நெருப்பு நரி வாழ்விடம் -மொழி -நாடு

நீண்ட நாட்களாக 
நான் கூகிள் மூலம் நெருப்பு நரியில் தேடி ஒரு இணைய தளம் செல்லும்போது அந்த இணைய தளத்தின் மொழி நான் இருக்கும் நாட்டின் மொழியாகவே உள்ளது. உதாரணமாக ஒரு பிளாக்கர் பயனரின் profile இங்கிலீஷ் அல்லாத மொழியாகவே உள்ளது. எனது இணைய தொடர்பை வைத்து இந்த உலவிகள் நான் இருக்கும் பகுதி தொடர்பான மொழி கொண்ட இணைய தளம் தருவது என்னைப் போன்ற மொழி அறியாத மக்களுக்கு மிக்க துன்பம்.

இதை எப்படி சரி செய்வது என நான் பல இடங்களில் தேடி செய்த பரிகாரங்களும் பலனளிக்கவில்லை,

முதலில் கணிணி control panel  சென்று உங்கள் மொழி, நாடு மாற்றுங்கள் என்று ஒருவர் சொன்னார். செய்தேன் பலன் இல்லை,

google chrome  இதைப் போல் geoposition கொள்வது இல்லை என ஒரு நண்பர் சொன்னார். அங்கேயும் இதே தொல்லை,

நெருப்பு நரியில் தேடி அவர்கள்(mozilla) இணையத்தில் கொடுத்த செய்திபடி about:config சென்று சில மாற்றம் செய்தேன். பயன் இல்லை.

நான் விரும்பும் இணைய தளம் ஆங்கிலத்தில் இருந்தாலும் இவை வேற்று மொழியில் வருவதை எப்படி தடை செய்வது என என்னால் அறிய முடியவில்லை.

இதனை எப்படி சரி செய்வது என யாராவது சொல்லுங்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நெருப்பு நரி இப்படி தளத்தை மாற்றிக் கொடுத்தது அல்லாமல் இது வேறு மொழி ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து இந்த தளம் காண்பிக்கவா ? என கேட்கிறது. என்ன பதில் சொல்ல?

4 comments:

ஜிஎஸ்ஆர் said...

நண்பா எனக்கு தெரிந்த வழியை சொல்கிறேன் உங்களுக்கு சரியா வருமானு தெரியல இருந்தாலும் முயற்சி பண்னுங்க

Firefox ->Tools-> Option->Content->Choose (Language)

திறந்து உங்களுக்கு எந்த மொழி வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளவும்


வாழ்க வளமுடன்


என்றும் அன்புடன்
ஞானசேகர்

கிருஷ்ணா (Krishna) said...

நீங்கள் www.google.com/ncr ஐ ஒரு தடவை திறக்கவும். பிறகு உங்கள் உலாவியில், Remember History என்ற settings இருந்தால் அடுத்த தடவையும் சரியாக ஆங்கிலத்தில் திறக்கும்.

இல்லைஎன்றால் அந்த பக்கத்தை உங்கள் Homepage ஆக வைத்து விடுங்கள், நீங்கள் Do not remember history என்று வைத்திருந்தால்.

இதில் ncr என்பது No Country Redirect என்பதாகும்.

நாளும் நலமே விளையட்டும் said...

thiru கிருஷ்ணா,
நான் நீங்கள் சொன்னதை முயற்சித்து பார்க்கிறேன்.


திரு ஞானசேகர்,
தங்கள் குறிப்புக்கு நன்றி. ஆனால் இது பலன் அளிக்க வில்லை

நாளும் நலமே விளையட்டும் said...

திரு. கிருஷ்ணா,

நீங்கள் சொன்னதும் முயன்றேன். ஆனால் blogger போன்ற தளங்களை sign in செய்யாமல் திறந்தால் மொழி மாறி வருகிறது. geolocation option சரி செய்தால் தான் எல்லாம் சரியாகும். எப்படின்னு தெரியல