கடவுள் மனதிலேனும் வாழ முடியுமா? முடியாது! காரணம்-- மனித மனமும். பெருவெளியும் ஒன்றே! .. இது உபநிஷத்துக்களின் கூற்று.
ஒருவேளை கடவுள் ஒன்று இருந்தால் அது இந்தப் பெருவெளி தான்! யாரும் இந்தப் பெருவெளி இல்லை என்று சொல்ல முடியாது. இந்தப் பெருவெளியை எந்தக் கடவுளும் நடத்த வில்லை. இந்தப் பெருவெளியை , பெருவெளியே தன்னைத்தானே நடத்திக் கொண்டு இருக்கிறது.( காரணம் கணிதக் கோட்பாடுகளும், வடிவமைப்பு விதிகளும் தான்.) அதாவது அதனால் இதைவிட வேறாக இருக்க முடியாது. கணித விதிகளுக்குக் கட்டுப்பட்டது இந்த பெருவெளி!
இந்தப் பெருவெளியை நாம் கடவுளாகக் கொண்டால், நாம் இதிலிர்ருந்து மாற்றங்களையும், அழிபவகளையும் நீக்கி பேரு வெடிப்பு என்ற ஆரம்ப நிலையை எட்டுவோம். பெருவெடிப்புக்கு முன் இருந்தது வெற்று இடத்தில் இருந்த ஒரு பொருளே. அந்த பொருள் அதற்கு முன் இருந்த பெருவெளியின் சுருக்கமே!
வேதாந்தத்தின் கடவுளான பரமன் இந்தப் பெருவெளியே! விரிவுக்கும் சுருக்கத்துக்கும் மாறி மாறி சென்ற ஒன்றே.
The Chandogya
Upanishad says: All that exists in space come out of space, live in space, and dissolve in space in the end. What make them come out of, exist in, and go back to space? It is the mathematical or geometrical necessity of that space, which is called Prakriti or Karma. Physics is marching towards Vedanta.
எது ஒன்று இந்தப் பெருவெளியில் இருந்ததோ அது ஒன்று இந்தப் பெருவெளியில் இருந்தே வெளிக்கிளம்பி அதிலேயே வாழ்ந்து, அதிலேயே முடிவுற்றது. இப்படி எல்லாம் இது தன் நிலை மாறக் காரணம்!???
வேறு என்ன? நாம் படித்த வடிவியல் கோட்பாடு தான்! கணித விதிகள் தான்!!
மீண்டும் ஒரு முறை அறிய முயலுங்கள் "" நாம் வாழும் இந்த உலகு ஏன் உருண்டை வடிவம் உடையது""
ஏன் சதுரம், உருளை, செவ்வகம்>>>> இல்லை.
2 comments:
புரிகிறமாதிரி உள்ளது. அங்கும் இங்கும் சற்று குழம்புகிறது.
அம்ரு முறையும் ,மீண்டும் மீண்டும் முயன்றால் தெளிவாகிறது.
நல்ல முயற்சி.
தங்கள் வருகைக்கு நன்றி, சுக்கு-மாணிக்கம்
கடவுளின் தேவை- நாம் நம்மை அடிமைப் படுத்திக்கொள்ளவே!
Post a Comment