"ஹிந்து மதம்--அறிவியல் பூர்வமானது"

ரொம்ப நாளாவே நான் பார்க்கும் ,கேட்கும் இடங்களில் எல்லாம் ஒரு பேச்சு வரும்
"ஹிந்து மதம்--அறிவியல் பூர்வமானது"

1 . இப்படி சொல்றவங்களுக்கு அறிவியல்னா என்னனு நிச்சயமாத் தெரியுமா?
2. ஒரு வேளை நியூட்டன் விதி போன்ற விதிகளின் தொகுப்பு தான் அறிவியல் என நினைத்து இப்படி சொன்னால் இவர்கள் சொல்வது சரிதான்.

ஏனெனில் உலகில் உள்ள எல்லா மதங்களும் விதிகளின் தொகுப்பு தான். ஆனால் இவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அறிவியலின் எந்த விதியையும் யாரும் எந்த நேரத்திலும் கேள்வி கேட்டு சோதனை செய்து நிரூபிக்கலாம். அதற்கு, இந்த ஜாதியில் பிறந்து இப்படி வாழ்ந்து இருக்க வேண்டும் என்ற பிறப்பின் வழி தகுதி நிர்ணயம் இல்லை.

ஹிந்து மதத்தில் ஏன் பிறப்பின் மூலம் ஒருவனின் வாழ்வில் நிர்ணயம் செய்கிறீர்? அப்படி அதில் என்ன அறிவியல் இருக்கிறது?
அய்யனுக்குப்  பிறந்தா அய்யன்? பிறக்கப் போறது பெண் குழந்தையா ஆண் குழந்தையா என்பதையே ஜோசியக்காரனிடமும், குறி சொல்லுபவரிடமும்  கேட்டு வந்த மக்கள் நாம். ஆனால் பிறந்த குழந்தை நாட்டை ஆளும்!  நாமம் போடும்! இதெல்லாம் குலத்தின் படி. --இது அறிவியலா?

அப்படி என்ன அறிவியல் செய்துள்ளது ஹிந்து மதம்? வாழும் முறை அறிவியலா? மனவியல் மூலம் ஒருவனை " நீ இதற்கெல்லாம் பயன்பட மாட்டாய். தூய்மை இல்லாதவன், உனக்குப் பிறக்கும் குழந்தையும் உன்னைப் போல் தான், உன்னைப் போலவே அவனும் பயன் பட மாட்டன், எனக்கு பணி செய்து காலம் கடத்து "சொல்லி அடிமைப் படுத்தும் முறையா? ----இதுவா?

கைம்பெண்களை மூலையில் கிடத்தி வாழ்வின் எந்த நல்லக் காட்சியையும் காண ஒட்டாமல் செய்து அவர்களை வாழும்போது நெருப்பில் இட்டு வதைப்பது மட்டும் இல்லாமல் , தெரிந்தோ தெரியாமலோ தங்கள் எதிரில் தென்பட்டால் எதோ பேயைக் கண்டது போலவும், அதை விடக் கீழானதைக்  கண்டது போலவும் பேசி அவர்களை துரத்திய வாழ்வு-- அறிவியலா?

தன் வீட்டுப் பெண்கள் எங்கே தம்மை மிஞ்சி விடுவரோ என வீட்டின் அடுப்படியே அவர்களின் ராஜ்ஜியம் என வைத்ததும் அல்லாமல் அந்தப் பக்கமே போகாமல் இருந்து அந்தப் பெண்களையே தன் வீட்டாருக்கு செய்யும் பணியே, தன் வாழ்வின் லட்சியம் என்று நினைக்க வைத்த திறன்? அதிலும் ஓராயிரம் வகையில் இது செய், அது செய் என சொல்லி அடக்கி வைத்த நிலையோ?

அந்தப் பெண்களிலேயே பல வித பிரிவுகள் செய்து, அவர்களுக்கு இயற்கையிலேயே வரும் மாத விளக்கைக் கூட தீட்டு என்று சொல்லி வதைத்ததா? பெண்களுக்கு ஒய்வு கொடுக்கவே அந்த மாதிரி சொன்னோம் என்று சொன்னவர்கள் தங்கள் பெண்களிடம் அதைக் கூட புரிய வைக்க முயலாளது ஏன்?
கோவிலுக்கு அன்று சென்றால் எப்படி தீட்டு ஆகும்? கைம்பெண் வாழ்த்தக்கூடாது என சொல்லி அவளை
ஒரு அமங்கலமாக நோக்கச் செய்தது தான்---அறிவியலா?

கோவிலில் ஒரு சாரார் மட்டுமே இறையை தொட்டு வணங்கி மற்றவருக்கு இறைவனைக் கேட்டு அருள் பெற்றுத் தரும் , இறைவனுக்கும் மக்களுக்கும் ஒரு தரகராக ?, இதன் மூலம் தாங்களே கடவுளாகவும் உயர்ந்த ரகசியம்-- அறிவியலா?


கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் -என்றப் புத்தகத்தில் நிறைய பழக்கங்களை ஹிந்து மதத்தின் தத்துவங்களாக அணி செய்ய முயல்வார். அவருக்கே நிச்சயம் தெரியும் அதுவெல்லாம் ஹிந்து மதத் தத்துவங்கள் அல்ல, அந்த அந்தப் பகுதி மக்களின் பழக்கங்கள், (தீயவையும், நல்லவையும் கலந்தது)"

ஆனால் என்ன செய்வது? வேதத்தில் இருப்பதை சொன்னால் செருப்பால் அடிப்பார்கள்! எனவே மக்களின் வாழ்வியல் முறையே ஹிந்து மதம் என்று சொன்னால் ஹிந்து மதம் அறிவியல் பால் வந்து விடாதா என்ற ஒரு நப்பாசை தான்!

உலகில் இந்தியாவைத் தவிர ஹிந்து மதம் வேறு எங்கும் இருந்ததாக வரலாறு இல்லை. அங்கு வாழ்ந்த மக்கள் எல்லாம் என்ன இழிந்துப் போய்விட்டார்கள்? ஹிந்து மதமே அறிவியல் என்றால் உங்கள் சிந்தனையே  அறிவியல் என்றால், நீங்கள் மனித குலத்திற்கு என்ன அறிவியல் கருத்துகளை சொல்லிச் சென்றீர்கள்?

கேவலம் சடங்கு, சம்பிரதாயங்கள், மடி, மேல், கீழ் என வார்த்தை ஜாலங்கள் செய்து மக்களை அடிமை செய்து வாழும் வாழ்வு அறிவியல் என்றால் அறிவியல் என்ன நீங்கள் உலரும் வார்த்தைகளின் தொகுப்பு என்ற நினைப்பா?

இன்னமும் எத்தனை காலம் தான் நீங்களும் மயங்கி, மக்களையும்  மயக்கி வாழலாம் என்ற கனவு காண்கிறீர்கள்? உலகம் உருண்டை என்பதே தேறாமல் அதைப் பாயாக சுருட்டி மறைந்த மனிதர்களைப் பற்றியக் கதைகளின் தொகுப்பு தானே ஹிந்து மதம்!

ஹிந்து மதம் அறிவியல் என சொல்லும் அறிவாளிகள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஆங்கிலக் கல்வி படிப்பதை நிறுத்தி விட்டு ஹிந்து மதத் தத்துவங்களைப் படிக்க வைத்து அதன் மூலம் இந்த சமூகத்தில் அறிவியல் சிந்தனை மேலும் வளர வகை செய்யுங்கள். 

ஏற்கெனவே கொஞ்சம், கொஞ்சம் மயங்கித் திரியும் மக்களுக்கு ஜோதிடம் என்னும் அறிவியல் கற்றுத் தருகிறேன் என இணைய வகுப்புகள் நடத்தி அடுத்த தலைமுறைக்கும், எல்லோருக்கும் அறிவியல் சிந்தனை பரப்புகிறார்களே!, நிறையப் பேர் வாருங்கள்! அரும்பணி ஆற்ற! நம் ஹிந்து மதம் வாழ!

1 comments:

hindu said...

ஹிந்து மதத்தில் ஜாதி என்று கூறும் நீங்கள் , பிற மதங்களில் ஜாதி இல்லை என்று கூற முடியுமா ? உங்களுக்கு தெரியவில்லை என்றால் கூறுங்கள் , நான் உங்களுக்கு கூறுகிறேன் .

பிறகு , ஹிந்து மதத்தில் பெண்கள் மிகவும் அடிமை படுத்த படுவதாக கவலை கொள்கிறீர்கள் . இஸ்லாமில் பெண்களின் நிலை குறித்து உங்களால் கொஞ்சம் எழுத முடியுமா ?

ஹிந்து மதம் அறிவியல் பூர்வமான மதம் தான் . ஹிந்து மதத்தின் ஒவ்வொரு சம்பிரதாயங்களிலும் அறிவியல் உள்ளது . உங்களுக்கு விளக்கம் வேண்டுமானால் நான் கூறுகிறேன் .