deal or no deal?

வேளை வெட்டி இல்லாமல் நிறைய தமிழ் தொலைக் காட்சி தொடர்களைப் பார்க்கும் தமிழ் மக்களில் நானும் ஒருவன் என்பதை சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று வந்த டீலா நோ டீலா நிகழ்ச்சியும் பார்த்து விட்டேன். இந்த நிகழ்ச்சி என்னை கவர்வதற்கான காரணங்கள் சில.

௧. பணம் எனக்கேக் கிடைப்பதைப் போன்ற எண்ணம்.
௨. நிகழ்ச்சியில் தொலைக் காட்சி சார்பாக நிறுத்தப் படும் பெண்கள்
௩. போட்டியாளர் தன் முன்னால் இருக்கும் வாய்ப்புகள் கொண்டு முடிவு எடுக்கும் நிலை 
4. தங்களது அதிர்ஷ்ட எண் எனக் கூறிக்கொண்டு பெட்டி எடுத்து வைக்கும் போட்டியாளர்கள் சிறிது நேரத்தில் நம்பிக்கை இழப்பது!
5. ஒவ்வொரு தடவை பெரிய தொகை கொண்ட பெட்டி விளையாட்டில் இருந்து நீக்கப் படும்போதும் எதோ தன் பணமே தன் முன்னாலே திருடப் படுவது போல் கலங்க வைக்க முயலும் நிகழ்ச்சி நடத்துனர்.
6. இது போதும் என நினைக்கிறேன்

தமிழ் தொலைக் காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் தமிழில் பேசுவதும், நிகழ்ச்சி முக்கியக் கூறுகள் தமிழில் இருக்கும் என எதிர்பார்ப்பதும் நம் முன்னால் கடவுள் தோன்றுவார் என நாம் எதிர்பார்ப்பது போல் ஆகும். எனவே அதை விட்டு விடுவோம்.

ஆனால் தப்பித்தவறி போட்டியாளரோ, அவருடன் வந்தவரோ தமிழில் பேசி விட்டால் அவர்களைக் கிண்டல் செய்வார்கள் என்பதற்கு இன்றைய நிகழ்ச்சி ஒரு காட்டு !

அப்படி என்ன நடந்தது?


போட்டியாளருக்காக ஒரு நண்பர் "பெட்டி எண் ஏழு" என்று உதவி செய்தார். உடனே தொகுப்பாளர் என்ன language நீங்கள் பேசியது எனக் கேட்டக் கொடுமை/சிறப்பு ?
ஏனென்றால் இவர்கள் நாகரிகப் படி " please open the box no 7" என்று சொல்ல வேண்டுமாம்.
அதற்கு ஒருவர் விளக்கம் அளித்தார் அது சுத்தத் தமிழ் ... நன்றாக வீசுகிறது நம் தமிழ் மணம்!

2 comments:

ரோஸ்விக் said...

தொலைகாட்சியின் ஆட்சி மொழி ஆங்கிலம் தான். குறிப்பாக நம் தமிழ் நாட்டில். :-)

நாளும் நலமே விளையட்டும் said...

ரோஸ்விக்,
நீங்கள் சொல்வது சரி தான்,
ஆங்கிலம் பேசுவது பெருமையாக நினைத்துக் கொள்ளட்டும்.
ஆனால் தமிழ் பேசுவது என்னவோ செய்யக் கூடாத குற்றம் போல்?

தங்கள் உணர்வையே பொய்யாக்கி வாழ்வது தான் வாழ்வா?