றியது அல்ல. இந்திய மொழி எவற்றிலும், ஏன் உலக மொழி எதனிலும் அது ஐரோபிய மொழி அல்லாத நிலையில் அறிவியல் கலை சொற்களை பெயர்த்தல் மிக சிரமம். பதிவிலே கூறியது போல் பயன் மொழி --(கடவு சொல்,) தமிழில் இயல்பாகக் கிடைக்கும். அறிவியலின் பயன்கள் நிச்சயம் தமிழில் பெயர்க்க இயலும் முயன்றால்.

ஆனால் இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள்?
கணிணியில் வியத்தகு முன்னேற்றம் பெற்றதாக சொல்லும் என்ன புதியவற்றை செய்துள்ளோம்? செய்தவற்றை தமிழ் செய்துள்ளோமா?

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

SUREஷ் (பழனியிலிருந்து) said...

வலைச்சரம் மூலமாக வந்தேன், ஸ்டார்ஜனுக்கு நன்றி