சென்னை சென்ட்ரல் நடை மேம்பாலம்

தேவை ஒரு நடை மேம்பாலம் !

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பயன் செய்த எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ரயில் நிலையம் செல்ல நாம் பயன்படுத்த வேண்டிய சுரங்க நடைபாதையின் சிரமம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாம் இரண்டு பேருந்து நிறுத்தங்களை அடையலாம். மேலும் இரண்டு ரயில் நிலையங்களை அடையலாம். ஆனால் இவற்றை அடைய நாம் குறைந்தது 100 படிகளையவது ஏறி இறங்க வேண்டும்.  ஆம் !  அப்படி தான் உள்ளது தற்போதைய நிலைமை.





பயன்படுத்துகின்ற அனைவரும் உடல் வலு கொண்டவர் இல்லை. இதைப்பற்றி மாநில அரசோ ! ரயில்வே துறையோ எந்த அக்கறையும் செலுத்துவதில்லை. இந்த நிலையில் அங்கு நடப்பவர்களுக்கு ஏற்ற சாய்தளம் கொண்ட மேம்பாலம் அமைத்தல் மிகவும் இன்றி அமையாதது. நிலம் பற்றி எந்த வசதிகுறைவும் இல்லை.  இந்த பகுதி நிலம் பெரும்பாலும் ரயில்வே அல்லது மாநில அரசுக்கு சொந்தமானது ஆகும்.

மக்களின் நலனில் அக்கறை கொள்ளும் மாநில மத்திய அரசுகள் நிச்சயம் இந்த திட்டம் செயல்வடிவம் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். இது மட்டும் இல்லாமல் எல்லா ரயில் நிலையங்களிலும் சாய்தளம் கொண்ட நடை பாலங்களை அமைக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும்.


சென்னை சென்ட்ரல் , பார்க், பார்க் டவுன், அருகமைந்த பேருந்து நிலையங்களை நாள்தோறும் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களின் நலன் காக்க இந்த திட்டம் மிகவும் இன்றியமையாதது.

மக்களின் நலன் காக்க அரசு முன் வருமா?

கேட்டால் கிடைக்கும் !



http://www.cablesankaronline.com/2012/08/blog-post_8.html




நான் AIRTELDTH  கடந்த மூன்று  வருடங்களாக பயன்படுத்தி  வருகிறேன் .  இந்த முறை advance  rental  scheme  என்று  செய்யலாம் என்று south  value  plus  standard  package  ஒரு வருடத்திற்கான பணம் செலுத்தி  activate  செய்ய சொல்லி அவர்களுக்கு போன்  செய்தேன். customer  care  மக்களும் இன்னும் ஆறு மணி நேரத்தில்  எனக்கு activate  செய்வதாக சொன்னார்கள் . இதன்  பயன் என்னவென்றால் 45 நாட்கள்  free  ஆகும் . காத்திருந்து  மறுபடியும் அழைத்தேன். இன்னும்  24 மணி  நேரத்தில்  செய்து  விடுவோம் என்றார்கள்.


 இப்படியே  ஒரு  வாரம்  கழிந்தது . ஒரு  நாள் டெல்லியில்  இருந்து  அழைத்து எனக்கு   HD செட் top box  உள்ளது . எனவே நான்  HD channel  உள்ள package  மட்டுமே எடுத்துக்  கொள்ள  முடியும்  என்றும்  விருப்பம் இல்லை என்றால் connection  நீக்கி  விடுகிறோம் என்று சொன்னார். நானும் சரி எனக்கு  எனது set top  box  விலையை திருப்பி கொடுத்து விடுங்கள் என்று சொன்னேன்.

set top  box airtel property  ஆகும். அதை  நான் அவர்களிடம் திருப்பி கொடுத்து விட வேண்டும் என்றும் அதற்கு பணம் எதுவும் திருப்பி  தர  மாட்டோம் என்று  சொன்னார் . நான்  எனது package HD channel இல்லாமல் கொடுத்தால்  ஏற்று கொள்வேன். இல்லையெனில் consumer  court  செல்வேன் என்று  சொன்னேன் .  அப்படி என்றாலும் செய்து கொள்ளுங்கள்  என்று வைத்து  விட்டார் .

 மறுபடியும் customer  care  தொடர்பு  கொண்டு பேசினேன் . அவர்கள்  பழைய மாதிரியே சொன்னார்கள்.  பின்னர்  சென்னை  consumer court முகவரிக்கு  complaint  எழுதி  அந்த  கடிதத்தை  nodalofficer  airtel க்கு அனுப்பி வைத்தேன். மறுபடியும்  டெல்லியில்   இருந்து அழைத்து நான் நிச்சயம் HD channel வாங்க  வேண்டும்  என்று வற்புறுத்தினார்கள்.

மீண்டும் customer  chooses  what  he  wants என  nodal officer க்கு   மெயில்  அனுப்பி வைத்தேன் . கடைசியில் அவர்கள்  எனது விருப்பம்  நிறைவேற்றினார்கள் . இதற்கு  எனக்கு  தேவைப்பட்ட நாட்கள் 16. சேமித்த  பணம் Rs 300. ஆனாலும் எனக்கு  வேண்டியதை பெற்றதில் எனக்கு  வெற்றி . 

யாருக்கு உங்கள் வோட்டு



நண்பர்களே!

தமிழகத்தில் போட்டியிடக் கூடிய கட்சிகளில் குறைந்த பட்சம் ஜன நாயகத்தையாவது கடைப்பிடிப்பது எந்த கட்சி?.

மந்திரிகளே காலில் விழுந்தால் தான் தங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று உள்ள ஒரு கட்சிக்கு வோட்டு போடுவது எந்த ஒரு மனிதனுக்கும்  சுயமரியாதை கேள்விகுறியாகக் கூடிய விஷயம்.

ஈழத் தமிழனுக்காக எந்த தேசிய கட்சியும் ஒன்றும் செய்து விடவில்லை. ஈழத்தமிழர்களுக்கு  எதிராக சட்ட சபையிலும் பொதுவெளியிலும் எதிரானக் கட்சி எதுவென்று நமக்கு எல்லோருக்கும் தெரியும். இவர்களை எல்லாம் மீறி தான் தன் பணியை செய்ய  வேண்டிய  கட்டாயம். 

சமூக நீதிக்காக போராடும் கட்சி  நிச்சயம் யார் என்று நீங்களே சொல்லுங்கள்!

பொது வெளியில் சோதிடம் பார்த்து ஆட்களை தேர்வு செய்து  அறிவிக்கும் கட்சி எது?

நம் வீட்டிலேயே சோதிடத்தை எதிர்த்து நாம் செயல்பட முயலும்போது ஒரு பெரிய கட்சி அதை நம்பியே செயல் படுவது எத்தனை ஆபத்து!

எங்கே போனது நமது பொது அறிவு?


பல கோடிகளை  செலவு செய்து கட்டிய கட்டிடங்களை எதோ ஒரு காரணத்துக்காக பாழ்படுத்தியது  சரியா?

ஏன்  இணையத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பல எதிர்ப்பு ?

சாதியைக் கட்டிக்காக்கவும், மதத்தை  காட்டி பயமுறுத்தவும் விளையும் கட்சிகளையும் அவர்களின் அடிப்பொடிகளையும் தோலுரித்தது யார்?

எந்த ஒரு மன சாட்சி உள்ள மனிதனும் அறிய வேண்டியது ஒன்று உண்டு!
எல்லா வகையிலும் சரியான ஒரு மனிதன் கற்பனையில் கூட இல்லை. அப்படி இருக்கும்போது எல்லா வகையிலும் சரியான கட்சி  யார்?

மனிதனை மனிதனாக சிந்திக்க வாய்ப்பளிக்கவும், தன் கருத்தை தயங்காமல் வெளியில் சொல்ல வாய்ப்பு தரும் கட்சி வேண்டாமா ?


சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

சோதிடம்


சோதிடர்களை நம்பி தன் மானத்தை இழந்த தமிழ் மக்களில் பலரில் நீங்கள் கீழ் காணும் செய்தி மிக வியப்பளிக்கும்.

ஆடைகளை துறந்து நாடு வீதியில் நள்ளிரவில் சென்று கோயில்களில் வழிபட்டால் தன் எண்ணம் நிறைந்த தன்னை நீங்கி ஓடிய காதலன் தனக்கு கிடைப்பான் அன்று சொன்ன பொய்யே வாழ்க்கையாக கொண்ட ஒரு கயமை குணம் கொண்ட சோதிடனை நம்பி   இவள் தெருவில் இறங்கி நடந்து இருக்கிறாள்?


சோதிடம் பொய் என்று நாளும் எத்தனை தடவை சொல்லி கத்தினாலும் அது அறிவியல் என்று காசு பார்க்கும் மக்களின் குயுக்தியால் தம் வாழ்க்கை சீரழிந்த  மக்களைக் கண்டேனும் நாம் திருந்தக் கூடாதா?

என் செயல் படி தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று என்னும் குறுகிய சிந்தனை கொண்ட மனம் தான் இவற்றுக்கு எல்லாம் காரணம்! எஹ்டையும் ஏற்றுக் கொண்டு தம் வாழ்வை மிக சிறப்பாக நடத்தி சென்ற எத்தனையோ மனிதர் வாழ்ந்த இவ்வுலகில் இப்படியும் மனிதர்கள்! 


இந்த பெண் படித்து பயன். தன் அறியாமை நீக்கும் கல்வியில் காணாத உண்மையை இந்த சோதிடனின் வாக்கில் கண்டு விட்ட பைத்தியம் தான் இவள்!

காதலனை அடைவதற்காய் நிர்வாணமாய் கோயில்களுக்கு அலைந்த பெண்

ஓடம் கரையினிலே!

வாழ்க்கை!

எங்கு போய் எப்போது நிற்கும் என அறிய
முடியாத ஒரு பயணம்! 

துவங்கியதும் சில -நேரம், எடுத்த அடி வைக்கும் முன்னே
சில நேரம்!

இந்த பயணத்தின் முடிவில் என்ன இருக்கிறது? 
எதை நோக்கியது இந்த பயணம்?

நோயில்,விபத்தில்,பொறாமையில், எனப் பல காரணங்கள் 
பயணம் -விடுபட!

பயணத்தை முடித்தவர் யார்? பயணம் இந்த திசை தான் என அறிந்து
பயணித்தவர் தான் யார்?

எங்கேனும் ஒரு வழிகாட்டி நமக்கு வழிகாட்டும், திசைகள் பல!

குறிக்கோள் ஏதேனும் உண்டா நம் பயணத்திற்கு?
மாறிய குறிக்கோள்கள் எத்தனை என்று கணக்கில் வைக்க முடியுமா?

வீழும் நிலையில் இருக்கும் பலரை விடுத்து வேகமாக நகர்ந்து விட்டோம்!
நாம் வீழும்போது நம்மை கை கொடுத்து காப்பவர் யார்?

தங்கும் மடம் நிறைய வழி நெடுகும்!
அவை நம் பயணத்தை தள்ளிப் போடவா? இளைப்பாறவா?
அல்லது அந்த மடங்கள் தான் நமது பயணத்தின் இலக்கா?


இறந்து விட வேண்டும் !

பட்டினத்தார்  போல் என் மனம் எதன் மீதும் பற்று வைக்காமல் வாழ முடியுமா என்னால்?
இறப்பது நீண்ட தூக்கம் என்று சொல்லும் எல்லா மக்களும் தூங்குவது போல் மிக எளிதான ஒரு செயலாக இறப்பும் இருக்க ஒரு வழி சொன்னால் பரவாயில்லை!

இறப்பு என்பது தான் என்ன? 

இந்த உடலை விட்டு உயிர் நீங்குவதா? 
இந்த உடலில் உயிர் எங்கு உள்ளது? 
உயிர்மெய் எழுத்தில் உயிர் எங்கு உள்ளது?
எழுத்தில் உயிர் இல்லை என்பதைக் குறிக்க தான் புள்ளி வைத்து அடையாளம் செய்கிறோமே தவிர உயிர்மெய் எழுத்தில் உயிர் தனியாக, அல்லது கலந்து இருப்பதைக் குறிக்க எதுவும்  இல்லையே!

இயக்கம் இல்லாத உடலில் உயிர் இல்லை என்பதானால் ? இயக்கம் உள்ள எல்லாம் உயிர் கொண்டதா? சிந்தனை செய்யும் மனம் கொண்ட மனிதனுக்கு உயிர் இருக்கிறதா? பிற உயிர்களை நேசிக்கும் ஒருவனுக்கு இருக்கிறதா? உயிர்களை வெறுப்பவனுக்கா?
உயிர்களை வெறுப்பவனுக்கு உயிர் எதற்கு? வாழ்வியலையே எதிர்க்கும் சிந்தனை கொண்ட மனிதனுக்கு உயிர் இருப்பதன் பயன் என்ன?

இறந்து விட வேண்டும் என்று எண்ணுவது கோழைத் தனமா? அல்லது இறக்க துணிவு இல்லாததா? ஒருவேளை வேண்டும்போது எல்லாம் இறந்துவிட்டு மீண்டும் வேண்டும்போது பிறக்கமுடியுமானால் நம்மில் எத்தனை பேர் இது வரை செத்து செத்து விளையாடி இருப்பர்?

மனித மனம் ஏன் இறப்பைப் பற்றி சிந்திக்கிறது? நம்மை நேசிக்க யாரும் இல்லை என்றா? அல்லது இதுவரை தான் அன்பு காட்டிய ஒருவர் நம்மை புறக்கணிப்பதை தாள மாட்டாமையா? தனது இறப்பே தன்னை புறக்கணித்தவருக்கு  தான்  தரும் தண்டனை என்று நினைப்பது எந்த அளவில் சரி?

தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள நினைக்கும் மனதின் ஒரு போராட்டம் தான் தற்கொலையா? தான் அனுபவப்பட்டு அறியாத ஒன்றை ஏன் மனம் அடைய முனைகிறது தன்னால் மீண்டு வரமுடியாது என்று அறிந்தபின்னும்?

மானத்தின் பால் பற்று கொண்டு தன் மானத்துக்கு இழுக்கு வந்தபின்னால் வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர்நீத்த மனிதர்கள் நமக்கு சொல்ல முனைவது என்ன? இறந்து தன் இருப்பை உணர்த்தும் மாண்புடைய பெரியோர் பலர் வாழ்ந்த மண்ணில் தற்கொலை எண்ணி சிந்திக்கும் மனதை என்னவென்று சொல்வது? பல்லாயிரம் பேர் வாழும் இந்த மண்ணில் தனது வாழ்வை செம்மையாக வாழும் மனிதர்கள் எத்தனை  பேர்? அதில் எத்தனை பேர் எத்தனை முறை இறப்பை வேண்டி இருப்பர்?
 
பிறவற்றின் மீது பற்று இல்லாமல் வாழ்வது இறப்பை நோக்கிய பயணமா? அல்லது வாழ்வை நோக்கிய பயணமா? பற்று இல்லாத நிலையில் மனது எதையும் முழுமையாக நோக்குவது உண்மை தானே?  அப்படி எனில் அது முழுமையாக வாழும் வாழ்வாகுமா? அனுபவிப்பது வாழ்வா? தூர இருந்து பார்த்து உணர்வது வாழ்வா?

முழுமையான வாழ்வு என்பது எது? எப்போது மரணத்தை முழுமையாக மனது எதிர்கொள்ளும் பயமில்லாமல்?

இறப்பை நோக்கியதா? வாழ்வை நோக்கியதா? எனது இந்த சிந்தனை!
நான் சொல்ல முனைவது என்ன?


kaathalikka thodangivitten

காதலிக்கத் தொடங்கிவிட்டேன்!


அவளின் இதழ்களின் நடுவே தெரிந்த பற்களின்            
ஒளியில் கூசிய என் கண்களின் வழி புகுந்த அவளின் உருவம்
நிலைத்தது என் நெஞ்சுக்கூட்டில் (நினைவகத்தில்)  

உணர்வற்று நின்ற எந்தன் நிலை அறிந்த அவள் என்
அருகமர்ந்து என்னை சேர்த்தணைத்து உள்ளத்து அன்பெலாம்
ஒன்று  திரட்டி தந்தாள் ஒரு முத்தம் என் கன்னத்தில்!

அந்த முத்தத்தின் ஈரத்தில் என் உள்ளத்தில் பெற்ற புது உத்வேகத்தில்
அவளது இதழ் கவ்வி தேன் எடுத்தன எனது இதழ்கள்!
மலர்ந்த செந்தாமரை போன்ற அவளின் முகமலரின் பொலிந்த
அன்பினை எது கொண்டு நான் என்னுள் எடுத்துக் கொள்வேன்?

என் இதயத்தில் நிரம்பிய அன்பை முழுதும் அவளுக்கென்று சொல்லி
அவள்தரும் இனிய புன்சிரிப்பை விலையாகப் பெற்ற என் மனதில்
நிரம்பி வழியும் காதல் உணர்வை அவளின் மடியில் காணிக்கை ஆக்கி விட்டேன்!

என் கைகளில் சேர்ந்த அந்த மலர்ப் பூங்கொத்தின் நறுமணத்தை 
எப்படி முழுதும் அடைவேன் சிறிதும் மிச்சம் இல்லாமல்?
அவளின் சிறு நகைப்பில் இழந்தேனே என் வாழ்வின் வலி எல்லாம்!
அவளின் சிறு ஊடலில் தவித்தது என் மனம் ஆறாத்துயரில்!

பெருவெளியில் கடவுள்?

நமது பெருவெளியில் (பிரபஞ்சம்) கடவுள் இருக்க முடியாது! இது தான் ஸ்டீபென் ஹாகிங்க்ஸ் அவர்களின் The Grand டிசைன்  எனும் நூலில் தெரிவிக்கப்பட்ட கருத்து!
 இந்த பெருவெளியை உருவாக்குவதிலும், பேணுவதிலும் கடவுளின் தேவை ஒரு துளியும் இல்லை!
இது அறிவியலுக்கு ஏற்புடையதா? ஆம்! வேதாந்தத்துக்கு? ஆம்!
கீழே படியுங்கள்! 
உங்கள் கடவுள் உங்கள் மனதிலும் வாழ்வதற்கு வழி இல்லை!

நமது கோட்பாடான எல்லைக்கு அப்பாற்பட்ட எல்லைகள் அற்ற கடவுள் இல்லை என்பது தான் இப்போது நாம் பெற வேண்டிய தெளிவு! இந்த எல்லைகளுக்கு வெளி வாழும் கடவுள் வாழவே முடியாது! என்பது மிக உண்மை!

நாம் வாழும் இப்பெருவெளி எல்லைகள் அற்றது. ஒருவேளை இருந்தாலும் எல்லைக்கு அப்பால் என்ன என்பது உடனே எழும் கேள்வி! 
 
அது எதுவாக இருந்தாலும் அது இருக்க அங்கு ஒரு இடம் வேண்டும். அது வேறு ஒன்றும் அல்ல நமது பெருவெளியை எது தாங்குகிறதோ அதுவே அது! அதாவது நமது பெருவெளி எல்லைகள் அற்றது! எனவே கடவுள் இந்த பெருவெளியில் தான் இருந்தாக வேண்டும்!
 

இயற்பியலின்படி நமது பெருவெளியும் அதனுள் இருப்பதும் ஒரே பொருளால் ஆனது. இந்த ஒன்று தான் பெருவெடிப்பின்போது விரிவடைந்தது. அடர்த்தி வேறுபாடு காரணமாக சில பகுதி விரிவடையவில்லை. சில மிக பெரிதாக விரிந்தது. ஈர்ப்பு விசை காரணமாக அவை மேலும் விரிவடையாமல் அப்படி அப்படியே நிலைத்தன. எனவே, இந்த பெருவெளியில் உள்ளது எல்லாம் எதோ ஒன்றின் மாறுபட்ட வடிவ நிலைகளே! அதற்கு எந்த ஆற்றலும் இல்லை. ஒரு வேளை கடவுள் இருந்தால் இந்த மாறுபட்ட வடிவம் பெற்ற பொருளின் சிதைந்த ஒன்றாகத் தான் இருக்க இயலும். ஆகவே கடவுள் இந்த பெருவெளியில் இருக்க முடியாது. அதாவது அவர் இல்லை, இல்லவே இல்லை. 
 
 கடவுள் மனதிலேனும் வாழ முடியுமா? முடியாது! காரணம்-- மனித மனமும். பெருவெளியும் ஒன்றே! .. இது உபநிஷத்துக்களின் கூற்று.

 
ஒருவேளை கடவுள் ஒன்று இருந்தால் அது இந்தப் பெருவெளி தான்! யாரும் இந்தப் பெருவெளி இல்லை என்று சொல்ல முடியாது. இந்தப் பெருவெளியை எந்தக் கடவுளும் நடத்த வில்லை. இந்தப் பெருவெளியை , பெருவெளியே தன்னைத்தானே நடத்திக் கொண்டு இருக்கிறது.( காரணம் கணிதக் கோட்பாடுகளும், வடிவமைப்பு விதிகளும் தான்.) அதாவது அதனால் இதைவிட வேறாக இருக்க முடியாது. கணித விதிகளுக்குக் கட்டுப்பட்டது இந்த பெருவெளி! 
இந்தப் பெருவெளியை நாம் கடவுளாகக் கொண்டால், நாம் இதிலிர்ருந்து மாற்றங்களையும், அழிபவகளையும் நீக்கி பேரு வெடிப்பு என்ற ஆரம்ப நிலையை எட்டுவோம்.  பெருவெடிப்புக்கு முன் இருந்தது வெற்று இடத்தில் இருந்த ஒரு பொருளே. அந்த பொருள் அதற்கு முன் இருந்த பெருவெளியின் சுருக்கமே!
வேதாந்தத்தின் கடவுளான பரமன் இந்தப் பெருவெளியே! விரிவுக்கும் சுருக்கத்துக்கும் மாறி மாறி சென்ற ஒன்றே.
  The Chandogya Upanishad says: All that exists in space come out of space, live in space, and dissolve in space in the end. What make them come out of, exist in, and go back to space? It is the mathematical or geometrical necessity of that space, which is called Prakriti or Karma. Physics is marching towards Vedanta.
எது ஒன்று இந்தப் பெருவெளியில் இருந்ததோ அது ஒன்று இந்தப் பெருவெளியில் இருந்தே வெளிக்கிளம்பி அதிலேயே வாழ்ந்து, அதிலேயே முடிவுற்றது. இப்படி எல்லாம் இது தன் நிலை மாறக் காரணம்!???
 
வேறு  என்ன? நாம் படித்த வடிவியல் கோட்பாடு தான்! கணித விதிகள் தான்!!
மீண்டும் ஒரு முறை அறிய முயலுங்கள் "" நாம் வாழும் இந்த உலகு ஏன் உருண்டை வடிவம் உடையது"" 


ஏன் சதுரம், உருளை, செவ்வகம்>>>> இல்லை.






புனேவிலிருந்து சென்னைக்கு டிக்கெட் வாங்கி கொடுங்க அப்பு!

நானும் ரெண்டு நாளா எல்லா ஆன்லைன் தளங்கள் மூலமும் தட்கல் டிக்கெட் முயற்சி செய்து பார்கிறேன்!

irctc தவிர மத்த தளம் எல்லாம் 9 மணிக்கு தான் தட்கல் தருமாம்!

irctc  ஒவ்வொரு கிளிக்கும் சர்வீஸ் unavailable  503  வருது. சரியாய் 8 :15 க்கு எல்லாம் வித்து போய்டுது?

railway மக்களே இது உங்களுக்கு ஞாயமா? ஏம்பா  மக்காளகிய நாங்களும் பணம் கொடுத்து தானே வாங்கறோம்!
முன்பதிவு நிலையத்திலயும் டிக்கெட் வாங்க முடியாது! ஆன்லைன் மூலமும் நீங்க ஒழுங்கா டிக்கெட் விக்க மாட்டிங்க!

கம்முனு எல்லாத்தையும் இழுத்து மூடிட்டு உங்களுக்கு வேண்டிய மக்களுக்கு மட்டுமே டிக்கெட்டுன்னு எழுதி வைச்சிடுங்க சாமிகளா! அது என்னமோ agent  மட்டும் மிக சரியா டிக்கெட் புக் பண்ண முடியுது
இன்னைக்கு ஒவ்வொரு தடவை login  செய்து பார்க்கும்போது, காத்திருந்து டிக்கெட் புக் செய்யும் போது இருக்கைகள் எண்ணிக்கை மிக சரியா 50  குறையுது. சாதாரண நேரங்களில் இது போல் இந்த தளத்தில் காத்திருக்க தேவை இல்லை. இது நிச்சயம் சிஸ்டம் down  என்று சொல்லவும் முடியாது! வேண்டும் என்றே எதோ செய்து கொண்டு
இருக்கிறார்கள்?

பெயர் எல்லாம் எழுதி இமேஜ் கப்ச எழுதி எல்லாம் செய்து சரியா அந்த go கிளிக் மட்டும் செய்ய முடியல. சர்வீஸ் unavailable  என வந்துடுது! இது போல ஐந்து முறை மேல் செய்து விட்டேன்!  எங்கோ ! எதுவோ!

ஒன்னு செய்யலாம்! தீபாவளிக்கு யாரும் பயணம் செய்யக்கூடாது? என சட்டம் போடலாம்!

  • பாப்போம்! இன்னம் ரெண்டு நாள் முயற்சி செய்வோம்! வெற்றி நம் பக்கம்?

சாதிப் பெயர்கள் !

சாதிப் பெயர்கள் இந்தியா  முழுவதும் உள்ள மக்கள் நீக்க முன் வர வேண்டும் என்று திரு அன்புமணி கட்டுரை எழுதினார்!
அதற்கு பதில் சொன்ன பெரும்பாலான மக்கள் அன்புமணிக்கு அந்த அருகதை இல்லை என்று தம் நிலை நின்றனர். யார் சொன்னார் என்பதை விட என்ன கருத்து என்பதை நிறுத்தி அதை சிந்தித்து அதன் பின் தங்கள் கருத்தை முன் வைப்பவர் நம்மில் அதிகம் இல்லை.

சாதிப் பெயர்கள் தங்கள் அடையாளங்களா?
சாதி தன் பெயரில் இருந்து நீங்கி விட்டால் சாதி சமூகம் விட்டு நீங்கி விடுமா? என்ற கேள்விகள் கேட்டு தம் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
தான் உயர் சாதி என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நிறைய பேர் தங்கள் பெயருடன் சாதியை சேர்த்துள்ளனர்! அதை சொல்வதிலும் பெரும் உவகை எய்துகின்றனர். 

என்னைப் போன்ற எத்தனையோ பேர் தங்கள் சாதி பெயர் சொல்லவே கூசவும் செய்கின்றனர், தங்கள் சாதி பல காலம் தாழ்த்தி வைக்கப் பட்ட காரணத்தால்! தம் பெயரிலேயே தங்கள் சாதி கொண்ட எல்லோரும் தம் சாதி மீது தம்மையும் அறியாமல் பரிவு கொண்டுள்ளனர் என்பது நம்மில் எல்லோருக்கும் தெரியும். எங்கோ சிலர் தம் பெற்றோர் கொண்ட பெயரின் காரணமாக இந்த சிலுவைகளை சுமந்து திரிகின்றனர். இவர்களேனும் தங்கள் பிள்ளைகளிடம் இந்த சிலுவைகளை தராமல் இருப்பார்களா?

தேவர்,பிள்ளை, நாடார், செட்டியார், சைவர், முதலியார், ஐயர், ஐயங்கார் என்று பலப்பல பெயர்களைத்தான் நாம் பார்த்திருப்போம். பறையர், சக்கிலியர் என்று எங்கேனும் கண்டு உள்ளோமா? ஏன்? 

இட ஒதுக்கீடு என்ற ஒன்றை காரணம் காட்டி எல்லா உயர் சாதி மக்களும் தங்கள் வாழ்வு நலிந்து விட்டதாக புலம்பித் திரிகின்றனர். ஒரே ஒரு கணம் சிந்தியுங்கள்! ஒரு வேளை நீங்கள் -- தாழ்ந்து போய் உள்ள சமுதாயத்தில் பிறந்து இருந்தால்? உங்கள் பிள்ளை உங்களை விட்டு காணாமல் போய் யாரோ ஒரு தாழ் சாதி குடும்பத்தை அண்டி இருந்தால்?

விட்டு விலகுவோமே சாதியை பெயரிலிருந்தேனும்!

கவுண்டர்---

//1902 ல் கந்தசாமிக் கவிராயர் இயற்றிய நூலை  2010 ல் கந்தசாமிக் கவுண்டர் தன்னுடைய பதிவில் ஏற்றுவது சாலப் பொருத்தமன்றோ! //
     

வேளாளர்  புராணம் என்ற ஒரு கதை திரு கந்தசாமி எழுதி வருகிறார். இதன் முதல் பகுதியிலேயே நான் சொல்லி இருந்தேன். சாதிப் பித்து தான் எழுத வைக்கிறது என்ற கருத்தை ஒட்டி!

அதை நிரூபணம் செய்து உள்ளார் இந்தப் பெரியவர். சாதிப் பெயரை சேர்ப்பதை நம் மனத்தில் இருந்து அழிக்கப் பாடு பட்டனர் முன்னாள். இப்போது இவரைப் போன்று சிலர் செய்யும் செயலுக்கு நாம் என்ன சொல்வது? தனி மனிதனை சாடுதல் அறம் அல்ல என்பதன் காரணமாக இத்துடன். 

இப்படி சாதிப் பெயர்களை சேர்ப்பவர்களில் பெரும்பாலும் நம் சமூகத்தில் உயர்ந்த பிரிவு சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். மாறி வரும் சமூகத்தில் தம் உயர்வை எங்கே இழந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் இவர்கள் தூவும் தீய சிந்தனை எப்படிக் களையப் படும்? 

இவர்கள் எப்போது மாறுவார்கள்? படிப்பு என்பது இதைக் கூட இவர்களுக்கு சொல்லித் தரவில்லையே!

மனிதனின்  ஆறாவது அறிவு பகுத்து அறிதலே அன்றி மனிதர்களை பிரித்து வாழ செய்யும் சூழ்ச்சி காரணி அல்ல. இந்த உயர்ந்த சாதி எண்ணம் இவர்களின் குருதியில் ஊறி உள்ளது. இதை இன்னும் எத்தனை காலம் இவர்களின் தலைமுறை தாங்கி நிற்கும்?

சாதிகளை விட்டு வெளியே வாருங்கள். உங்களின் தோளோடு சேர கோடி மக்கள் உள்ளனர்.






எழுதுவது யாருக்கு?

நாளும் பல பல செய்திகளை சுமந்து வருகின்றன வலைப் பதிவுகள். ஒவ்வொரு பதிவும் பல சிந்தனைகளின் தொகுப்பாகவோ, சீரியக் கருத்துகளின் வெளிப்பாடாகவோ வெளி வருகிறது.
தமிழ் வலைப் பதிவுகள் பல வகையான பொருட்களை மையமாகக் கொண்டு எழுதப் படுகின்றன.

பெரும்பாலானவை ஆன்மிகம், திரை, சமையல், சோதிடம் என்ற நான்கின் கீழ் அடங்கி விடும்.
கதை, கவிதை, கட்டுரை போன்ற புனைவுகள் சற்று எண்ணிக்கையில் சிறிதாயினும் அவையும் பலரைக் கவர்கின்றன. அனுபவம் என்ற பிரிவில் சில பதிவர்கள் தங்கள் நிகழ்வுகளைப்  பகிர்கின்றனர். 

மிகச் சிலர் அறிவியல், அதை ஒட்டிய பரிணாமம், மேலும் நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டும் கருத்தாக்கங்களை முன் வைக்கின்றனர். பணம் பண்ணும் வழியாகவும் சிலர் தங்கள் பதிவுகளை செய்கின்றனர். இவற்றுள் சிலர் சோதிடத்தை இந்திய அறிவியலின் பரிணாமமாக முன்னுரைக்கின்றனர்.

ஹோமாபதியை witchcraft  என்று சொல்ல முடிந்தது ஆங்கில மருத்துவர்களால்.  நம்மால் சோதிடத்தை மூடத்தனத்தின் அடையாளமாகப்  புரிந்து கொள்ள முடியவில்லை.

சொல்ல வந்தது இவையல்ல. நாளும் பல்வேறுப்  பொருட்களில் தங்கள் கருத்துகளை வைக்கும் பதிவர்கள் எழுதும் தமிழைப் பிழையின்றி எழுத ஏன் முனையவில்லை? எதோ ரயில்ப் பிடிக்கப் போவது போல் மிக மிக அவசரத்துடன் எழுதுவது போல் எழுதிச் செல்கின்றனர். நாம் எழுதியதை நிச்சயம் நாமாக அழிக்காதவரை நீண்டகாலம் அது இந்த வலை உலகில் வலம் வரும். நம் சிந்தனைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும் எழுதுவதைத் திறனுடன் பிழையின்றி எழுதுவோமே! நானும் முயன்று பிழை இன்றி தான் எழுத விளைகிறேன்.

வடமொழிக் கலப்பு இல்லாமல் எழுதப் பழகுவோம் நாம்.  சில  கட்டுரைகளைப் படிக்கும் போது ஏன் அதைக் கிளிக்கினோம் (எழுத்துப் பிழைகள்) என்ற கேள்வி வருகிறது. சிலவற்றைப் படிக்கும்போது நாமும் பிழையின்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.  திராவிட மொழிகளில் தமிழைத் தவிர மற்றவை வடமொழி ஆதிக்கத்துக்கு உட்பட்டு விட்டன.  நாமாவது நம்மைத் தனித்து நிறுத்தி உயர்வோம்.  தமிழைத் தமிழிலேயே எழுதுவோம்.



நாளும் பல்வேறு பணிகளுடன் விடியலில் எழும் நாம் அந்த நாளின் முடிவில் நாம் முயன்ற அளவு செய்த பணிகளை நிறைவு செய்தோமா என்று எண்ணி சாய்ப்போம் தலையை!

முட்டினால் கொம்பு முளைக்கும்?

ஒரு  தடவை  முட்டி, இன்னொரு தடவை முட்டாமல் விட்டால் கொம்பு முளைக்கும்!
இதை நம்பாதவர் கூட ஒரு வேளை நடந்து விட்டால்? என பயந்து இன்னொரு முறை முட்டிக் கொள்வது சிறு பிள்ளைத் தனம்? அல்லது குழந்தை மனம்?

நம் வாழ்வில் இது போல் எத்தனையோ செய்கிறோம். நமக்கு நன்றாகத் தெரியும்! சில நிகழ்வுகள் நடக்கவே முடியாது என்று! இருந்தாலும் நாம் விடுவதில்லை. சிறு பிள்ளைகள் போல் நடந்து விடுமோ என்று பயந்து நாம் நம்பமுடியா ஒன்றையும் நம்ப ஆரம்பித்து விடுகிறோம்!

நம் உலகை திட்டம் போட்டு ஒரு அதி புத்தி உள்ள ஒரு """""""", படைத்து இருக்குமா? இதற்கு விடை தேடுவது சரியா? என நான் இங்கு வினவ வரவில்லை.

அந்த அதி """""""" நம்மை ஆட்டி வைக்கிறான்! அவனை கால் கை பிடித்து கீழ் விழுந்து அழுதால் மனம் இரங்கி நம்மை ஆட்கொள்வான்? இது ?

இந்த   """""""" தனக்கு வேண்டிய முகவர்கள் மூலம் அல்லது தம்மை உணர்ந்த அதி உன்னத ஆத்மாக்கள் மூலம் இந்த உலகில் வாழும் மனிதர்களை கடைத்தேற்றும் என நம்பி அவர்கள் காலில் விழும் நம் செயல்?

பிறப்பு முதல் நேரம் பார்த்து பார்த்து,,, ஒரு குறிப்பிட்ட அறிவார்ந்த? மனிதர் சொல்லும் எல்லாவற்றையும் நம்பி வாழும் நம் வாழ்வு  சிறு பிள்ளைத் தனம் ?

சாமியார், சாமியாடி, பூசாரி, ஜோதிடர், பகவான்கள், இப்படி எல்லா மனிதர்களின் கூட்டு முயற்சியால் தான் நாம் வாழ்கிறோம் இறை அருள் பெற்று என இருப்பது?

முட்டினால் கொம்பு முளைக்கும் என நினைத்து இன்னொரு தடவை முட்டிக் கொள்வது வேடிக்கை தான் பார்ப்பது! அதையே நாம் தினம் தினம் செய்வது? நொடிக்கொரு முறை நாம் செய்யும் எல்லா செயலையும் இதே பயத்துடன் செய்வது ?

பரிணாமத்தை எந்த மதமும் ஏற்றுக் கொள்வது இல்லை. அது போல் எந்த கடவுளையும் மண்ணில் உள்ள உயிர்கள் நம்புவதில்லை( முட்டினால் கொம்பு முளைக்கும் என்று எண்ணும் நம்மைத் தவிர)

அறிவியல் எப்போதும் ஆய்ந்து சொல்லும் உண்மையை! ஆனால் அறிவு கொண்ட நாம் மூட எண்ணம் பரப்பும் சில விந்தை மனிதரின் வார்த்தைகள் அழகாய் இருக்கின்றன! ஒரு மயக்கம் தருகின்றன என்பதால் மயங்கி சாய்கிறோம்! அதை பூரணமாக நம்பி வாழ்கிறோம்!

கதைகள் எப்போதும் சுவை கொண்டவை! அதற்காக? கதையில் வரும் எல்லாம் நம் வாழ்வில் அடையலாம் என்பது மடமை இல்லையா?

நமது புராணங்கள் எல்லாமே நன்றாக புனையப் பட்ட கதைகள் என்று தெரிந்தும்? நாம் மயங்குவது எதற்கு?

எல்லா மனிதரும் ஒன்றே போல் சிந்திப்பது இல்லை. ஆனால் நமது சிந்தனை உண்மையின் வழிப்பட்டதாய் இருக்க வேண்டும்! ஒன்றும் ஒன்றும் எப்போதும் ஒன்று தான்!.. இல்லை என்று சொல்பவன் நிச்சயம் எங்கோ எதிலோ தவறு செய்து தான் இருக்க முடியும்.  நம் பிள்ளைகளையாவது முட்டினால் கொம்பு முளைக்கும்! என்பது நிச்சயமான ஒரு அழகு கொஞ்சும் மூடத் தனம்! என சொல்லி வாழ வைப்போம்.

மனித உயிரின் விலை?




நம் சமூகத்தில் எல்லோரும் எதோ ஒரு கண்ணாடி அணிந்து கொண்டு தான் தம்மை சுற்றி உள்ள இந்த உலகை காண்கின்றனர்.
தாம் நினைப்பதே சரி! தம் எண்ணங்களே மேன்மையை நோக்கி செலுத்தும் கருவி என்றும் நினைகின்றோம்.
பிறரது கருத்தை எந்த வித சார்பு இல்லாமல் அணுகும் தன்மை நாம் இழந்து விட்டதன் அடையாளம் தான் நாம் பிறருடன் எந்த வித சிந்தனையும் செய்யாமல் உடனுக்கு உடன் விவாதம் செய்வது.  தம்மை முன்னிலை படுத்த முயலும் அறியாமை!

கீழே உள்ள குறும் படம் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. இருப்பினும் சென்று பாருங்கள். காவல் துறையில் பணி செய்யும் ஒரு அதிகாரி தான் முன்னரே கொண்ட ஒரு
கருத்தின் அடிப்படையில்  எதிராளியை எந்த வித இயல்பான காரணமும் இன்றி எதிராளியின் கூற்றின் உண்மைக் கருத்தை அறியாமல் அவர் செய்யும் செயலின் கேடு மிக எளிதில் விளங்கும் வண்ணம் காட்சி படுத்தப் பட்டுள்ளது.

ஒரு வேளை எதிராளி சொல்வது இவருக்கு ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில்?
சூழலின் காரணமே மனிதனை ஒரு முடிவுக்கு வரவழைக்கிறது. அதன் சரி, தவறு பற்றி அவன் அக்கறை கொள்வது இல்லை.  திறந்த மனதுடன் ஒரு மனிதன் செயல்படும்போது தான் அவன் பணி அவன் வாழும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சார்புடன் செய்யும் எந்த செயலும்?

தோட்டா  விலை என்ன?, 

வறண்ட நாட்கள்!

கண்ணே! நீ இல்லாத இந்த நாட்கள் என்னைத் தனியனாய் அலையச் செய்கின்றன. விழித்தெழுந்த உடன் உன் இருப்பை உணர்த்தும் உன் நடை கேளாத  எனது காதுகள் வலிக்கின்றன. அன்புடன் என்னை இழுத்து சென்று குளியலறையில் தள்ளும் நிலையன்றி என்னை நானே தள்ளி செல்லுதல் அத்தனை எளிதல்ல இப்போது.

குளித்து முடித்து வந்த உடன் என்னைக் கண்டு உன் தாமரை முகம் மலர புன்னகைப்பாய்! அது காணாமல் ஏன் கண்கள் நனைகின்றன?. உன் முகம் காணாமல் விடியலே உணர மறுக்கிறது உள்ளம்.  நான் போட்ட காப்பியை உன்னுடன் பகிர்ந்து அருந்தாமல் நானேப் பருகும் இந்த தனிமை  மிக கொடுமை.  நீ சமைத்து தரும் மணம் கமழும் பொங்கல் நான் சமைத்த  போது கழுநீரில் இட்ட கஞ்சியானது!  

உன் தோழிகள் உன்னைத் தொலைபேசியில் அழைத்த போது உன்னைக் காணாமல் வீடு முழுதும் தேடி அலுக்கின்றன கால்கள். உன் இருப்பே இல்லாமல் அலையும் இந்த நாட்கள்  நீ இந்த வீட்டில் இருந்தபோது எனக்கு அமைந்த வசந்தங்களை நினைவூட்டும் வறண்ட நாட்களாக்கி விட்டு சென்ற நீ எப்போது மீண்டும் வருவாய்?


உன்னைக் காணாமல்  வாடி நின்ற இந்த  நெஞ்சம் நீ வரும் வழி நோக்கி காத்திருக்கும்!

மதங்கள் மனிதனை ஆளலாமா--- ஐம்பதாவது இடுகை நோக்கி!

ஒவ்வொரு மத ஈடுபாடு கொண்டவரும் தன் மதத்தின் சிறப்பை மற்றவருக்கு விளக்க முனைவது சரியா?
இந்த கேள்விக்கு விடை நேரடியாக சொல்வது சிலருக்கு வருத்தம் தரும் நிச்சயம்.
அறிவியல் கருத்துகளை ஒரு மத நூல் சொல்கிறது என்பதற்காக மதம் உயர்ந்ததாகிவிடுமா?



அது சரி இது வரை எந்த மத நூல் அறிவியல் சொல்லி இருக்கிறது எனக் கேட்பவர்கள் மத நூலை துருவி துருவி தேடி மக்களைக்  கவர முனையும் அன்பு பதிவர்களிடம் சென்று கேளுங்கள் வண்டி, வண்டியாக சொல்வார்.

டார்வின் கொள்கை ஒன்று இருக்கிறது. அது நிரூபணம் செய்யப்பட்டது/ உயிரியலின் அடிப்படையே அதன் மீது தான் என ஏற்றுக் கொள்ள மறுக்கும் கொள்கையின் மீது கட்டப் பட்ட மத நூல்களில் அறிவியல் கருத்து இருக்கிறது என்று தேடும்  மனிதர் கடையில் சென்று சில நூறுகளில் கிடைக்கும் நல்ல அறிவு நூலை வாங்கிப் படித்தால் உண்மை விளங்கும் என அறியாரோ?

அறிவியல் என்பது என்ன? கேள்வியின் பதில்கள்  தானே? யார் யாரோ கேட்ட கேள்விகளின்  பயனை நாம் நுகர்ந்து கொண்டே இதை எல்லாம் நமக்கு நம் கடவுள் ஏற்கெனவே சொல்லி விட்டார் என்பது எத்தனை அறிவீனம்?

மத நூல் என்பது என்ன. நான் சொன்னது சத்தியம். நம்பு. நிச்சயம் நடக்கும் என சொல்லும் கண்மூடி மூட சிந்தனை தானே? இதுவரை எந்த மத தலைவனாவது உண்மை காண இது வழி என்று சொல்லி இருக்கிறார்களா? கேட்டால் கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்! எனும் தத்துவம்.

அதான் சொல்றவன் நிச்சயம் பார்த்திருக்க முடியாதுன்னு தெளிவா நீங்களே சொல்றிங்களே, அப்புறம் எதற்கு தெரு தெருவுக்கு பிரச்சாரம். எல்லா ஊடகங்களிலும்
எப்போதும் சொல்லி சொல்லி திரிகிறீர்கள்?. எங்கே சொல்லாமல் விட்டால் நமது வாழ்வு போய் விடும் என்ற பயம் தானே?

பெரியார் சொன்னார் மலத்தில் அரிசி தேடுவது போல்... மத நூல்களில் அறிவு இருக்கிறது என்பது என.  இந்த உண்மையும் நம்மில் பலருக்கு தெரியும். இருந்தாலும்??

கற்பனையிலேயே இருந்த நம்மை ஒளியின் வேகத்தை அறிய வைத்த அறிவியலின் துணை கொண்டே நாம் நம் அறிவை மூடும் சிந்தனைகளை வளர்த்து வருகிறோம் என்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது!

இறை தத்துவ நெறிகளைத் தேடும் மனிதர்களே, உங்கள் மன அமைதிக்கு வழி தேடும் மனிதர்களே, மறந்தும் பிறர் பொருள் மீது பற்று இல்லாமல் வாழ உங்களைப் பழக்கி கொண்டால் மனம் அமைதி பெற்று பாபா முதல், சாயா வரை கண்ட அமைதி நிலை நிச்சயம் உங்களை அடையும். அவர்கள் அமைதி கண்டார்களா என்பது வேறு விஷயம்!

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மனதில் நிச்சயம் நீங்கள் உண்மை என நம்புவது உண்மையாக இருக்க , பொய்யாக இருக்க வாய்ப்பு சம அளவு அது நிரூபணம் ஆகும் வரை!

ஐயோ! கடவுள் ஒரு வேளை இருந்துவிட்டால் நான் சொர்க்கம் போக வேண்டி விரதம் இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னால்? நான் பொறுப்பு அல்ல.

உணவு ,பண வீக்கம்-விலை வாசி நமக்கு ஏன் ?

http://www.luckylookonline.com/2010/03/blog-post_17.html

இந்தப்  பதிவில் சென்று பார்த்து இங்கு வரலாம். 

பண வீக்கம் என்ற அளவீடு தகுதிக்கு மீறி நம் கையை விட்டு எவ்வளவு அதிகம் செலவு என்பதன் அடிப்படையே. எந்த ஒரு நல ஆட்சியிலும் பண வீக்கம் 2 %க்கு  அதிகம் ஆகாமல் இருக்கும். இது வளர்ந்த நாடுகளில் சாத்தியம். இங்கு நான் சொன்ன பண வீக்க விகிதம் "நுகர்வோர் உணவுப் பொருள்" விகிதம். உலகில் பண வீக்கம் கணக்கிடுவதும் நம் நாட்டில் கணக்கிடுவதும் மாறு பட்டது.  இந்தியாவில் மொத்த கொள்முதல் விலைப் பண வீக்கம், சில்லறை விலைப் பண வீக்கம் என இரு வகை உண்டு. இரண்டுமே இப்போது இரட்டை இலக்கத்தில் நம் நாட்டில்.  நம் நாட்டு "நுகர்வோர் உணவுப் பொருள்" விலைக் குறியீடு 18% தாண்டி  விட்டது. சிலக் குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் 50%  தாண்டி.  

இதே அளவில் வருமானம் உயர்ந்திருந்தால் இந்த எண் நம் கணக்கில் வந்திருக்காது. பண வீக்கமும் , வைப்பு நிதி வட்டிக்கும் தொடர்பு செய்து பார்த்தாலும் எளிதில் விளங்கும் நம் வருமானம் எங்கோ கரைகிறது என.

இரு வருடம் முன் நான் 100 மூட்டை அரிசி வாங்கும் பணம் வங்கியில் இட்டு இருந்தால் இன்று நான் அறுபது மூட்டை தான் வாங்க முடியும்?
அதாவது என் பணம் என் கை விட்டு போய் விட்டது. அதே பணம் கொண்டு நான் இந்த அரிசி மூட்டை வாங்கி பதப் படுத்தி வைத்து இன்று விற்று இருந்தால்?
இது தான் பெரிய பெரிய நிறுவனங்கள் செய்வது. பொருள் அதிகம் கிடைக்கும்போது வாங்கி பதுக்கி (அரசு கணக்கு கேட்கும் எவ்வளவு கையிருப்பு என, இவர்கள் பொய்த் தகவல் சொல்லி விடுவர்) அதன் தேவை மிக அதிகம் ஆகும்போது விற்பது. இதை அரசு கை கட்டி வேடிக்கை பார்ப்பது. சில நேரங்களில் அரசே அளவுக்கு அதிகமாக வைத்துக் கொள்ள சட்டம் இயற்றும்.

பங்கு வணிகத்தில் இந்த பணம் இட்டு இருந்தாலும் இதே நிலை தான் ஏற்பட்டு இருக்கும். கொஞ்சம் இழப்பாக  இருந்தாலும் அது இழப்பே. அதாவது எல்லா இனங்களிலும் பங்கு பரிமாற்றம் 20% அதிகமாக
இலாபம் ஈட்டுவதில்லை. எனவே வருமானம் அல்ல. பங்கு வணிகம் பொறுத்தே நிறுவனங்களின் வருமானம். எப்படி  நிறுவனங்கள் வருமான உயர்வு அளிக்க முடியும்? அதாவது பெரும்பாலான மக்களின் வருமானம் கடந்த இரு ஆண்டுகளாக அதிகம் உயர வில்லை. அதே சமயம் பண வீக்கம் அதிகமாகிறது. அதாவது அவர்களின் அன்றாட செலவு அதிகமாகிறது. இது நிச்சயம் பொது மக்களை பாதிக்கும் விஷயம். அவனது எதிர்கால சேமிப்பு குறைவது மட்டும் இல்லாமல், அவனது சேமிப்பின் மதிப்பும் பாதாளம் செல்லும்.

உண்மை சொல்லப் போனால் நம் அரசின் கையால் ஆகா செயலே இந்த பிரச்னைக்கு காரணம். தங்கள் கையிருப்பில் நிறைய தானியம் இருந்தும் விலை ஏற்றம் சாத்தியமாகும் அளவு இருக்கிறது. எந்தப் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது? எனவும் தெரிய வில்லை. அரசு online trading கட்டாயம் தடை செய்ய வேண்டும். மேலும் ஊக வணிகம் தடை செய்யப் பட வேண்டும். நாளிக்குப் பொறக்கப் போற பிள்ளைக்கு இன்னைக்கே பேர் வைக்கறது தான் ஊக வணிகம் என்பது நீங்கள் அறிவீர். ஊக வணிகமே தேவை இல்லாத தேவையை உருவாக்கி பொருளின் விலை ஏற  காரணமாகிறது. பஞ்சாபில் விளையும் கோதுமைக்கு இங்கு இருந்தே விலை நிர்ணயிப்பது. இதன் மூலம் தேவை இல்லா போட்டி உருவாக்கி விலை உயரச் செய்வது. அந்த விலை உயர்வையும் விவசாயி பெற விடாமல் தாங்களே அனுபவிப்பது தானே ஊக நிறுவனங்களின் செயல்பாடு?

நேற்று வரை மளிகைக் கடை வைத்து தம் ஊரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு விற்பனை செய்த கடைக் காரனை துரத்தி விட்டு புதிய புதிய வணிக வளாகங்கள் உருவாக்கி விலைகளைத் தாங்களே நிர்ணயம் செய்யும் பெரிய பெரிய நிறுவனங்களினால் தெருவில் நின்ற இவர்களின் நலன் காக்க முனையாத அரசு? தெருவில் அலைந்து ஐந்து ருபாய் கீரைக் கட்டை  பேரம் காரணமாக மூன்று ரூபாய்க்கு விற்று விட்டு வீடு சேரும் மூதாட்டியின் இரவு உணவு என்ன? தமிழ் நாடு அரசின் ஒரு ரூபாய் அரிசி சோறு தானே?

நித்தி , சித்தி , ஹுசைன்

நித்தியப் பத்தி பத்திரிக்கைக் காரங்க எழுதிக் காசப் பார்கிராங்கனு சொல்லிக் கிட்டே சில பேர் இடுகை இட்டு பெரும் பேர் சம்பாதிக்கிறாங்க.
நம்ம இடுகை "தமிலிஷ் போபுலர்" அப்படின்னு ரெண்டு நாளைக்கு இருக்கணும்னு நினைச்சா நித்தி பத்தி அவதூரா ஒரு இடுகை?  இல்லை, இல்லை,. காலம் மாறிப் போச்சு
  .

இப்பல்லாம் நித்திக்கு வக்காலத்து வாங்கறவங்களுக்கு தான் ஹிட்டு. என்ன அழகா கேகுராங்கயா கேள்வி?

நித்தி பத்தி யாராவது தப்பா சொல்றவங்க அவர் நடத்துற கிளாஸ் போய் வந்து இருக்கணுமாம்ல. அது தான் அடிப்படை தகுதியாம்? சொல்லிக் கொடுத்தது தப்புனாலும்
வாத்தியாரைக் குறை சொல்லக் கூடாதாம்!  நித்திக்கு இப்படி எல்லாம் சீடர்கள்? ஒரு வேளை நித்தி செஞ்ச ஆராய்ச்சி இவங்க சீடர்களும் செஞ்சுப் பார்துருப்பாங்க போல?


இதுக்கு நடுவால ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ....... ரவிசங்கர் ?? ஏங்க! இவர் பத்திய கதை வெளில வருலனா இவர் பெரியவரா? நித்திக்கு ஒண்ணுல மயக்கம்னா.. இவருக்கு ஒண்ணுல மயக்கம். நமக்கு தெரியற வரைக்கும் இவர் ஸ்ரீ ஸ்ரீ. ...........

கேவலம் பேருலயே இத்தனை ஸ்ரீ. அது என்னங்க விஷயம்? ஒரு ஸ்ரீ போட்டா போதாதா?
புகழ் தேடும் ஆட்கள் சூழ்ந்த இந்த சமூகத்தில் இப்படி தான் வாழணும்னு சொல்லித் தராராம்.

நித்தி மேட்டருக்கு வருவோம். எப்போதாவது இடுகை படிக்காலாம்னு வந்தா நித்திக்கு ஆள் சேர்க்கும் கூட்டம் எழுதுவது என்னை எழுத தூண்டி விட்டு விடுகிறது!

பீஸ் போன பல்ப வச்சுக்கிட்டு இன்னம் எவ்வளவு நாளைக்கு ஆடுவாங்கப் பாப்போம்.

சிலருக்கு நிம்மதி சரக்கடிகறது. சிலருக்கு நிம்மதி ஆப்பு அடிக்கிறது, சிலருக்கு நிம்மதி அடிச்ச ஆப்ப புடிங்கி விடறது. சிலருக்கு நிம்மதி இதை வச்சு பேர் வாங்கறது? 
 எப்படி நம்ம நிம்மதி உங்கள் சாய்ஸ்?


இன்னொரு செய்தி. ஹுசைன் பற்றிப் பேசணும்னா ஓவியம் பத்தி தெரிஞ்சிக்கிட்டு பேசணுமாம். ஆமாம். உண்மை தான், புகழ் சேர்த்தவன்  எது செஞ்சாலும்
அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அதே நம்ம ஆளுங்க செஞ்சா மக்க தொலைஞ்சாங்க.
இல்லனா பெரிய பெரிய மன நல மருத்துவர் எல்லாம் கூட நிப்பாரா? ஒரு வேளை மன நலம் சரி இல்லாத ஹுசைனுக்கு வைத்தியம் பார்க்கணும்னு சொல்லாம சொல்றாரோ?

கடவுள் இல்லடா மக்கா! போய் தொழில் செய்டானு சொன்னா பைத்தியக்காரன். அதுவே இவன் கும்புடுற கடவுள அசிங்கமா வரைரவனக் கொண்டு வந்து தலை மேல் வச்சு ஆடுவாங்க . கேட்டா மத நல்லிணக்கம், ஏலே? என்னாலே இது?

தலைப்புல சித்தி இருக்கு, இங்க இல்லையேன்னு பார்கறீங்களா? அது வரணும்னா யாராவது சாமியாரப் போய் பாருங்க கண்ணுங்களா! இல்லனா நம்ம வீட்டுத் தொலைகாட்சி பாருங்க. வரும் சித்தி


மக்களே? எனக்கும் கொஞ்சம் vote  பண்ணிட்டுப் போங்கோ. நாமளும் பிரபலம் ஆய்டுவோம்!

எலி ஏன் அம்மணமா ஓடுது?

josiyam?

மேலே இணைப்புக் கொடுத்தப் பதிவை சென்று பார்த்து வாருங்கள்!
என்னோட பதிவுக்கே எந்தப் பதிவரும் வரத்து இல்ல. இதுல நான் சொல்ற பதிவை பார்க்கவாப்  போறீங்க? இருந்தாலும் நான் சொல்கிறேன் .

ஜோசியர் சொல்றது உண்மையாப் பொய்யான்னு அலசி ஆராய்ந்து விட்டார் அந்த இடுகையில் .
உண்மை என்று வைத்துக் கொண்டு ஒரு விளக்கம்.
பொய் என வைத்து ஒரு விளக்கம்.
இறுதியில் வைத்தாரே ஒரு ஆப்பு. " ஜோசியர்கள் சிறந்த மனோதத்துவ நிபுணர்கள்! அவர்கள் உண்மை கசப்பாக இருந்தால் அதை மறைத்து உங்களை ஆற்றுபடுத்தும் நோக்குடன் சில செய்திகளை சொல்லி உங்களை நலம் பெற்று வாழ வைத்து உங்கள் எதிர்காலம் கணித்து தருவர்"?

ஜோதிடர்களை டாக்டர்களுடன் சரிசமமாக வைத்து வாதிடுகிறார் இங்கு.

அதாவது நீங்கள் வாழ்ந்த இத்தனை நாள் வாழ்க்கை , இனி நீங்கள் வாழப் போகும் வாழ்க்கை, அது மட்டும் இல்லாமல் உங்கள் ஆத்தா, அப்பன், வகையறா, கூடப் பொறந்த வகையறா, வாழப் போறவன், போரவ வகையறா நீங்க டாக்டர், engineer என  எல்லாவற்றையும் நீங்கள் பிறந்த அந்த நேரம் வைத்துக்  கணிக்கும் திறன் பெற்ற நல்ல(முழுமையான ) ஜோதிடர் இந்த உலகில் உள்ளார் என்று சொல்வது யார் காதில் சுற்றும் பூ?


அடுத்த இடுகையில் இதை விட மேலாக ஒன்று . அதை நான் இங்கு ஒட்டுகிறேன்.

"கோள்களின் நிலைக்கும் ஒருவனுடைய வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அந்த தொடர்பை கணித்து தனிமனிதனின் வாழ்க்கையின் எதிர்காலத்தைச் சொல்ல ஒரு நல்ல ஜோதிடனால் முடியும்" என்றும் முந்தைய பதிவில் பார்த்தோம். எனத் தொடங்கி அரை குறை ஜோதிடர் பற்றி பேசி அவர்களும் நமது நன்மைக்கே என வாதிட்டு அமைகிறார்.


இதற்கு மேல் இன்னொரு இடுகை இட்டு இந்த தொடரை நிறைவு செய்வாராம்.
இதை எல்லாம் விட வேடிக்கை தனது வலைப் பக்கத்தில் கீழ்க்கண்ட தொடரும் வைத்து உள்ளார்.

நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் முருகனை வழிபடுவோர்க்கே!



எலிக்கு யாரும் ஜோசியம் பார்ப்பார்களா?
நம் ஆட்கள் எதற்கும் ஜோசியம் பார்ப்பார்கள்.
நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவு பணம் என அவர்கள் கேட்பதை அனுப்பி ஒரு நேரம் குறித்துக் கொடுத்தால் போதும்.

பிறந்தது ஆணா, பெண்ணா என்பதையே நீங்கள் கொடுத்த நேரம் வைத்து சொல்லத் தெரியாதவர்கள் வேறு எது சொல்வார்கள் என்று பின்னால் போகிறீர்கள்?


ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டு இடுகைகள் எழுதுவோரை விட்டு விடலாம். ஆனால் இது போல் எழுதி என்னைப் போல் அரைகுறை நம்பிக்கை உள்ளோரை முழு மூடராக்கும் மனிதர்களை பார்த்து என்னால் சகிக்க முடியவில்லை.

இதைப் போல் நானும் எழுதுவேனோ எப்போதேனும் ?

குளியலறைக்குப் போய்ச் சந்தனச் சோப்புப் பூசி உடல் குளிர நீராடி வேறு நல்ல புடவை மாற்றித் திலகமிட்டுக் கொண்டாள் அவள். கண்களுக்கு ஆசையோடு மையும் தீட்டிக் கொண்டாள். அவள் அப்போது அந்த நள்ளிரவில் தனக்குத்தானே செய்து கொண்ட காரியங்களுக்கு ஏதோ ஓர் அர்த்தமிருக்கிறாற் போலவும் தோன்றியது. அவள் அப்போது தான் பரிபூரணமான சந்தோஷத்தோடு இருப்பதாகவும் உணர்ந்தாள். அப்படி உணர்ந்த மறுகணமே அதன் மறுபுறத்தில் பரிபூரணமான துக்கத்தையும் உணர்ந்து அநுபவித்தாள். இருளில் தட்டுத் தடுமாறித் தோட்டத்துக்கு ஓடிப்போய் அரைகுறையாக மலர்ந்திருந்த இரண்டொரு ரோஜாப் பூக்களையும், அடுக்கடுக்கான குடை மல்லிகைப் பூக்களையும் பறித்து ஈரக்கூந்தலை முடித்து அதில் சொருகிக் கொண்டு வந்தாள். ஏதோ நினைத்தவளாக உள்ளே போய்த் தேடி எடுத்து அரங்கேறிய நாளிலிருந்து தன் பட்டுப் பாதங்களை அலங்கரித்த அந்தச் சலங்கைகளையும் பாரதி எழுந்து விடுவாளோ என்ற பயத்தோடு காலில் ஓசைப்படாமல் அணிந்து கொண்டாள். இந்தப் பாழாய்ப் போன உலகத்துக்குப் புகழோடும், பெருமையோடும், தான் அறிமுகமாகக் கருவியாக இருந்த எல்லாவற்றையும் தன்னோடு சேர்த்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் போல ஓர் ஆசை அப்போது அவளுள்ளே எழுந்து தவித்தது. மேஜை விளக்கருகே கையைக் கொண்டு போய்ப் பட்டுப் புடவைத் தலைப்பினால் தன் விரலிலிருந்த மோதிரத்தைத் தேய்த்துப் பளபளக்கச் செய்த பின் அதன் பொன்னொளியில் தன் முகத்தைப் பார்த்த போது அந்த மோதிரத்தை அணிவித்த தெய்வத்தின் ஞாபகம் வந்து மனத்தைப் பிசைந்தது. அவளுடைய சலங்கையணிந்த பாதங்கள் உடனே எங்கோ புறப்பட்டுப் போய்விட வேண்டும் போல் துடிதுடித்தன. மைதீட்டிய விழிகள் யாரையோ பார்க்கப் பறந்தன. சிவந்த உதடுகள் யாரிடமோ புன்முறுவல் பூக்க நெகிழ்ந்தன. கமலக் கைகள் யாரையோ வணங்க வேண்டும் போலக் குவிந்து கூப்புவதற்கு முந்தின.