//1902 ல் கந்தசாமிக் கவிராயர் இயற்றிய நூலை 2010 ல் கந்தசாமிக் கவுண்டர் தன்னுடைய பதிவில் ஏற்றுவது சாலப் பொருத்தமன்றோ! //
அதை நிரூபணம் செய்து உள்ளார் இந்தப் பெரியவர். சாதிப் பெயரை சேர்ப்பதை நம் மனத்தில் இருந்து அழிக்கப் பாடு பட்டனர் முன்னாள். இப்போது இவரைப் போன்று சிலர் செய்யும் செயலுக்கு நாம் என்ன சொல்வது? தனி மனிதனை சாடுதல் அறம் அல்ல என்பதன் காரணமாக இத்துடன்.
இப்படி சாதிப் பெயர்களை சேர்ப்பவர்களில் பெரும்பாலும் நம் சமூகத்தில் உயர்ந்த பிரிவு சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். மாறி வரும் சமூகத்தில் தம் உயர்வை எங்கே இழந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் இவர்கள் தூவும் தீய சிந்தனை எப்படிக் களையப் படும்?
இவர்கள் எப்போது மாறுவார்கள்? படிப்பு என்பது இதைக் கூட இவர்களுக்கு சொல்லித் தரவில்லையே!
மனிதனின் ஆறாவது அறிவு பகுத்து அறிதலே அன்றி மனிதர்களை பிரித்து வாழ செய்யும் சூழ்ச்சி காரணி அல்ல. இந்த உயர்ந்த சாதி எண்ணம் இவர்களின் குருதியில் ஊறி உள்ளது. இதை இன்னும் எத்தனை காலம் இவர்களின் தலைமுறை தாங்கி நிற்கும்?
சாதிகளை விட்டு வெளியே வாருங்கள். உங்களின் தோளோடு சேர கோடி மக்கள் உள்ளனர்.
0 comments:
Post a Comment