ஒரு தடவை முட்டி, இன்னொரு தடவை முட்டாமல் விட்டால் கொம்பு முளைக்கும்!
இதை நம்பாதவர் கூட ஒரு வேளை நடந்து விட்டால்? என பயந்து இன்னொரு முறை முட்டிக் கொள்வது சிறு பிள்ளைத் தனம்? அல்லது குழந்தை மனம்?
நம் வாழ்வில் இது போல் எத்தனையோ செய்கிறோம். நமக்கு நன்றாகத் தெரியும்! சில நிகழ்வுகள் நடக்கவே முடியாது என்று! இருந்தாலும் நாம் விடுவதில்லை. சிறு பிள்ளைகள் போல் நடந்து விடுமோ என்று பயந்து நாம் நம்பமுடியா ஒன்றையும் நம்ப ஆரம்பித்து விடுகிறோம்!
நம் உலகை திட்டம் போட்டு ஒரு அதி புத்தி உள்ள ஒரு """""""", படைத்து இருக்குமா? இதற்கு விடை தேடுவது சரியா? என நான் இங்கு வினவ வரவில்லை.
அந்த அதி """""""" நம்மை ஆட்டி வைக்கிறான்! அவனை கால் கை பிடித்து கீழ் விழுந்து அழுதால் மனம் இரங்கி நம்மை ஆட்கொள்வான்? இது ?
இந்த """""""" தனக்கு வேண்டிய முகவர்கள் மூலம் அல்லது தம்மை உணர்ந்த அதி உன்னத ஆத்மாக்கள் மூலம் இந்த உலகில் வாழும் மனிதர்களை கடைத்தேற்றும் என நம்பி அவர்கள் காலில் விழும் நம் செயல்?
பிறப்பு முதல் நேரம் பார்த்து பார்த்து,,, ஒரு குறிப்பிட்ட அறிவார்ந்த? மனிதர் சொல்லும் எல்லாவற்றையும் நம்பி வாழும் நம் வாழ்வு சிறு பிள்ளைத் தனம் ?
சாமியார், சாமியாடி, பூசாரி, ஜோதிடர், பகவான்கள், இப்படி எல்லா மனிதர்களின் கூட்டு முயற்சியால் தான் நாம் வாழ்கிறோம் இறை அருள் பெற்று என இருப்பது?
முட்டினால் கொம்பு முளைக்கும் என நினைத்து இன்னொரு தடவை முட்டிக் கொள்வது வேடிக்கை தான் பார்ப்பது! அதையே நாம் தினம் தினம் செய்வது? நொடிக்கொரு முறை நாம் செய்யும் எல்லா செயலையும் இதே பயத்துடன் செய்வது ?
பரிணாமத்தை எந்த மதமும் ஏற்றுக் கொள்வது இல்லை. அது போல் எந்த கடவுளையும் மண்ணில் உள்ள உயிர்கள் நம்புவதில்லை( முட்டினால் கொம்பு முளைக்கும் என்று எண்ணும் நம்மைத் தவிர)
அறிவியல் எப்போதும் ஆய்ந்து சொல்லும் உண்மையை! ஆனால் அறிவு கொண்ட நாம் மூட எண்ணம் பரப்பும் சில விந்தை மனிதரின் வார்த்தைகள் அழகாய் இருக்கின்றன! ஒரு மயக்கம் தருகின்றன என்பதால் மயங்கி சாய்கிறோம்! அதை பூரணமாக நம்பி வாழ்கிறோம்!
கதைகள் எப்போதும் சுவை கொண்டவை! அதற்காக? கதையில் வரும் எல்லாம் நம் வாழ்வில் அடையலாம் என்பது மடமை இல்லையா?
நமது புராணங்கள் எல்லாமே நன்றாக புனையப் பட்ட கதைகள் என்று தெரிந்தும்? நாம் மயங்குவது எதற்கு?
எல்லா மனிதரும் ஒன்றே போல் சிந்திப்பது இல்லை. ஆனால் நமது சிந்தனை உண்மையின் வழிப்பட்டதாய் இருக்க வேண்டும்! ஒன்றும் ஒன்றும் எப்போதும் ஒன்று தான்!.. இல்லை என்று சொல்பவன் நிச்சயம் எங்கோ எதிலோ தவறு செய்து தான் இருக்க முடியும். நம் பிள்ளைகளையாவது முட்டினால் கொம்பு முளைக்கும்! என்பது நிச்சயமான ஒரு அழகு கொஞ்சும் மூடத் தனம்! என சொல்லி வாழ வைப்போம்.
2 comments:
enaku kadavul meethu nambikai iruku appadiyanal nan kulanthaiya??
நீங்கள் குழந்தையா? தெய்வமா? என்பது நீங்கள் நீங்கள் வாழும் வாழ்வைப் பொறுத்தது!
ஆனால் கடவுள் நம்பிக்கை நிச்சயம் குழந்தை தனம் தான் என்பது என் அறிவுக்கு எட்டியவரை சரி!
Post a Comment