பெருவெளியில் கடவுள்?

நமது பெருவெளியில் (பிரபஞ்சம்) கடவுள் இருக்க முடியாது! இது தான் ஸ்டீபென் ஹாகிங்க்ஸ் அவர்களின் The Grand டிசைன்  எனும் நூலில் தெரிவிக்கப்பட்ட கருத்து!
 இந்த பெருவெளியை உருவாக்குவதிலும், பேணுவதிலும் கடவுளின் தேவை ஒரு துளியும் இல்லை!
இது அறிவியலுக்கு ஏற்புடையதா? ஆம்! வேதாந்தத்துக்கு? ஆம்!
கீழே படியுங்கள்! 
உங்கள் கடவுள் உங்கள் மனதிலும் வாழ்வதற்கு வழி இல்லை!

நமது கோட்பாடான எல்லைக்கு அப்பாற்பட்ட எல்லைகள் அற்ற கடவுள் இல்லை என்பது தான் இப்போது நாம் பெற வேண்டிய தெளிவு! இந்த எல்லைகளுக்கு வெளி வாழும் கடவுள் வாழவே முடியாது! என்பது மிக உண்மை!

நாம் வாழும் இப்பெருவெளி எல்லைகள் அற்றது. ஒருவேளை இருந்தாலும் எல்லைக்கு அப்பால் என்ன என்பது உடனே எழும் கேள்வி! 
 
அது எதுவாக இருந்தாலும் அது இருக்க அங்கு ஒரு இடம் வேண்டும். அது வேறு ஒன்றும் அல்ல நமது பெருவெளியை எது தாங்குகிறதோ அதுவே அது! அதாவது நமது பெருவெளி எல்லைகள் அற்றது! எனவே கடவுள் இந்த பெருவெளியில் தான் இருந்தாக வேண்டும்!
 

இயற்பியலின்படி நமது பெருவெளியும் அதனுள் இருப்பதும் ஒரே பொருளால் ஆனது. இந்த ஒன்று தான் பெருவெடிப்பின்போது விரிவடைந்தது. அடர்த்தி வேறுபாடு காரணமாக சில பகுதி விரிவடையவில்லை. சில மிக பெரிதாக விரிந்தது. ஈர்ப்பு விசை காரணமாக அவை மேலும் விரிவடையாமல் அப்படி அப்படியே நிலைத்தன. எனவே, இந்த பெருவெளியில் உள்ளது எல்லாம் எதோ ஒன்றின் மாறுபட்ட வடிவ நிலைகளே! அதற்கு எந்த ஆற்றலும் இல்லை. ஒரு வேளை கடவுள் இருந்தால் இந்த மாறுபட்ட வடிவம் பெற்ற பொருளின் சிதைந்த ஒன்றாகத் தான் இருக்க இயலும். ஆகவே கடவுள் இந்த பெருவெளியில் இருக்க முடியாது. அதாவது அவர் இல்லை, இல்லவே இல்லை. 
 
 கடவுள் மனதிலேனும் வாழ முடியுமா? முடியாது! காரணம்-- மனித மனமும். பெருவெளியும் ஒன்றே! .. இது உபநிஷத்துக்களின் கூற்று.

 
ஒருவேளை கடவுள் ஒன்று இருந்தால் அது இந்தப் பெருவெளி தான்! யாரும் இந்தப் பெருவெளி இல்லை என்று சொல்ல முடியாது. இந்தப் பெருவெளியை எந்தக் கடவுளும் நடத்த வில்லை. இந்தப் பெருவெளியை , பெருவெளியே தன்னைத்தானே நடத்திக் கொண்டு இருக்கிறது.( காரணம் கணிதக் கோட்பாடுகளும், வடிவமைப்பு விதிகளும் தான்.) அதாவது அதனால் இதைவிட வேறாக இருக்க முடியாது. கணித விதிகளுக்குக் கட்டுப்பட்டது இந்த பெருவெளி! 
இந்தப் பெருவெளியை நாம் கடவுளாகக் கொண்டால், நாம் இதிலிர்ருந்து மாற்றங்களையும், அழிபவகளையும் நீக்கி பேரு வெடிப்பு என்ற ஆரம்ப நிலையை எட்டுவோம்.  பெருவெடிப்புக்கு முன் இருந்தது வெற்று இடத்தில் இருந்த ஒரு பொருளே. அந்த பொருள் அதற்கு முன் இருந்த பெருவெளியின் சுருக்கமே!
வேதாந்தத்தின் கடவுளான பரமன் இந்தப் பெருவெளியே! விரிவுக்கும் சுருக்கத்துக்கும் மாறி மாறி சென்ற ஒன்றே.
  The Chandogya Upanishad says: All that exists in space come out of space, live in space, and dissolve in space in the end. What make them come out of, exist in, and go back to space? It is the mathematical or geometrical necessity of that space, which is called Prakriti or Karma. Physics is marching towards Vedanta.
எது ஒன்று இந்தப் பெருவெளியில் இருந்ததோ அது ஒன்று இந்தப் பெருவெளியில் இருந்தே வெளிக்கிளம்பி அதிலேயே வாழ்ந்து, அதிலேயே முடிவுற்றது. இப்படி எல்லாம் இது தன் நிலை மாறக் காரணம்!???
 
வேறு  என்ன? நாம் படித்த வடிவியல் கோட்பாடு தான்! கணித விதிகள் தான்!!
மீண்டும் ஒரு முறை அறிய முயலுங்கள் "" நாம் வாழும் இந்த உலகு ஏன் உருண்டை வடிவம் உடையது"" 


ஏன் சதுரம், உருளை, செவ்வகம்>>>> இல்லை.






புனேவிலிருந்து சென்னைக்கு டிக்கெட் வாங்கி கொடுங்க அப்பு!

நானும் ரெண்டு நாளா எல்லா ஆன்லைன் தளங்கள் மூலமும் தட்கல் டிக்கெட் முயற்சி செய்து பார்கிறேன்!

irctc தவிர மத்த தளம் எல்லாம் 9 மணிக்கு தான் தட்கல் தருமாம்!

irctc  ஒவ்வொரு கிளிக்கும் சர்வீஸ் unavailable  503  வருது. சரியாய் 8 :15 க்கு எல்லாம் வித்து போய்டுது?

railway மக்களே இது உங்களுக்கு ஞாயமா? ஏம்பா  மக்காளகிய நாங்களும் பணம் கொடுத்து தானே வாங்கறோம்!
முன்பதிவு நிலையத்திலயும் டிக்கெட் வாங்க முடியாது! ஆன்லைன் மூலமும் நீங்க ஒழுங்கா டிக்கெட் விக்க மாட்டிங்க!

கம்முனு எல்லாத்தையும் இழுத்து மூடிட்டு உங்களுக்கு வேண்டிய மக்களுக்கு மட்டுமே டிக்கெட்டுன்னு எழுதி வைச்சிடுங்க சாமிகளா! அது என்னமோ agent  மட்டும் மிக சரியா டிக்கெட் புக் பண்ண முடியுது
இன்னைக்கு ஒவ்வொரு தடவை login  செய்து பார்க்கும்போது, காத்திருந்து டிக்கெட் புக் செய்யும் போது இருக்கைகள் எண்ணிக்கை மிக சரியா 50  குறையுது. சாதாரண நேரங்களில் இது போல் இந்த தளத்தில் காத்திருக்க தேவை இல்லை. இது நிச்சயம் சிஸ்டம் down  என்று சொல்லவும் முடியாது! வேண்டும் என்றே எதோ செய்து கொண்டு
இருக்கிறார்கள்?

பெயர் எல்லாம் எழுதி இமேஜ் கப்ச எழுதி எல்லாம் செய்து சரியா அந்த go கிளிக் மட்டும் செய்ய முடியல. சர்வீஸ் unavailable  என வந்துடுது! இது போல ஐந்து முறை மேல் செய்து விட்டேன்!  எங்கோ ! எதுவோ!

ஒன்னு செய்யலாம்! தீபாவளிக்கு யாரும் பயணம் செய்யக்கூடாது? என சட்டம் போடலாம்!

  • பாப்போம்! இன்னம் ரெண்டு நாள் முயற்சி செய்வோம்! வெற்றி நம் பக்கம்?

சாதிப் பெயர்கள் !

சாதிப் பெயர்கள் இந்தியா  முழுவதும் உள்ள மக்கள் நீக்க முன் வர வேண்டும் என்று திரு அன்புமணி கட்டுரை எழுதினார்!
அதற்கு பதில் சொன்ன பெரும்பாலான மக்கள் அன்புமணிக்கு அந்த அருகதை இல்லை என்று தம் நிலை நின்றனர். யார் சொன்னார் என்பதை விட என்ன கருத்து என்பதை நிறுத்தி அதை சிந்தித்து அதன் பின் தங்கள் கருத்தை முன் வைப்பவர் நம்மில் அதிகம் இல்லை.

சாதிப் பெயர்கள் தங்கள் அடையாளங்களா?
சாதி தன் பெயரில் இருந்து நீங்கி விட்டால் சாதி சமூகம் விட்டு நீங்கி விடுமா? என்ற கேள்விகள் கேட்டு தம் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
தான் உயர் சாதி என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நிறைய பேர் தங்கள் பெயருடன் சாதியை சேர்த்துள்ளனர்! அதை சொல்வதிலும் பெரும் உவகை எய்துகின்றனர். 

என்னைப் போன்ற எத்தனையோ பேர் தங்கள் சாதி பெயர் சொல்லவே கூசவும் செய்கின்றனர், தங்கள் சாதி பல காலம் தாழ்த்தி வைக்கப் பட்ட காரணத்தால்! தம் பெயரிலேயே தங்கள் சாதி கொண்ட எல்லோரும் தம் சாதி மீது தம்மையும் அறியாமல் பரிவு கொண்டுள்ளனர் என்பது நம்மில் எல்லோருக்கும் தெரியும். எங்கோ சிலர் தம் பெற்றோர் கொண்ட பெயரின் காரணமாக இந்த சிலுவைகளை சுமந்து திரிகின்றனர். இவர்களேனும் தங்கள் பிள்ளைகளிடம் இந்த சிலுவைகளை தராமல் இருப்பார்களா?

தேவர்,பிள்ளை, நாடார், செட்டியார், சைவர், முதலியார், ஐயர், ஐயங்கார் என்று பலப்பல பெயர்களைத்தான் நாம் பார்த்திருப்போம். பறையர், சக்கிலியர் என்று எங்கேனும் கண்டு உள்ளோமா? ஏன்? 

இட ஒதுக்கீடு என்ற ஒன்றை காரணம் காட்டி எல்லா உயர் சாதி மக்களும் தங்கள் வாழ்வு நலிந்து விட்டதாக புலம்பித் திரிகின்றனர். ஒரே ஒரு கணம் சிந்தியுங்கள்! ஒரு வேளை நீங்கள் -- தாழ்ந்து போய் உள்ள சமுதாயத்தில் பிறந்து இருந்தால்? உங்கள் பிள்ளை உங்களை விட்டு காணாமல் போய் யாரோ ஒரு தாழ் சாதி குடும்பத்தை அண்டி இருந்தால்?

விட்டு விலகுவோமே சாதியை பெயரிலிருந்தேனும்!

கவுண்டர்---

//1902 ல் கந்தசாமிக் கவிராயர் இயற்றிய நூலை  2010 ல் கந்தசாமிக் கவுண்டர் தன்னுடைய பதிவில் ஏற்றுவது சாலப் பொருத்தமன்றோ! //
     

வேளாளர்  புராணம் என்ற ஒரு கதை திரு கந்தசாமி எழுதி வருகிறார். இதன் முதல் பகுதியிலேயே நான் சொல்லி இருந்தேன். சாதிப் பித்து தான் எழுத வைக்கிறது என்ற கருத்தை ஒட்டி!

அதை நிரூபணம் செய்து உள்ளார் இந்தப் பெரியவர். சாதிப் பெயரை சேர்ப்பதை நம் மனத்தில் இருந்து அழிக்கப் பாடு பட்டனர் முன்னாள். இப்போது இவரைப் போன்று சிலர் செய்யும் செயலுக்கு நாம் என்ன சொல்வது? தனி மனிதனை சாடுதல் அறம் அல்ல என்பதன் காரணமாக இத்துடன். 

இப்படி சாதிப் பெயர்களை சேர்ப்பவர்களில் பெரும்பாலும் நம் சமூகத்தில் உயர்ந்த பிரிவு சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். மாறி வரும் சமூகத்தில் தம் உயர்வை எங்கே இழந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் இவர்கள் தூவும் தீய சிந்தனை எப்படிக் களையப் படும்? 

இவர்கள் எப்போது மாறுவார்கள்? படிப்பு என்பது இதைக் கூட இவர்களுக்கு சொல்லித் தரவில்லையே!

மனிதனின்  ஆறாவது அறிவு பகுத்து அறிதலே அன்றி மனிதர்களை பிரித்து வாழ செய்யும் சூழ்ச்சி காரணி அல்ல. இந்த உயர்ந்த சாதி எண்ணம் இவர்களின் குருதியில் ஊறி உள்ளது. இதை இன்னும் எத்தனை காலம் இவர்களின் தலைமுறை தாங்கி நிற்கும்?

சாதிகளை விட்டு வெளியே வாருங்கள். உங்களின் தோளோடு சேர கோடி மக்கள் உள்ளனர்.






எழுதுவது யாருக்கு?

நாளும் பல பல செய்திகளை சுமந்து வருகின்றன வலைப் பதிவுகள். ஒவ்வொரு பதிவும் பல சிந்தனைகளின் தொகுப்பாகவோ, சீரியக் கருத்துகளின் வெளிப்பாடாகவோ வெளி வருகிறது.
தமிழ் வலைப் பதிவுகள் பல வகையான பொருட்களை மையமாகக் கொண்டு எழுதப் படுகின்றன.

பெரும்பாலானவை ஆன்மிகம், திரை, சமையல், சோதிடம் என்ற நான்கின் கீழ் அடங்கி விடும்.
கதை, கவிதை, கட்டுரை போன்ற புனைவுகள் சற்று எண்ணிக்கையில் சிறிதாயினும் அவையும் பலரைக் கவர்கின்றன. அனுபவம் என்ற பிரிவில் சில பதிவர்கள் தங்கள் நிகழ்வுகளைப்  பகிர்கின்றனர். 

மிகச் சிலர் அறிவியல், அதை ஒட்டிய பரிணாமம், மேலும் நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டும் கருத்தாக்கங்களை முன் வைக்கின்றனர். பணம் பண்ணும் வழியாகவும் சிலர் தங்கள் பதிவுகளை செய்கின்றனர். இவற்றுள் சிலர் சோதிடத்தை இந்திய அறிவியலின் பரிணாமமாக முன்னுரைக்கின்றனர்.

ஹோமாபதியை witchcraft  என்று சொல்ல முடிந்தது ஆங்கில மருத்துவர்களால்.  நம்மால் சோதிடத்தை மூடத்தனத்தின் அடையாளமாகப்  புரிந்து கொள்ள முடியவில்லை.

சொல்ல வந்தது இவையல்ல. நாளும் பல்வேறுப்  பொருட்களில் தங்கள் கருத்துகளை வைக்கும் பதிவர்கள் எழுதும் தமிழைப் பிழையின்றி எழுத ஏன் முனையவில்லை? எதோ ரயில்ப் பிடிக்கப் போவது போல் மிக மிக அவசரத்துடன் எழுதுவது போல் எழுதிச் செல்கின்றனர். நாம் எழுதியதை நிச்சயம் நாமாக அழிக்காதவரை நீண்டகாலம் அது இந்த வலை உலகில் வலம் வரும். நம் சிந்தனைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும் எழுதுவதைத் திறனுடன் பிழையின்றி எழுதுவோமே! நானும் முயன்று பிழை இன்றி தான் எழுத விளைகிறேன்.

வடமொழிக் கலப்பு இல்லாமல் எழுதப் பழகுவோம் நாம்.  சில  கட்டுரைகளைப் படிக்கும் போது ஏன் அதைக் கிளிக்கினோம் (எழுத்துப் பிழைகள்) என்ற கேள்வி வருகிறது. சிலவற்றைப் படிக்கும்போது நாமும் பிழையின்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.  திராவிட மொழிகளில் தமிழைத் தவிர மற்றவை வடமொழி ஆதிக்கத்துக்கு உட்பட்டு விட்டன.  நாமாவது நம்மைத் தனித்து நிறுத்தி உயர்வோம்.  தமிழைத் தமிழிலேயே எழுதுவோம்.



நாளும் பல்வேறு பணிகளுடன் விடியலில் எழும் நாம் அந்த நாளின் முடிவில் நாம் முயன்ற அளவு செய்த பணிகளை நிறைவு செய்தோமா என்று எண்ணி சாய்ப்போம் தலையை!

முட்டினால் கொம்பு முளைக்கும்?

ஒரு  தடவை  முட்டி, இன்னொரு தடவை முட்டாமல் விட்டால் கொம்பு முளைக்கும்!
இதை நம்பாதவர் கூட ஒரு வேளை நடந்து விட்டால்? என பயந்து இன்னொரு முறை முட்டிக் கொள்வது சிறு பிள்ளைத் தனம்? அல்லது குழந்தை மனம்?

நம் வாழ்வில் இது போல் எத்தனையோ செய்கிறோம். நமக்கு நன்றாகத் தெரியும்! சில நிகழ்வுகள் நடக்கவே முடியாது என்று! இருந்தாலும் நாம் விடுவதில்லை. சிறு பிள்ளைகள் போல் நடந்து விடுமோ என்று பயந்து நாம் நம்பமுடியா ஒன்றையும் நம்ப ஆரம்பித்து விடுகிறோம்!

நம் உலகை திட்டம் போட்டு ஒரு அதி புத்தி உள்ள ஒரு """""""", படைத்து இருக்குமா? இதற்கு விடை தேடுவது சரியா? என நான் இங்கு வினவ வரவில்லை.

அந்த அதி """""""" நம்மை ஆட்டி வைக்கிறான்! அவனை கால் கை பிடித்து கீழ் விழுந்து அழுதால் மனம் இரங்கி நம்மை ஆட்கொள்வான்? இது ?

இந்த   """""""" தனக்கு வேண்டிய முகவர்கள் மூலம் அல்லது தம்மை உணர்ந்த அதி உன்னத ஆத்மாக்கள் மூலம் இந்த உலகில் வாழும் மனிதர்களை கடைத்தேற்றும் என நம்பி அவர்கள் காலில் விழும் நம் செயல்?

பிறப்பு முதல் நேரம் பார்த்து பார்த்து,,, ஒரு குறிப்பிட்ட அறிவார்ந்த? மனிதர் சொல்லும் எல்லாவற்றையும் நம்பி வாழும் நம் வாழ்வு  சிறு பிள்ளைத் தனம் ?

சாமியார், சாமியாடி, பூசாரி, ஜோதிடர், பகவான்கள், இப்படி எல்லா மனிதர்களின் கூட்டு முயற்சியால் தான் நாம் வாழ்கிறோம் இறை அருள் பெற்று என இருப்பது?

முட்டினால் கொம்பு முளைக்கும் என நினைத்து இன்னொரு தடவை முட்டிக் கொள்வது வேடிக்கை தான் பார்ப்பது! அதையே நாம் தினம் தினம் செய்வது? நொடிக்கொரு முறை நாம் செய்யும் எல்லா செயலையும் இதே பயத்துடன் செய்வது ?

பரிணாமத்தை எந்த மதமும் ஏற்றுக் கொள்வது இல்லை. அது போல் எந்த கடவுளையும் மண்ணில் உள்ள உயிர்கள் நம்புவதில்லை( முட்டினால் கொம்பு முளைக்கும் என்று எண்ணும் நம்மைத் தவிர)

அறிவியல் எப்போதும் ஆய்ந்து சொல்லும் உண்மையை! ஆனால் அறிவு கொண்ட நாம் மூட எண்ணம் பரப்பும் சில விந்தை மனிதரின் வார்த்தைகள் அழகாய் இருக்கின்றன! ஒரு மயக்கம் தருகின்றன என்பதால் மயங்கி சாய்கிறோம்! அதை பூரணமாக நம்பி வாழ்கிறோம்!

கதைகள் எப்போதும் சுவை கொண்டவை! அதற்காக? கதையில் வரும் எல்லாம் நம் வாழ்வில் அடையலாம் என்பது மடமை இல்லையா?

நமது புராணங்கள் எல்லாமே நன்றாக புனையப் பட்ட கதைகள் என்று தெரிந்தும்? நாம் மயங்குவது எதற்கு?

எல்லா மனிதரும் ஒன்றே போல் சிந்திப்பது இல்லை. ஆனால் நமது சிந்தனை உண்மையின் வழிப்பட்டதாய் இருக்க வேண்டும்! ஒன்றும் ஒன்றும் எப்போதும் ஒன்று தான்!.. இல்லை என்று சொல்பவன் நிச்சயம் எங்கோ எதிலோ தவறு செய்து தான் இருக்க முடியும்.  நம் பிள்ளைகளையாவது முட்டினால் கொம்பு முளைக்கும்! என்பது நிச்சயமான ஒரு அழகு கொஞ்சும் மூடத் தனம்! என சொல்லி வாழ வைப்போம்.

மனித உயிரின் விலை?




நம் சமூகத்தில் எல்லோரும் எதோ ஒரு கண்ணாடி அணிந்து கொண்டு தான் தம்மை சுற்றி உள்ள இந்த உலகை காண்கின்றனர்.
தாம் நினைப்பதே சரி! தம் எண்ணங்களே மேன்மையை நோக்கி செலுத்தும் கருவி என்றும் நினைகின்றோம்.
பிறரது கருத்தை எந்த வித சார்பு இல்லாமல் அணுகும் தன்மை நாம் இழந்து விட்டதன் அடையாளம் தான் நாம் பிறருடன் எந்த வித சிந்தனையும் செய்யாமல் உடனுக்கு உடன் விவாதம் செய்வது.  தம்மை முன்னிலை படுத்த முயலும் அறியாமை!

கீழே உள்ள குறும் படம் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. இருப்பினும் சென்று பாருங்கள். காவல் துறையில் பணி செய்யும் ஒரு அதிகாரி தான் முன்னரே கொண்ட ஒரு
கருத்தின் அடிப்படையில்  எதிராளியை எந்த வித இயல்பான காரணமும் இன்றி எதிராளியின் கூற்றின் உண்மைக் கருத்தை அறியாமல் அவர் செய்யும் செயலின் கேடு மிக எளிதில் விளங்கும் வண்ணம் காட்சி படுத்தப் பட்டுள்ளது.

ஒரு வேளை எதிராளி சொல்வது இவருக்கு ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில்?
சூழலின் காரணமே மனிதனை ஒரு முடிவுக்கு வரவழைக்கிறது. அதன் சரி, தவறு பற்றி அவன் அக்கறை கொள்வது இல்லை.  திறந்த மனதுடன் ஒரு மனிதன் செயல்படும்போது தான் அவன் பணி அவன் வாழும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சார்புடன் செய்யும் எந்த செயலும்?

தோட்டா  விலை என்ன?, 

வறண்ட நாட்கள்!

கண்ணே! நீ இல்லாத இந்த நாட்கள் என்னைத் தனியனாய் அலையச் செய்கின்றன. விழித்தெழுந்த உடன் உன் இருப்பை உணர்த்தும் உன் நடை கேளாத  எனது காதுகள் வலிக்கின்றன. அன்புடன் என்னை இழுத்து சென்று குளியலறையில் தள்ளும் நிலையன்றி என்னை நானே தள்ளி செல்லுதல் அத்தனை எளிதல்ல இப்போது.

குளித்து முடித்து வந்த உடன் என்னைக் கண்டு உன் தாமரை முகம் மலர புன்னகைப்பாய்! அது காணாமல் ஏன் கண்கள் நனைகின்றன?. உன் முகம் காணாமல் விடியலே உணர மறுக்கிறது உள்ளம்.  நான் போட்ட காப்பியை உன்னுடன் பகிர்ந்து அருந்தாமல் நானேப் பருகும் இந்த தனிமை  மிக கொடுமை.  நீ சமைத்து தரும் மணம் கமழும் பொங்கல் நான் சமைத்த  போது கழுநீரில் இட்ட கஞ்சியானது!  

உன் தோழிகள் உன்னைத் தொலைபேசியில் அழைத்த போது உன்னைக் காணாமல் வீடு முழுதும் தேடி அலுக்கின்றன கால்கள். உன் இருப்பே இல்லாமல் அலையும் இந்த நாட்கள்  நீ இந்த வீட்டில் இருந்தபோது எனக்கு அமைந்த வசந்தங்களை நினைவூட்டும் வறண்ட நாட்களாக்கி விட்டு சென்ற நீ எப்போது மீண்டும் வருவாய்?


உன்னைக் காணாமல்  வாடி நின்ற இந்த  நெஞ்சம் நீ வரும் வழி நோக்கி காத்திருக்கும்!

மதங்கள் மனிதனை ஆளலாமா--- ஐம்பதாவது இடுகை நோக்கி!

ஒவ்வொரு மத ஈடுபாடு கொண்டவரும் தன் மதத்தின் சிறப்பை மற்றவருக்கு விளக்க முனைவது சரியா?
இந்த கேள்விக்கு விடை நேரடியாக சொல்வது சிலருக்கு வருத்தம் தரும் நிச்சயம்.
அறிவியல் கருத்துகளை ஒரு மத நூல் சொல்கிறது என்பதற்காக மதம் உயர்ந்ததாகிவிடுமா?



அது சரி இது வரை எந்த மத நூல் அறிவியல் சொல்லி இருக்கிறது எனக் கேட்பவர்கள் மத நூலை துருவி துருவி தேடி மக்களைக்  கவர முனையும் அன்பு பதிவர்களிடம் சென்று கேளுங்கள் வண்டி, வண்டியாக சொல்வார்.

டார்வின் கொள்கை ஒன்று இருக்கிறது. அது நிரூபணம் செய்யப்பட்டது/ உயிரியலின் அடிப்படையே அதன் மீது தான் என ஏற்றுக் கொள்ள மறுக்கும் கொள்கையின் மீது கட்டப் பட்ட மத நூல்களில் அறிவியல் கருத்து இருக்கிறது என்று தேடும்  மனிதர் கடையில் சென்று சில நூறுகளில் கிடைக்கும் நல்ல அறிவு நூலை வாங்கிப் படித்தால் உண்மை விளங்கும் என அறியாரோ?

அறிவியல் என்பது என்ன? கேள்வியின் பதில்கள்  தானே? யார் யாரோ கேட்ட கேள்விகளின்  பயனை நாம் நுகர்ந்து கொண்டே இதை எல்லாம் நமக்கு நம் கடவுள் ஏற்கெனவே சொல்லி விட்டார் என்பது எத்தனை அறிவீனம்?

மத நூல் என்பது என்ன. நான் சொன்னது சத்தியம். நம்பு. நிச்சயம் நடக்கும் என சொல்லும் கண்மூடி மூட சிந்தனை தானே? இதுவரை எந்த மத தலைவனாவது உண்மை காண இது வழி என்று சொல்லி இருக்கிறார்களா? கேட்டால் கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்! எனும் தத்துவம்.

அதான் சொல்றவன் நிச்சயம் பார்த்திருக்க முடியாதுன்னு தெளிவா நீங்களே சொல்றிங்களே, அப்புறம் எதற்கு தெரு தெருவுக்கு பிரச்சாரம். எல்லா ஊடகங்களிலும்
எப்போதும் சொல்லி சொல்லி திரிகிறீர்கள்?. எங்கே சொல்லாமல் விட்டால் நமது வாழ்வு போய் விடும் என்ற பயம் தானே?

பெரியார் சொன்னார் மலத்தில் அரிசி தேடுவது போல்... மத நூல்களில் அறிவு இருக்கிறது என்பது என.  இந்த உண்மையும் நம்மில் பலருக்கு தெரியும். இருந்தாலும்??

கற்பனையிலேயே இருந்த நம்மை ஒளியின் வேகத்தை அறிய வைத்த அறிவியலின் துணை கொண்டே நாம் நம் அறிவை மூடும் சிந்தனைகளை வளர்த்து வருகிறோம் என்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது!

இறை தத்துவ நெறிகளைத் தேடும் மனிதர்களே, உங்கள் மன அமைதிக்கு வழி தேடும் மனிதர்களே, மறந்தும் பிறர் பொருள் மீது பற்று இல்லாமல் வாழ உங்களைப் பழக்கி கொண்டால் மனம் அமைதி பெற்று பாபா முதல், சாயா வரை கண்ட அமைதி நிலை நிச்சயம் உங்களை அடையும். அவர்கள் அமைதி கண்டார்களா என்பது வேறு விஷயம்!

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மனதில் நிச்சயம் நீங்கள் உண்மை என நம்புவது உண்மையாக இருக்க , பொய்யாக இருக்க வாய்ப்பு சம அளவு அது நிரூபணம் ஆகும் வரை!

ஐயோ! கடவுள் ஒரு வேளை இருந்துவிட்டால் நான் சொர்க்கம் போக வேண்டி விரதம் இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னால்? நான் பொறுப்பு அல்ல.

உணவு ,பண வீக்கம்-விலை வாசி நமக்கு ஏன் ?

http://www.luckylookonline.com/2010/03/blog-post_17.html

இந்தப்  பதிவில் சென்று பார்த்து இங்கு வரலாம். 

பண வீக்கம் என்ற அளவீடு தகுதிக்கு மீறி நம் கையை விட்டு எவ்வளவு அதிகம் செலவு என்பதன் அடிப்படையே. எந்த ஒரு நல ஆட்சியிலும் பண வீக்கம் 2 %க்கு  அதிகம் ஆகாமல் இருக்கும். இது வளர்ந்த நாடுகளில் சாத்தியம். இங்கு நான் சொன்ன பண வீக்க விகிதம் "நுகர்வோர் உணவுப் பொருள்" விகிதம். உலகில் பண வீக்கம் கணக்கிடுவதும் நம் நாட்டில் கணக்கிடுவதும் மாறு பட்டது.  இந்தியாவில் மொத்த கொள்முதல் விலைப் பண வீக்கம், சில்லறை விலைப் பண வீக்கம் என இரு வகை உண்டு. இரண்டுமே இப்போது இரட்டை இலக்கத்தில் நம் நாட்டில்.  நம் நாட்டு "நுகர்வோர் உணவுப் பொருள்" விலைக் குறியீடு 18% தாண்டி  விட்டது. சிலக் குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் 50%  தாண்டி.  

இதே அளவில் வருமானம் உயர்ந்திருந்தால் இந்த எண் நம் கணக்கில் வந்திருக்காது. பண வீக்கமும் , வைப்பு நிதி வட்டிக்கும் தொடர்பு செய்து பார்த்தாலும் எளிதில் விளங்கும் நம் வருமானம் எங்கோ கரைகிறது என.

இரு வருடம் முன் நான் 100 மூட்டை அரிசி வாங்கும் பணம் வங்கியில் இட்டு இருந்தால் இன்று நான் அறுபது மூட்டை தான் வாங்க முடியும்?
அதாவது என் பணம் என் கை விட்டு போய் விட்டது. அதே பணம் கொண்டு நான் இந்த அரிசி மூட்டை வாங்கி பதப் படுத்தி வைத்து இன்று விற்று இருந்தால்?
இது தான் பெரிய பெரிய நிறுவனங்கள் செய்வது. பொருள் அதிகம் கிடைக்கும்போது வாங்கி பதுக்கி (அரசு கணக்கு கேட்கும் எவ்வளவு கையிருப்பு என, இவர்கள் பொய்த் தகவல் சொல்லி விடுவர்) அதன் தேவை மிக அதிகம் ஆகும்போது விற்பது. இதை அரசு கை கட்டி வேடிக்கை பார்ப்பது. சில நேரங்களில் அரசே அளவுக்கு அதிகமாக வைத்துக் கொள்ள சட்டம் இயற்றும்.

பங்கு வணிகத்தில் இந்த பணம் இட்டு இருந்தாலும் இதே நிலை தான் ஏற்பட்டு இருக்கும். கொஞ்சம் இழப்பாக  இருந்தாலும் அது இழப்பே. அதாவது எல்லா இனங்களிலும் பங்கு பரிமாற்றம் 20% அதிகமாக
இலாபம் ஈட்டுவதில்லை. எனவே வருமானம் அல்ல. பங்கு வணிகம் பொறுத்தே நிறுவனங்களின் வருமானம். எப்படி  நிறுவனங்கள் வருமான உயர்வு அளிக்க முடியும்? அதாவது பெரும்பாலான மக்களின் வருமானம் கடந்த இரு ஆண்டுகளாக அதிகம் உயர வில்லை. அதே சமயம் பண வீக்கம் அதிகமாகிறது. அதாவது அவர்களின் அன்றாட செலவு அதிகமாகிறது. இது நிச்சயம் பொது மக்களை பாதிக்கும் விஷயம். அவனது எதிர்கால சேமிப்பு குறைவது மட்டும் இல்லாமல், அவனது சேமிப்பின் மதிப்பும் பாதாளம் செல்லும்.

உண்மை சொல்லப் போனால் நம் அரசின் கையால் ஆகா செயலே இந்த பிரச்னைக்கு காரணம். தங்கள் கையிருப்பில் நிறைய தானியம் இருந்தும் விலை ஏற்றம் சாத்தியமாகும் அளவு இருக்கிறது. எந்தப் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது? எனவும் தெரிய வில்லை. அரசு online trading கட்டாயம் தடை செய்ய வேண்டும். மேலும் ஊக வணிகம் தடை செய்யப் பட வேண்டும். நாளிக்குப் பொறக்கப் போற பிள்ளைக்கு இன்னைக்கே பேர் வைக்கறது தான் ஊக வணிகம் என்பது நீங்கள் அறிவீர். ஊக வணிகமே தேவை இல்லாத தேவையை உருவாக்கி பொருளின் விலை ஏற  காரணமாகிறது. பஞ்சாபில் விளையும் கோதுமைக்கு இங்கு இருந்தே விலை நிர்ணயிப்பது. இதன் மூலம் தேவை இல்லா போட்டி உருவாக்கி விலை உயரச் செய்வது. அந்த விலை உயர்வையும் விவசாயி பெற விடாமல் தாங்களே அனுபவிப்பது தானே ஊக நிறுவனங்களின் செயல்பாடு?

நேற்று வரை மளிகைக் கடை வைத்து தம் ஊரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு விற்பனை செய்த கடைக் காரனை துரத்தி விட்டு புதிய புதிய வணிக வளாகங்கள் உருவாக்கி விலைகளைத் தாங்களே நிர்ணயம் செய்யும் பெரிய பெரிய நிறுவனங்களினால் தெருவில் நின்ற இவர்களின் நலன் காக்க முனையாத அரசு? தெருவில் அலைந்து ஐந்து ருபாய் கீரைக் கட்டை  பேரம் காரணமாக மூன்று ரூபாய்க்கு விற்று விட்டு வீடு சேரும் மூதாட்டியின் இரவு உணவு என்ன? தமிழ் நாடு அரசின் ஒரு ரூபாய் அரிசி சோறு தானே?

நித்தி , சித்தி , ஹுசைன்

நித்தியப் பத்தி பத்திரிக்கைக் காரங்க எழுதிக் காசப் பார்கிராங்கனு சொல்லிக் கிட்டே சில பேர் இடுகை இட்டு பெரும் பேர் சம்பாதிக்கிறாங்க.
நம்ம இடுகை "தமிலிஷ் போபுலர்" அப்படின்னு ரெண்டு நாளைக்கு இருக்கணும்னு நினைச்சா நித்தி பத்தி அவதூரா ஒரு இடுகை?  இல்லை, இல்லை,. காலம் மாறிப் போச்சு
  .

இப்பல்லாம் நித்திக்கு வக்காலத்து வாங்கறவங்களுக்கு தான் ஹிட்டு. என்ன அழகா கேகுராங்கயா கேள்வி?

நித்தி பத்தி யாராவது தப்பா சொல்றவங்க அவர் நடத்துற கிளாஸ் போய் வந்து இருக்கணுமாம்ல. அது தான் அடிப்படை தகுதியாம்? சொல்லிக் கொடுத்தது தப்புனாலும்
வாத்தியாரைக் குறை சொல்லக் கூடாதாம்!  நித்திக்கு இப்படி எல்லாம் சீடர்கள்? ஒரு வேளை நித்தி செஞ்ச ஆராய்ச்சி இவங்க சீடர்களும் செஞ்சுப் பார்துருப்பாங்க போல?


இதுக்கு நடுவால ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ....... ரவிசங்கர் ?? ஏங்க! இவர் பத்திய கதை வெளில வருலனா இவர் பெரியவரா? நித்திக்கு ஒண்ணுல மயக்கம்னா.. இவருக்கு ஒண்ணுல மயக்கம். நமக்கு தெரியற வரைக்கும் இவர் ஸ்ரீ ஸ்ரீ. ...........

கேவலம் பேருலயே இத்தனை ஸ்ரீ. அது என்னங்க விஷயம்? ஒரு ஸ்ரீ போட்டா போதாதா?
புகழ் தேடும் ஆட்கள் சூழ்ந்த இந்த சமூகத்தில் இப்படி தான் வாழணும்னு சொல்லித் தராராம்.

நித்தி மேட்டருக்கு வருவோம். எப்போதாவது இடுகை படிக்காலாம்னு வந்தா நித்திக்கு ஆள் சேர்க்கும் கூட்டம் எழுதுவது என்னை எழுத தூண்டி விட்டு விடுகிறது!

பீஸ் போன பல்ப வச்சுக்கிட்டு இன்னம் எவ்வளவு நாளைக்கு ஆடுவாங்கப் பாப்போம்.

சிலருக்கு நிம்மதி சரக்கடிகறது. சிலருக்கு நிம்மதி ஆப்பு அடிக்கிறது, சிலருக்கு நிம்மதி அடிச்ச ஆப்ப புடிங்கி விடறது. சிலருக்கு நிம்மதி இதை வச்சு பேர் வாங்கறது? 
 எப்படி நம்ம நிம்மதி உங்கள் சாய்ஸ்?


இன்னொரு செய்தி. ஹுசைன் பற்றிப் பேசணும்னா ஓவியம் பத்தி தெரிஞ்சிக்கிட்டு பேசணுமாம். ஆமாம். உண்மை தான், புகழ் சேர்த்தவன்  எது செஞ்சாலும்
அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அதே நம்ம ஆளுங்க செஞ்சா மக்க தொலைஞ்சாங்க.
இல்லனா பெரிய பெரிய மன நல மருத்துவர் எல்லாம் கூட நிப்பாரா? ஒரு வேளை மன நலம் சரி இல்லாத ஹுசைனுக்கு வைத்தியம் பார்க்கணும்னு சொல்லாம சொல்றாரோ?

கடவுள் இல்லடா மக்கா! போய் தொழில் செய்டானு சொன்னா பைத்தியக்காரன். அதுவே இவன் கும்புடுற கடவுள அசிங்கமா வரைரவனக் கொண்டு வந்து தலை மேல் வச்சு ஆடுவாங்க . கேட்டா மத நல்லிணக்கம், ஏலே? என்னாலே இது?

தலைப்புல சித்தி இருக்கு, இங்க இல்லையேன்னு பார்கறீங்களா? அது வரணும்னா யாராவது சாமியாரப் போய் பாருங்க கண்ணுங்களா! இல்லனா நம்ம வீட்டுத் தொலைகாட்சி பாருங்க. வரும் சித்தி


மக்களே? எனக்கும் கொஞ்சம் vote  பண்ணிட்டுப் போங்கோ. நாமளும் பிரபலம் ஆய்டுவோம்!

எலி ஏன் அம்மணமா ஓடுது?

josiyam?

மேலே இணைப்புக் கொடுத்தப் பதிவை சென்று பார்த்து வாருங்கள்!
என்னோட பதிவுக்கே எந்தப் பதிவரும் வரத்து இல்ல. இதுல நான் சொல்ற பதிவை பார்க்கவாப்  போறீங்க? இருந்தாலும் நான் சொல்கிறேன் .

ஜோசியர் சொல்றது உண்மையாப் பொய்யான்னு அலசி ஆராய்ந்து விட்டார் அந்த இடுகையில் .
உண்மை என்று வைத்துக் கொண்டு ஒரு விளக்கம்.
பொய் என வைத்து ஒரு விளக்கம்.
இறுதியில் வைத்தாரே ஒரு ஆப்பு. " ஜோசியர்கள் சிறந்த மனோதத்துவ நிபுணர்கள்! அவர்கள் உண்மை கசப்பாக இருந்தால் அதை மறைத்து உங்களை ஆற்றுபடுத்தும் நோக்குடன் சில செய்திகளை சொல்லி உங்களை நலம் பெற்று வாழ வைத்து உங்கள் எதிர்காலம் கணித்து தருவர்"?

ஜோதிடர்களை டாக்டர்களுடன் சரிசமமாக வைத்து வாதிடுகிறார் இங்கு.

அதாவது நீங்கள் வாழ்ந்த இத்தனை நாள் வாழ்க்கை , இனி நீங்கள் வாழப் போகும் வாழ்க்கை, அது மட்டும் இல்லாமல் உங்கள் ஆத்தா, அப்பன், வகையறா, கூடப் பொறந்த வகையறா, வாழப் போறவன், போரவ வகையறா நீங்க டாக்டர், engineer என  எல்லாவற்றையும் நீங்கள் பிறந்த அந்த நேரம் வைத்துக்  கணிக்கும் திறன் பெற்ற நல்ல(முழுமையான ) ஜோதிடர் இந்த உலகில் உள்ளார் என்று சொல்வது யார் காதில் சுற்றும் பூ?


அடுத்த இடுகையில் இதை விட மேலாக ஒன்று . அதை நான் இங்கு ஒட்டுகிறேன்.

"கோள்களின் நிலைக்கும் ஒருவனுடைய வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அந்த தொடர்பை கணித்து தனிமனிதனின் வாழ்க்கையின் எதிர்காலத்தைச் சொல்ல ஒரு நல்ல ஜோதிடனால் முடியும்" என்றும் முந்தைய பதிவில் பார்த்தோம். எனத் தொடங்கி அரை குறை ஜோதிடர் பற்றி பேசி அவர்களும் நமது நன்மைக்கே என வாதிட்டு அமைகிறார்.


இதற்கு மேல் இன்னொரு இடுகை இட்டு இந்த தொடரை நிறைவு செய்வாராம்.
இதை எல்லாம் விட வேடிக்கை தனது வலைப் பக்கத்தில் கீழ்க்கண்ட தொடரும் வைத்து உள்ளார்.

நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் முருகனை வழிபடுவோர்க்கே!



எலிக்கு யாரும் ஜோசியம் பார்ப்பார்களா?
நம் ஆட்கள் எதற்கும் ஜோசியம் பார்ப்பார்கள்.
நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவு பணம் என அவர்கள் கேட்பதை அனுப்பி ஒரு நேரம் குறித்துக் கொடுத்தால் போதும்.

பிறந்தது ஆணா, பெண்ணா என்பதையே நீங்கள் கொடுத்த நேரம் வைத்து சொல்லத் தெரியாதவர்கள் வேறு எது சொல்வார்கள் என்று பின்னால் போகிறீர்கள்?


ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டு இடுகைகள் எழுதுவோரை விட்டு விடலாம். ஆனால் இது போல் எழுதி என்னைப் போல் அரைகுறை நம்பிக்கை உள்ளோரை முழு மூடராக்கும் மனிதர்களை பார்த்து என்னால் சகிக்க முடியவில்லை.

இதைப் போல் நானும் எழுதுவேனோ எப்போதேனும் ?

குளியலறைக்குப் போய்ச் சந்தனச் சோப்புப் பூசி உடல் குளிர நீராடி வேறு நல்ல புடவை மாற்றித் திலகமிட்டுக் கொண்டாள் அவள். கண்களுக்கு ஆசையோடு மையும் தீட்டிக் கொண்டாள். அவள் அப்போது அந்த நள்ளிரவில் தனக்குத்தானே செய்து கொண்ட காரியங்களுக்கு ஏதோ ஓர் அர்த்தமிருக்கிறாற் போலவும் தோன்றியது. அவள் அப்போது தான் பரிபூரணமான சந்தோஷத்தோடு இருப்பதாகவும் உணர்ந்தாள். அப்படி உணர்ந்த மறுகணமே அதன் மறுபுறத்தில் பரிபூரணமான துக்கத்தையும் உணர்ந்து அநுபவித்தாள். இருளில் தட்டுத் தடுமாறித் தோட்டத்துக்கு ஓடிப்போய் அரைகுறையாக மலர்ந்திருந்த இரண்டொரு ரோஜாப் பூக்களையும், அடுக்கடுக்கான குடை மல்லிகைப் பூக்களையும் பறித்து ஈரக்கூந்தலை முடித்து அதில் சொருகிக் கொண்டு வந்தாள். ஏதோ நினைத்தவளாக உள்ளே போய்த் தேடி எடுத்து அரங்கேறிய நாளிலிருந்து தன் பட்டுப் பாதங்களை அலங்கரித்த அந்தச் சலங்கைகளையும் பாரதி எழுந்து விடுவாளோ என்ற பயத்தோடு காலில் ஓசைப்படாமல் அணிந்து கொண்டாள். இந்தப் பாழாய்ப் போன உலகத்துக்குப் புகழோடும், பெருமையோடும், தான் அறிமுகமாகக் கருவியாக இருந்த எல்லாவற்றையும் தன்னோடு சேர்த்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் போல ஓர் ஆசை அப்போது அவளுள்ளே எழுந்து தவித்தது. மேஜை விளக்கருகே கையைக் கொண்டு போய்ப் பட்டுப் புடவைத் தலைப்பினால் தன் விரலிலிருந்த மோதிரத்தைத் தேய்த்துப் பளபளக்கச் செய்த பின் அதன் பொன்னொளியில் தன் முகத்தைப் பார்த்த போது அந்த மோதிரத்தை அணிவித்த தெய்வத்தின் ஞாபகம் வந்து மனத்தைப் பிசைந்தது. அவளுடைய சலங்கையணிந்த பாதங்கள் உடனே எங்கோ புறப்பட்டுப் போய்விட வேண்டும் போல் துடிதுடித்தன. மைதீட்டிய விழிகள் யாரையோ பார்க்கப் பறந்தன. சிவந்த உதடுகள் யாரிடமோ புன்முறுவல் பூக்க நெகிழ்ந்தன. கமலக் கைகள் யாரையோ வணங்க வேண்டும் போலக் குவிந்து கூப்புவதற்கு முந்தின.

deal or no deal?

வேளை வெட்டி இல்லாமல் நிறைய தமிழ் தொலைக் காட்சி தொடர்களைப் பார்க்கும் தமிழ் மக்களில் நானும் ஒருவன் என்பதை சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று வந்த டீலா நோ டீலா நிகழ்ச்சியும் பார்த்து விட்டேன். இந்த நிகழ்ச்சி என்னை கவர்வதற்கான காரணங்கள் சில.

௧. பணம் எனக்கேக் கிடைப்பதைப் போன்ற எண்ணம்.
௨. நிகழ்ச்சியில் தொலைக் காட்சி சார்பாக நிறுத்தப் படும் பெண்கள்
௩. போட்டியாளர் தன் முன்னால் இருக்கும் வாய்ப்புகள் கொண்டு முடிவு எடுக்கும் நிலை 
4. தங்களது அதிர்ஷ்ட எண் எனக் கூறிக்கொண்டு பெட்டி எடுத்து வைக்கும் போட்டியாளர்கள் சிறிது நேரத்தில் நம்பிக்கை இழப்பது!
5. ஒவ்வொரு தடவை பெரிய தொகை கொண்ட பெட்டி விளையாட்டில் இருந்து நீக்கப் படும்போதும் எதோ தன் பணமே தன் முன்னாலே திருடப் படுவது போல் கலங்க வைக்க முயலும் நிகழ்ச்சி நடத்துனர்.
6. இது போதும் என நினைக்கிறேன்

தமிழ் தொலைக் காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் தமிழில் பேசுவதும், நிகழ்ச்சி முக்கியக் கூறுகள் தமிழில் இருக்கும் என எதிர்பார்ப்பதும் நம் முன்னால் கடவுள் தோன்றுவார் என நாம் எதிர்பார்ப்பது போல் ஆகும். எனவே அதை விட்டு விடுவோம்.

ஆனால் தப்பித்தவறி போட்டியாளரோ, அவருடன் வந்தவரோ தமிழில் பேசி விட்டால் அவர்களைக் கிண்டல் செய்வார்கள் என்பதற்கு இன்றைய நிகழ்ச்சி ஒரு காட்டு !

அப்படி என்ன நடந்தது?


போட்டியாளருக்காக ஒரு நண்பர் "பெட்டி எண் ஏழு" என்று உதவி செய்தார். உடனே தொகுப்பாளர் என்ன language நீங்கள் பேசியது எனக் கேட்டக் கொடுமை/சிறப்பு ?
ஏனென்றால் இவர்கள் நாகரிகப் படி " please open the box no 7" என்று சொல்ல வேண்டுமாம்.
அதற்கு ஒருவர் விளக்கம் அளித்தார் அது சுத்தத் தமிழ் ... நன்றாக வீசுகிறது நம் தமிழ் மணம்!

பெரியார்தாசன்

தாசன் இந்தப்  பெயரே அடிமைத் தனத்தின் வழியாகவும் , அன்பின் வழியாகவும் பார்க்கப் படலாம். பெரும்பாலானவர்கள் தாங்கள் யாருடைய கொள்கையின் பால் மிக ஈர்க்கப்பட்டனரோ அவர்கள் பெயருடன் இந்த தாசனை சேர்த்தனர். இவர்களில் எல்லோரும் பெயரில் மட்டுமா? என்பது வினா?

கண்ணதாசன், பாரதிதாசன், சுரதா என நிறைய பேர்கள் சமூகத்தில் உண்டு. பெரியார்தாசன் இந்த பெயரும் நம் சமூகத்தில் நன்கு அறியப் பட்ட ஒன்று. கருத்தம்மா உள்ளிட்டப் படங்களில் நடித்த பெரியார்தாசன் எனப் பெயர்கொண்ட நாத்திக வாதியாக அறியப் பட்ட ஒரு மனிதர் தான் இத்தனை நாள் கைகொண்ட ஒரு கருத்தாக்கம் தனக்கும் சமூகத்துக்கும் பயன் அளிக்காது என்பதை உணர்ந்து கூறியதாக ஒரு செய்தி வந்துள்ளது!

 ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாவுக்கே...

எங்கோ எதுவோ பிழையோ? யார் செய்த பிழை? ஒரு நாத்திகமான சிந்தனை உடையதாக சொல்லப் பட்ட ஒரு மனிதர் ஒரு குறிப்பிட்ட மத நூல் மட்டும் உயர்ந்தது என்னும் கொள்கைப் பிடிப்பு பெற எது காரணம்?

நான் இவரைப் பற்றி தாக்கி இங்கு எதுவும் எழுத முயலவில்லை. தனி மனிதனும், சமூகமும் நிறைவுடன் வாழ மதம் அவசியம் என்பது போல் ஒரு கருத்தாக்கத்தை ஒரு தத்துவ வாதி என சொல்லப் படும் மனிதர் ஏற்கிறார் என்றால்? 

இத்தனை நாள் தான் கொண்ட கொள்கையைப் பற்றி சிந்திக்காதவரா? அதைப் பற்றி எந்த ஒளிவு மறைவும் அற்ற ஆய்வு செய்தவரா? அப்படி இல்லாதவர் எப்படி அந்த கொள்கையுடன் பற்றுடன் இருந்திருப்பார்? புகழுக்காகவா? இப்போது மாறியதும் அதற்காகவா?

பெரியார் எப்போதும் தான் சொன்னதை யோசித்து சரி என கொண்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற சொல்லியக் கருத்துகளில் ஈர்ப்பு ஏற்பட்டு தன் பெயர் மாற்றிக் கொண்ட மனிதனின் உண்மை முகம் எது?

போலிச் சாமியாரைப் பார்த்த நாம்? இன்று யாரைப் பார்க்கிறோம்?

வன்புணர்வுக்கு உள்ளான பெண் விரும்பினால் காரணமானவனையே மணக்கலாம்!

இந்திய உச்ச நீதி மன்ற நீதிபதி கருத்தைப் பாருங்கள்! இது அவரது கருத்தாக இருப்பதால் அதைப் பற்றி இங்கு நம் கருத்தைக் கூறுவது நிச்சயம் நீதிமன்ற அவமதிப்பு அல்ல!

எப்போது மாறும் நம் ஆணாதிக்க மனோபாவம்?
ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான் " வன்புணர்வுக்கு உள்ளான பெண் விரும்பினால் காரணமானவனையே மணக்கலாம்!" கற்பு --என்ற சித்தாந்தம் உருவாக்கிய வெளிப்பாடு தானே இது?
தன் உணர்வுகளை மதிக்காத ஒரு மிருக மனம் பெற்ற மனிதன் தன்னை உடல் அளவில் அணுகிய ஒரேக் காரணம் பற்றி, அவனை மணந்து கற்பு நெறிக் காக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு?

கேவலம் பெண்ணின் கற்பு அவளின் உடம்பா? அவளின் மனத்திற்கு ஒன்றும் தொடர்பு இல்லையா? எந்த ஒரு பெண்ணாவது தன்னை ஒரு விலங்கு போல் கைக்கொண்ட மனிதனை ஏற்றுக் கொள்ள விளைவாளா?

விளைவாள்! எப்போது தெரியுமா?
நம் சமூகம் அந்தப் பெண்ணிடம் விதைத்த கற்பு பற்றிய சிந்தனையையும், அதன் மூலம் எழும் எண்ணங்களையும் கொண்டு அவள் முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படும்போது!

ஏன்? இந்த நாட்டில் வேறு நல்ல ஆண்களே கிடைக்கமாட்டரா அந்தப் பெண்ணுக்கு?
உன்னை துன்புறுத்திய  மனிதன் மனிதனே அல்ல! அவனைப் பற்றிய எண்ணங்களை நீக்கி புது வாழ்வு நீ அடைய நாங்கள் துணை நிற்போம் என சொல்லாதா இந்த சமூகம்? நம் திரைகளில் காணும் நாட்டாமைத் தீர்ப்பா நம் சமூகம் சொல்லவேண்டும்?


ஒரு வேளை மனமாகாதப்  பெண்ணுக்கு இந்த உபதேசம் சொல்லப் பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது! மணம் செய்து தன் கணவனுடன் அன்புடன் வாழ்ந்து பிள்ளைகள் பெற்ற பெண்ணுக்கு?
அவள் கற்பு என்னும் அணிகலன் இழந்தவளா? இவள் இனி யாருடன் வாழ வேண்டும்? இதையும் இப்பெண்ணுக்கு இந்த சமூகம் தான் திணிக்குமா?


பெண்களே! ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள் வாழ்வு உங்கள் கையில்! உங்கள் சிந்தனை பழம்பஞ்சாங்கத்தில்  இருந்து வரக் கூடாது.  பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக சிந்தியுங்கள்! உங்கள் உறவில் யாரேனும் இப்படி வன்புணர்வுக்கு ஆளானால் அப்பெண்ணுக்கு துணை நின்று அப்பெண்ணுக்கு நல்வழி காட்டி வாழுங்கள்! உங்களை துன்புறுத்தியவனை விட நிச்சயம் நல்ல மனிதன் உங்களுக்கு கிடைப்பான். நம்புங்கள்! விட்டு விலகுங்கள்! அழுக்கான சிந்தனை விட்டு!

"ஹிந்து மதம்--அறிவியல் பூர்வமானது"

ரொம்ப நாளாவே நான் பார்க்கும் ,கேட்கும் இடங்களில் எல்லாம் ஒரு பேச்சு வரும்
"ஹிந்து மதம்--அறிவியல் பூர்வமானது"

1 . இப்படி சொல்றவங்களுக்கு அறிவியல்னா என்னனு நிச்சயமாத் தெரியுமா?
2. ஒரு வேளை நியூட்டன் விதி போன்ற விதிகளின் தொகுப்பு தான் அறிவியல் என நினைத்து இப்படி சொன்னால் இவர்கள் சொல்வது சரிதான்.

ஏனெனில் உலகில் உள்ள எல்லா மதங்களும் விதிகளின் தொகுப்பு தான். ஆனால் இவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அறிவியலின் எந்த விதியையும் யாரும் எந்த நேரத்திலும் கேள்வி கேட்டு சோதனை செய்து நிரூபிக்கலாம். அதற்கு, இந்த ஜாதியில் பிறந்து இப்படி வாழ்ந்து இருக்க வேண்டும் என்ற பிறப்பின் வழி தகுதி நிர்ணயம் இல்லை.

ஹிந்து மதத்தில் ஏன் பிறப்பின் மூலம் ஒருவனின் வாழ்வில் நிர்ணயம் செய்கிறீர்? அப்படி அதில் என்ன அறிவியல் இருக்கிறது?
அய்யனுக்குப்  பிறந்தா அய்யன்? பிறக்கப் போறது பெண் குழந்தையா ஆண் குழந்தையா என்பதையே ஜோசியக்காரனிடமும், குறி சொல்லுபவரிடமும்  கேட்டு வந்த மக்கள் நாம். ஆனால் பிறந்த குழந்தை நாட்டை ஆளும்!  நாமம் போடும்! இதெல்லாம் குலத்தின் படி. --இது அறிவியலா?

அப்படி என்ன அறிவியல் செய்துள்ளது ஹிந்து மதம்? வாழும் முறை அறிவியலா? மனவியல் மூலம் ஒருவனை " நீ இதற்கெல்லாம் பயன்பட மாட்டாய். தூய்மை இல்லாதவன், உனக்குப் பிறக்கும் குழந்தையும் உன்னைப் போல் தான், உன்னைப் போலவே அவனும் பயன் பட மாட்டன், எனக்கு பணி செய்து காலம் கடத்து "சொல்லி அடிமைப் படுத்தும் முறையா? ----இதுவா?

கைம்பெண்களை மூலையில் கிடத்தி வாழ்வின் எந்த நல்லக் காட்சியையும் காண ஒட்டாமல் செய்து அவர்களை வாழும்போது நெருப்பில் இட்டு வதைப்பது மட்டும் இல்லாமல் , தெரிந்தோ தெரியாமலோ தங்கள் எதிரில் தென்பட்டால் எதோ பேயைக் கண்டது போலவும், அதை விடக் கீழானதைக்  கண்டது போலவும் பேசி அவர்களை துரத்திய வாழ்வு-- அறிவியலா?

தன் வீட்டுப் பெண்கள் எங்கே தம்மை மிஞ்சி விடுவரோ என வீட்டின் அடுப்படியே அவர்களின் ராஜ்ஜியம் என வைத்ததும் அல்லாமல் அந்தப் பக்கமே போகாமல் இருந்து அந்தப் பெண்களையே தன் வீட்டாருக்கு செய்யும் பணியே, தன் வாழ்வின் லட்சியம் என்று நினைக்க வைத்த திறன்? அதிலும் ஓராயிரம் வகையில் இது செய், அது செய் என சொல்லி அடக்கி வைத்த நிலையோ?

அந்தப் பெண்களிலேயே பல வித பிரிவுகள் செய்து, அவர்களுக்கு இயற்கையிலேயே வரும் மாத விளக்கைக் கூட தீட்டு என்று சொல்லி வதைத்ததா? பெண்களுக்கு ஒய்வு கொடுக்கவே அந்த மாதிரி சொன்னோம் என்று சொன்னவர்கள் தங்கள் பெண்களிடம் அதைக் கூட புரிய வைக்க முயலாளது ஏன்?
கோவிலுக்கு அன்று சென்றால் எப்படி தீட்டு ஆகும்? கைம்பெண் வாழ்த்தக்கூடாது என சொல்லி அவளை
ஒரு அமங்கலமாக நோக்கச் செய்தது தான்---அறிவியலா?

கோவிலில் ஒரு சாரார் மட்டுமே இறையை தொட்டு வணங்கி மற்றவருக்கு இறைவனைக் கேட்டு அருள் பெற்றுத் தரும் , இறைவனுக்கும் மக்களுக்கும் ஒரு தரகராக ?, இதன் மூலம் தாங்களே கடவுளாகவும் உயர்ந்த ரகசியம்-- அறிவியலா?


கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் -என்றப் புத்தகத்தில் நிறைய பழக்கங்களை ஹிந்து மதத்தின் தத்துவங்களாக அணி செய்ய முயல்வார். அவருக்கே நிச்சயம் தெரியும் அதுவெல்லாம் ஹிந்து மதத் தத்துவங்கள் அல்ல, அந்த அந்தப் பகுதி மக்களின் பழக்கங்கள், (தீயவையும், நல்லவையும் கலந்தது)"

ஆனால் என்ன செய்வது? வேதத்தில் இருப்பதை சொன்னால் செருப்பால் அடிப்பார்கள்! எனவே மக்களின் வாழ்வியல் முறையே ஹிந்து மதம் என்று சொன்னால் ஹிந்து மதம் அறிவியல் பால் வந்து விடாதா என்ற ஒரு நப்பாசை தான்!

உலகில் இந்தியாவைத் தவிர ஹிந்து மதம் வேறு எங்கும் இருந்ததாக வரலாறு இல்லை. அங்கு வாழ்ந்த மக்கள் எல்லாம் என்ன இழிந்துப் போய்விட்டார்கள்? ஹிந்து மதமே அறிவியல் என்றால் உங்கள் சிந்தனையே  அறிவியல் என்றால், நீங்கள் மனித குலத்திற்கு என்ன அறிவியல் கருத்துகளை சொல்லிச் சென்றீர்கள்?

கேவலம் சடங்கு, சம்பிரதாயங்கள், மடி, மேல், கீழ் என வார்த்தை ஜாலங்கள் செய்து மக்களை அடிமை செய்து வாழும் வாழ்வு அறிவியல் என்றால் அறிவியல் என்ன நீங்கள் உலரும் வார்த்தைகளின் தொகுப்பு என்ற நினைப்பா?

இன்னமும் எத்தனை காலம் தான் நீங்களும் மயங்கி, மக்களையும்  மயக்கி வாழலாம் என்ற கனவு காண்கிறீர்கள்? உலகம் உருண்டை என்பதே தேறாமல் அதைப் பாயாக சுருட்டி மறைந்த மனிதர்களைப் பற்றியக் கதைகளின் தொகுப்பு தானே ஹிந்து மதம்!

ஹிந்து மதம் அறிவியல் என சொல்லும் அறிவாளிகள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஆங்கிலக் கல்வி படிப்பதை நிறுத்தி விட்டு ஹிந்து மதத் தத்துவங்களைப் படிக்க வைத்து அதன் மூலம் இந்த சமூகத்தில் அறிவியல் சிந்தனை மேலும் வளர வகை செய்யுங்கள். 

ஏற்கெனவே கொஞ்சம், கொஞ்சம் மயங்கித் திரியும் மக்களுக்கு ஜோதிடம் என்னும் அறிவியல் கற்றுத் தருகிறேன் என இணைய வகுப்புகள் நடத்தி அடுத்த தலைமுறைக்கும், எல்லோருக்கும் அறிவியல் சிந்தனை பரப்புகிறார்களே!, நிறையப் பேர் வாருங்கள்! அரும்பணி ஆற்ற! நம் ஹிந்து மதம் வாழ!

N.S. கிருஷ்ணன்

கலைஞர் தொலைக்காட்சியில் திரு. N.S. கிருஷ்ணன்  அவர்களது வாழ்க்கை சம்பவங்கள் காட்டப் பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும்.


நிகழ்ச்சியில் காட்டப்படும் படத்தொகுப்பில்  ஒரு படக்காட்சியில் முதல் தேதி படம்(1955) கீழ்க்கண்ட உரையாடல் இடம் பெறுகிறது:

இடம்: சமையல் அறை:
காட்சி: பணியாள் புகைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார் அங்கு n.s.k  வருகிறார். கண்டதும் பணியாள் புகைப்பதை மறைக்கிறார். வாயில் இருக்கும் புகை அப்படியே வெளிவராமல் தங்கி விடுகிறது.

N.S.K: ரொம்ப  நாளா வீட்டில் சீனி தீர்ந்துபோரதுக்கு நீ தான் காரணமா?
பணியாள்: இல்லீங்க!
பேசும்போது புகை எட்டிப் பார்க்கிறது 

N.S.K  வாயில இருந்து புகை வருது?
பணியாள்: பனிக்காலம். அதுதான் பேசும்போது வருது
N.S.K வெயில் காலம்னா சாம்பல் வருமா?
பணியாள்: !!
பணியாள் கையில் இருந்த சிகரெட் பார்த்து விடுகிறார்.
N.S.K  என்ன இது சிகரெட் பிடிக்கிரியா? பிடிச்சா என்ன ஆகும் தெரியுமா? வாய் நாறும்! ஈரலக் கெடுக்கும். எழும்ப உருக்கும்! ஆயுளைக் குறைக்கும்! குடிக்கலாமா?

அடி  கிடைக்கிறது!. தன் கையில் இருந்த சிகரெட் எடுத்துப் புகைக்கத் தொடங்குகிறார். பார்த்த
பணியாள் என்னங்க? என்னைக் குடிக்க வேணாம்னு சொல்லிட்டு நீங்க?

N.S.K  ஏன்டா? சொல்றவன் அப்படியே நடப்பான்னு  நினைக்கிறியா? மடையா! நான் மற்றவர்களுக்கு புத்தி சொல்ற வர்க்கம் சேர்ந்தவண்டா!


காட்சி மறைகிறது!

KAATCHI ( இங்கு சென்று இந்தக் காட்சி காணுங்கள் )

எத்தனையோ பாடம் சொல்லும் இந்தக் காட்சி!

சோதிடம் தனை இகல்! பத்து மாதப் பெண் குழந்தையை சோதிடம் காரணமாகக் கொன்ற தந்தை!

சோதிடத்தை நம்பாதே! என காளியை நம்பும் பாரதி, விவேகானந்தர், ராமகிருஷ்ணர் மற்றும் நமது சைவப் பெரியோர் நால்வரும் சொல்லிச் சென்றனர்!

சோதிடத்தை நம்பாதே! என நாத்திகத் தலைவர்களும், பகுத்தறிவுப் பெரியோர்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்!

நம்மில் யார் கேட்டோம்? அவர் சொல்வதை!
நம்பாதீங்கனு  சொன்னா, நீ என்ன  கடவுளுக்கு எதிரியா? எனக் கேட்கிறார்கள்!
எங்களின் ஆறாவது அறிவைக் கொண்டு இறை அருளால் நாங்கள் உனது எதிர்  காலத்தையும், அதில் ஏதாவது தீங்கு இருக்ந்தால் அதற்கான பரிகாரத்தையும் நீக்கி விடுவோம் என்று சொல்லி காசு பார்கின்றனர். இது மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கு பாடமும் சொல்லித் தந்து வாத்தியார் பட்டம் பெறுகின்றனர்.
எங்கே நாம் சொல்வது பலிக்காதோ என பயந்து இருக்கும் எல்லாவிதக் கெட்டதுகளையும் சொல்லி நம்மை பயமுறுத்திவிட்டு பின்னர் அது நடக்கவிட்டால் நீங்கள் இறைவனை நம்பியது வீண் போக வில்லை எனக் கதை அளக்கின்றனர்.

இவ்வளவும் மறுபடி எதற்கு எழுதுகிறேன்?

காரணம்: பத்து மாதப் பெண் குழந்தையை சோதிடம் காரணமாகக் கொன்ற தந்தை!
மனிதன் இந்த மட்டில் தரம் தாழ்ந்துப் போகக் காரணம்?
அவனது மூட எண்ணம் இல்லாமல் வேறு என்ன?
அன்று கம்சன் அரக்கன்! இன்று இதைப் போல் எத்துணை பேர்?
இதற்கெல்லாம் காரணம் இந்த முட்டாள் தனமான சிந்தனையை நம்மிடம் பரப்பும் இந்த சோதிடர்கள் தான்!

இவர்களுக்கு துணை நிற்கும் இந்த மீடியாக்களை யார் கேட்பது?
நித்யானந்தர் விசயத்தில் மீடியா செய்யும் அநியாயத்தை கேள்வி கேட்கும் மனிதர்கள் கேவலம் பணத்துக்காக நமது சிந்தனைக் கெடச் செய்யும் இந்த ஜோதிட நிகழ்ச்சிகளை நடத்தும் மீடியாக்களை நோக்கி விமர்சனம் செய்யாததன் காரணம்?

தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்பது அல்லாமல் வேறு என்ன?

விளக்கு வச்ச நேரத்தில!
கலைஞர் தொலைக்காட்சித் தொடரில் நன்கு படித்த சீட்டு நிறுவனம் நடத்தும் ஒரு தந்தை கேவலம் ஒரு ஜோதிடர் சொன்னதை நம்பி தன் மகள் திருமணத்தை நிறுத்திய அவலத்தை எங்கு சொல்ல?
இதைப் பார்க்கும் நம் போன்ற சாதாரண மக்கள் நிலை?

மானமுள்ள எந்த மனிதனும் நிச்சயம் ஒரு உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். ஜோதிடத்தை எந்தக் காரணம் கொண்டும் நம்ப மாட்டேன் என!
முடியுமா உங்களால்?

என்னை ஏதாவது திட்டவேண்டும் என நினைத்தால் முதலில் பாரதி, விவேகானந்தர் உள்ளிட்ட மனிதர்களைத் திட்டி விட்டு பின்னர் என்னை திட்டுங்கள்.

நித்யம் ஆனந்தமாக!(2)

நித்யம் ஆனந்தமாக இருக்க சொன்னவரை ஹரிதுவாரை நோக்கித் துரத்திய ஊடகங்களை
நோக்கி ஒரு கேள்வி? நீங்கள் நாளும் நாளும் நடத்தும் நிகழ்ச்சிகளில்  எத்தனை எத்தனை கீழ்த்தரமான சிந்தனைகளை மக்களுக்குத் தருகிறீர்கள். உங்களைக் கேட்பார் யாரும் இல்லையா?

காவி கட்டி, அரசன் மனைவியுடன் கூடிய, ஆதி சங்கரர் வழியில்!
இன்னமும் வரலாற்றின் பக்கங்களில் தேடினால் தெரியும் துறவிகள் எப்போதும் துறவிகள் அல்ல என.

மக்கள் ஏன் இப்படி காவி கட்டிய மனிதர் பின்னால் போகிறார்கள்?
தங்களால் மனதாலும் நினைவாலும் சில நிமிடங்கள் கூட விட்டு விட முடியாத உறவுகளையும், உணர்வுகளையும் விட்டு விட்டு வாழும் இவர்கள் எத்தகைய மன உறுதி கொண்டவர்களாக இருக்க முடியும்? என நினைத்து இவர்கள் நிச்சயம் தங்களை விட மேலானவர் என முடிவு செய்து அவர் காட்டிய வழி செல்ல முனைகின்றனர்.

துறவியின் காலில் விழும் காரணமும் இதுதான். எப்போது ஒரு துறவி இந்த நிலையில் தவறி விழுகிறானோ அப்போதே அவன் வார்த்தை மதிப்பிழந்து விடுகிறது.
இதுவரை எந்த துறவி சொன்ன வாக்கும் புதியது அல்ல. ஆனால் ஒவ்வொரு சமூகத்திலும் அந்த அந்த காலங்களில் வேறு வேறு நிலையில்  சிந்திக்கும் திறன் கொண்ட மனிதர்கள் கிடைக்கிறார்கள். அவர்களின் சிந்தனையே சமூகத்தை வழி நடத்தும். இதுவரை எந்த ஒரு துறவியும் சமூகத்தை சமூகத்தின் காரணம் தொட்டு வழி நடத்தி இருக்கிறாரா என்பது விடை சொல்ல முடியா கேள்வி.

சங்கர மடத்தின் அன்பு வழியில் ! சென்ற , நாம் அறியக் கிடைத்த நம்மை மேன்மைக்கு உள்ளாக்கிய நம் உள்ளக் கதவுகளை திறந்து வைத்த மாமணியை,  நித்யம் ஆனந்தம் கொள்ளத்தக்க சிந்தனைகளை நமக்கு அள்ளித்தந்த மனிதரை நாம் துன்பமடையச்  செய்யலாமா?

சில ஊடகங்கள் கேள்வி கேட்கின்றன. நித்யானந்தர் எப்போது சொன்னார் தான் துறவி என? அவரது படுக்கை அறையில்  நுழைய நமக்கு என்ன உரிமை ?

நம் சமூகத்தில் எதுவும் சொல்லி புரியவேண்டியது இல்லை. காவி கட்டினால் அவர் துறவி இது தான் அவரது வடிவம். எப்போது ஒருவன் காவி கட்டினானோ அப்போது அவன் துறவி. இந்த பிம்பம் வைத்து இந்த சமூகத்தை வழி நடத்த முனைந்த மறுகணம் அவன் சிலக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவன் ஆகிறான்.  அவற்றில் ஒன்று அவனது படுக்கை அறையும் திறந்த புத்தகம் எனக் காட்ட வேண்டியதும் ஒன்று.

சன் டிவி எதோ இப்போது தான் படுக்கை அறைக் காட்சியை நமது வீட்டு வரவேற்பறையில் முதல் முதலாக காட்டுவது போல் நம் பதிவர்கள் எழுதுவது வேடிக்கை. நாம் பார்க்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இப்படித் தானே இருக்கின்றன. ராமாயணம், மகாபாரதம், விக்ரமாதித்தன் கதைகளில் இல்லாத
ஆபாசமா இவர்கள் காட்டி விட்டனர்?
கவிஞர்கள், எழுத்தாளர்கள் என சொல்லிக் கொள்ளும் எத்துணைப் பேர் தங்கள் படைப்புகளை ஆபாசத்தால் நிரப்பி அளிக்கின்றனர்? இவர்கள் சிந்தனை வரைமுறைக்கு உட்பட்டதல்ல எனும்போது?
சன் டிவி செய்த இந்தச் செயலால் எத்தனைப் பேரின் முகமூடிக் கிழிந்து அழுக்கும், நாற்றமும் வெளியாகிறது. இதற்கு நன்றி!

ஒன்று மட்டும் தெளிவு. வெளியாகும் ஒவ்வொரு செய்திக்கும் மதச் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் பார்க்கும் மனநிலை நம் மக்களை விட்டு நீங்கவில்லை என்பதற்கு நேற்று வெளி வந்தப் பதிவுகளும், அதன் பின்னூட்டங்களும் சான்று.

வேடிக்கை என்னவெனில் மதச் சார்புடையவர் நித்யானந்தர் செய்தது எந்த மனிதனும் செய்வது! அவர் படுக்கை அறையை அம்பலப் படுத்தியது சன் டிவி குற்றம் என பழி சுமத்தியது! 

சாமியாரின் சேவை !

மக்களின் நலனில் அக்கறை கொண்ட சாமி ஒருவர்(ஒருத்தன்), பன்னாட்டு விமான நிறுவனத்தை சேர்ந்த சிலருடன் சேர்ந்து நம் ஐந்து நட்சத்திர வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து உள்ளார்.  இவர் செய்த சேவையின் மதிப்பு பல மில்லியன் பவுண்ட்  ஆக இருக்கலாம்.  ஒரு சாமியார் தனது வியாபார திறன் மூலம் எத்தனை சேவை செய்துள்ளார் என்பதை நினைத்தால் பெருமை கொள்கிறோம்.

இவர் பெயர் ஷிவ் மீரா த்விவேதி . டெல்லியில் உள்ள ஒரு கோவிலை இதற்கான வரவேற்பு நிலையமாக பயன்படுத்தி உள்ளார்.  ஏறத்தாழ 200 பெண்கள். அவர்களில் விமானப் பணிப்பெண்கள், மாணவிகள் அடங்குவர்.  லட்சம் பேர் இவரது ஆன்மீக வழியை பின்பற்றுவதாக சொல்லப் படுகிறது.

இவரைப் போல சாமியார் சேவை இன்னமும் எங்கெங்கு நடைபெறுகிறதோ?
இவர்கள் தங்களை காத்துக் கொள்ள நமது நம்பிக்கை காரணமாய் இருப்பது வேடிக்கை !
மக்களே காவி கட்டியவனை எல்லாம் நம்புவதால் வரும் வினைகள்?

இவன் ஒரு நாளேனும் பொய்யாகவேனும் ஈசனை கும்பிட்டு இருக்க மாட்டானா?
ஐந்தறிவு ஜீவனுக்கெல்லாம் முக்தி கொடுத்து ஆட்கொண்ட ஈசன் இவனுக்கு புத்தி ஏதும் தரவில்லையா?
அல்லது இவனுக்கேனும் தெரியுமோ? ஈசன் இதை எல்லாம் வந்து கேட்க மாட்டார் என!

கணிணிக்கு ஏற்ற மொழி தமிழ்

சில நாட்களுக்கு முன் தமிழ் இணையத்தில் பக்கங்கள் பார்த்திருந்தபோது கணிணிக்கு ஏற்ற  மொழி தமிழ் என சொல்லி இருந்தது.

இதைப் பற்றி மேலும் தேடியபோது sanskrit மொழி கணினிக்கு ஏற்ற மொழி என ஆய்வு செய்துள்ளதாக யாரோ எழுதி இருந்தனர்.

இந்த இரு முடிவுகளும் எதை சொல்கின்றன என எனக்குப்  புரியவில்லை. கணிணிக்கு என C மொழியும் அதைத்தொட்டு வேறு ஜாவா, html ஆகியனவும் இருப்பது அறிகிறேன். இவற்றில் எங்கு மனிதர் பேசும் மொழிகள்  தமிழ், sanskrit வருகின்றன?

எனக்கு எதோ இவர்கள் சொல்வது புரியவில்லை என அறிகிறேன். யாராவது சொல்வீரா?

செம்மொழி  தமிழ் அறிவியல் படைப்புகளைக் கொண்டு உள்ளதா? தற்போதைய அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் கொண்டுள்ளதா? இல்லை என்பதே விடை.
இதை சரி செய்வது அவ்வளவு எளிது அல்ல. உலகின் பெரும்பாலான ஆராய்ச்சி இதழ்கள் english உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் தான் உள்ளன. இவற்றை தமிழில் மொழி பெயர்ப்பது நிச்சயம் கால விரயம் என்று சொல்ல முடியாவிட்டாலும் அது தான் உண்மை.

தாய் மொழியில் படிக்கும் ஜப்பான், ஜெர்மனி, சீன மக்கள் அனைவரும் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் தான் வெளி இடுகின்றனர் .(பெரும்பாலும்)

ஆங்கில அறிவு இருந்தால், கற்கும் ஆர்வம் இருந்தால், தற்போதைய எந்த அறிவு இதழ்களையும் கற்று நம் அறிவை விரிவாக்கலாம். ஆனால் இந்த நிலை தமிழ் மட்டும் அறிந்த, கற்கும் ஆற்றல் உள்ளவருக்கு கிடைக்க நீண்ட காலம் ஆகும்.
புதிய கண்டுபிடிப்புகள் தமிழ் மூலம் வருவது கடினம். ஏனெனில் அதற்கென அடிப்படை அறிவு சொத்துகள் தமிழில் இல்லை. எந்த ஒரு புதிய அறிவியல் கலை சொல்லும் உலகின் எல்லோராலும் ஏற்கத்தக்க சொல்லாகவே இருக்க வேண்டியது அவசியம்.
அதனைத் தமிழ் செய்வது ஒரு புதிய கண்டுபிடிப்புக்கு  ஈடு.

ஆனால் அறிவியலின் பலன் எல்லோரையும் சென்று அடைய அது வட்டார மொழிகளில் பயனாளி இயக்கும் வழியில் வேண்டும்.

விவசாயத்துக்கு வயலும், வாழ்வும் போல. வேளாண்மையில் நாள்தோறும் ஏற்படும் முன்னேற்றங்கள் தமிழில் இல்லாவிட்டாலும் ஒரு அறிஞர் அதன் பயனை தமிழில் சொன்னால் போதும்.

இதைப் போலவே எல்லா அறிவியல் துறை முன்னேற்றங்களையும் தமிழில் செய்தியாக வெளியிடலாம். இதற்கு நாம் கலைச்சொல் அகராதி உருவாக்க வேண்டியதில்லை.

விண்டோஸ்? டெஸ்க்டாப்? இப்படி மொழி பெயர்ப்பது சரியா?
html, C, php, இதை எல்லாம் எப்படி பெயர்ப்பது?

நாம் எல்லோரும் அறிந்த cos, sin, tan இவற்றை எப்படி பெயர்ப்பது?
விலங்கு, தாவர அறிவியல் வகைப்பாட்டியல் பெயர்களை?

ஒரு தனி மனிதனுக்கு வேண்டிய அறிவியல் அறிவு அவன் மொழியில் கிடைக்க முதலில் முயல்வோம். அவன் பயன் படுத்தும் சாதனங்களை முதலில் அவன் மொழியில் பயன் செய்யும் நிலை உருவாக்குவோம்.

புதிதாக உங்கள் துறைகளில் நீங்கள் உண்டாக்கும் மாற்றங்களை தமிழ் செய்ய முயலுங்கள்.அறிவியல் தவிர்த்த மற்ற கலை, ஆராய்ச்சிகளை தமிழில் பெயர்த்தல் சிரமமாக இராது. அதை முதலில் செய்வோம். நம் அடுத்த தலைமுறை அடிப்படை அறிவை சிரமம் இல்லாமல், வெட்கம் இல்லாமல் தமிழில் பெற முயல்வோம்.
ஆங்கிலத்தைத் திறனுடன் படித்து அறிவைப் பருக்கும் வண்ணம் பழக்குவோம்.

நெருப்பு நரி வாழ்விடம் -மொழி -நாடு

நீண்ட நாட்களாக 
நான் கூகிள் மூலம் நெருப்பு நரியில் தேடி ஒரு இணைய தளம் செல்லும்போது அந்த இணைய தளத்தின் மொழி நான் இருக்கும் நாட்டின் மொழியாகவே உள்ளது. உதாரணமாக ஒரு பிளாக்கர் பயனரின் profile இங்கிலீஷ் அல்லாத மொழியாகவே உள்ளது. எனது இணைய தொடர்பை வைத்து இந்த உலவிகள் நான் இருக்கும் பகுதி தொடர்பான மொழி கொண்ட இணைய தளம் தருவது என்னைப் போன்ற மொழி அறியாத மக்களுக்கு மிக்க துன்பம்.

இதை எப்படி சரி செய்வது என நான் பல இடங்களில் தேடி செய்த பரிகாரங்களும் பலனளிக்கவில்லை,

முதலில் கணிணி control panel  சென்று உங்கள் மொழி, நாடு மாற்றுங்கள் என்று ஒருவர் சொன்னார். செய்தேன் பலன் இல்லை,

google chrome  இதைப் போல் geoposition கொள்வது இல்லை என ஒரு நண்பர் சொன்னார். அங்கேயும் இதே தொல்லை,

நெருப்பு நரியில் தேடி அவர்கள்(mozilla) இணையத்தில் கொடுத்த செய்திபடி about:config சென்று சில மாற்றம் செய்தேன். பயன் இல்லை.

நான் விரும்பும் இணைய தளம் ஆங்கிலத்தில் இருந்தாலும் இவை வேற்று மொழியில் வருவதை எப்படி தடை செய்வது என என்னால் அறிய முடியவில்லை.

இதனை எப்படி சரி செய்வது என யாராவது சொல்லுங்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நெருப்பு நரி இப்படி தளத்தை மாற்றிக் கொடுத்தது அல்லாமல் இது வேறு மொழி ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து இந்த தளம் காண்பிக்கவா ? என கேட்கிறது. என்ன பதில் சொல்ல?

சாதிகள் நம் அடையாளங்கள் !

இந்தியாவின் வட மாநிலங்களில் எல்லோரது பேரிலும் எதோ ஒன்று ஒட்டி இருக்கும்.
அது சாதிப் பெயராக இருக்கும் அவசியம் இல்லை. ஆனால் அதன் மூலம் அவரது சாதி அறிதல் எளிது. இந்த ஓட்டுப் பெயர் மூலமே பொது இடங்களில் அவர் அறியப் படுகிறார். ஆனால் மிக நெருக்கமானவர்களுக்கு அவர் பேர் அவர் அப்பா வைத்த பெயர் தான்.

பெரியார் போன்ற அரிய தலைவர்களின் முயற்சியால் நம் பெயரில் ஒட்டிய சாதிகள் நம்மை விட்டு விலகி ஓடின. பாரதி, வ.வு.சி இவர்கள் தங்களை தங்கள் சாதிப் பெயர்களிலேயே அழைத்து வந்துள்ளனர். அப்போதைய வழக்கம் அப்படி. அவர்கள் சாதிக்காக கொடி தூக்கினர் என்று சொல்ல முடியாது?  பெரியாரை நாயக்கர் என்று அளித்த சமூகம் நமது.

ஆனால் காமராஜ் , சிவாஜி , கருணாநிதி இவர்கள் பெயர்கள் பின்னால் சாதி சேர்த்து பாருங்கள். எவ்வளவு கீழாக இருக்கும் எனத் தெரியும்.  என் பெயரின் sur name  என் தந்தை பெயர், என் தாயின் பெயர், என் ஊரின் பெயர் இப்படி ஏதாவது இருந்தால் என்ன குற்றம்?
ஆனால் இதில் என் சாதியை நான் இப்போது சேர்த்தேன் என்றால் ?

இன்று நான் சந்திக்கும் பெரும்பாலான மக்கள் தாங்கள் இந்த சாதி என்று பெருமை கொள்வது இல்லை. ஒரு வேளை என்னுடன் இந்த சாதி ஒட்டி இருந்து இருந்தால் என்னை மற்றவர் நடத்தும் வகை ? நான் மற்றவரை நோக்கும் நிலை?

எதோ எங்கோ ஒரு மன மூலையில் பதுங்கி இருக்கும் இந்த சாதி பற்று நம்மை விட்டு நீங்க அதன் அடையாளங்களை நாம் நீக்க வேண்டும் நிச்சயமாக. பூநூல் அறுத்ததும் இதனைத் தொட்டே!

நம் தமிழ் மக்கள் தங்கள் பெயரில் நீக்கிய சாதியை சமூகத்தில் இருந்து நீக்கினால் எங்கு தம் தலைமையும், தனி தன்மையும் போய்விடுமோ என்ற அச்சத்தில் அவ்வபோது சில தலைகள் சாதிப் பெயரின் பெருமையை தலை தூக்கி விட முயல்கிறது.

சங்கங்கள் சார்பில் கட்சிகளை உருவாக்கி பிரிவு செய்யும் கயமை எண்ணம் கொண்டவரை நாம் விலக்குவோம்.

சாதி சங்கங்கள் இல்லாது ஒரு சமூகம் நம் பிள்ளைகள் காலத்திலேனும் உருவாக்குவோம். நம் சாதி அடையாளங்கள் நம் பிள்ளைகளை அடையாமல் காப்போம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
பிறப்பின் வழி வரும் இந்த அடையாளங்களை அறவே ஒழிப்போம்!

நீ இன்ன சாதி! என்பதை நீ! தான் நிச்சயம் செய்ய வேண்டும் உன் தந்தை அல்ல!

விளக்கு வச்ச நேரம் --2

அன்பு வாசகர்கள் எதிர்பார்த்ததுபோல நம் விளக்கு வச்ச நேரத்.... கதை தலைவி , ஜோதிடர் கணித்தது போல் காத்திருந்த நல்ல பாம்புவினால் கடிபட்டார்.  இவர் கதைத்  தலைவி என்பதன் காரணமாக நம் வாசகர்கள் எண்ணியது போல் காப்பாற்றப் படுகிறார்.

நல்ல வேளை இவர் ஜோதிடத்தை நம்புவது போல் மிக அழுத்தமாக காட்ட வில்லை.
அம்மாவின் மூட நம்பிக்கையில் இருந்து தப்பிக்க இவர் படும் பாடு மிக அழகாக காட்டப் பட்டுள்ளது. மூட நம்பிக்கையில் மூழ்கிவிட்ட இவரது அம்மாவினைப் பார்த்தேனும் நம் மக்கள் இத்தகைய எண்ணங்கள் இல்லாமல் இருப்பார்களா?

பெண், பாம்பு கடிக்கவில்லை! என்று கூறியும் நம்பாத தாய் ! தன் மகளை மட்டும் கால் கழுவ சொல்லும் சுயநலம். இந்த காலத்திலும் சனி வந்து காலில் அமரும் என்ற மூடத்தனம்.

ஒரு நம்பிக்கை மட்டும் தானே என்று நம்பத் தொடங்கினால் காணும் எல்லா மூட எண்ணங்களும் நம்மை சூழும் என்பதற்கு நல்ல காட்டு இந்த அம்மா.

இதன் பின் நமது சிறப்பு ஜோதிடர் இந்த பெண்ணை பாம்பு கடித்து இருந்திருந்தால்  இந்த பெண் இரு தார மணம் செய்வது மட்டும் இன்றி ஒரே நேரத்தில் இருவரோடும் ஒரே வீட்டில் வாழ்வார் என்று கணித்துக் கூறும் திறன் வியக்கத்தக்கது.

இந்த பாடத்தை இவர் எங்கு கற்றாரோ?
இந்த வகையான செயல்திறன்மிக்க ஜோதிடர் இன்னும் நிறைய பேர் வேண்டும்!
நம் அரசு இரு தார மணம் சட்ட விரோதம் என சொல்லி இருப்பது இவருக்கு தெரியுமோ?

ராமாயணம் போன்ற பழங்கதைகள் இந்த நிகழ்வுகளை கொண்டு இருந்து அதைக் காட்டினால் நாம் இந்த அளவு அதைப் பற்றி சிந்திப்பது இல்லை. ஏனெனில் எல்லாம் பழங்கதை தானே! நம் பிள்ளைகள் கூட நம்பாது! ஆனால் நம் தாய்குலம் நம்பும்!

ஆனால் ஒரு சமூகக் கதையில் வீட்டில் வேளை கழிக்கும் பெண்களை தன் தொடர் பக்கம் இழுக்க இவர்கள் செய்யும் கீழ்மைக்கு என்ன முடிவு?

இவர்கள் தான் சிந்தனையாளர்களா?

விளக்கு வச்ச நேரத்திலே




நம் கலைஞர் தொலைக்காட்சியின் புதிய மக்கள் தொடர். பார்த்தவர்களை அறிவு வெளியில் முன்னேற்றும் தொடர்.
நமது பரந்த அறிவை மேம்படுத்தும் தொடர்.

ஜோதிடம் என்ற நமது அறிவுக்கு எட்டாத ஒன்றை சொல்லி அதனை எல்லோரும் பார்க்க வலியுறுத்தி  வருவது.

நல்ல புகழ் பெற்ற ஜோதிடர் உங்களுக்கு என்ன எந்த நேரத்தில் நடக்கும் என்பதை நிச்சயம் சொல்வார் என முன் நிற்பது.

இதை எல்லாம் நம் மக்கள் எங்கே நம்பி விடாமல் போய் விடுவார்களோ என்ற சந்தேகம் தீரவும், நம்மை மேலும் அதனை நம்ப செய்யவும், நம் மனதில் எழும் கேள்விகளை இவர்களே  எழுப்பி நம் கேள்விகள் தவறு என்று மிக அழகாக வெளிப்படுத்துகிறார்கள்.

"ஜோதிடம் தவறு" என்று சொல்வதாக இவர்களே காட்சி படுத்தி அப்படி சொன்னவர் ஜோதிடத்தை நம்பாததால் அடைந்த துன்பத்தை நமக்கு எடுத்து சொல்லி
நம் அறிவுக் கண்ணை திறந்து வைக்கின்றனர்.

இதில் வரும் முக்கிய காட்சியே " இளம்பெண் ஒருவர் ஜோதிடர் சொன்னது போல் பௌர்ணமிக்குள் பாம்பால் கடிபடுவதே."  ஆனால் காட்சிப்படி இந்த பெண் ஜோதிடம் நம்பாதவர். ஆனால் இவரைப் பாம்பு கடித்து விடுகிறது. இப்போது இவர் ஜோதிடம் நம்புகிறாரோ இல்லையோ நம் மக்கள் நிச்சயம் நம்பி விட்டனர்.

ஆபாசம் கூட நம் அறிவை அந்த நேரம் மட்டுமே மழுங்க செய்யும். ஆனால் இவர்கள் பரப்பும் இத்தகைய பொய்மைகள் நம் சமுதாயத்தை அடி பணிந்து வாழ செய்து நம்மை நாசம் செய்யும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் நம் எதிர்காலத்தைக் கண்டுபிடித்து சொல்லும் இந்த ஜோதிடர்களை நாம்  நம்பி வாழமுடியுமா?

ஏன் இவர்களே தாம் சொல்வது சரி என்று காட்ட ஏதாவது தவறான செயல்களை செய்யக் கூடாது?

வாழ்வது ஒரு முறை! பயம் இல்லாமல் வாழப் பழகுவோம்!