மதங்கள் மனிதனை ஆளலாமா--- ஐம்பதாவது இடுகை நோக்கி!

ஒவ்வொரு மத ஈடுபாடு கொண்டவரும் தன் மதத்தின் சிறப்பை மற்றவருக்கு விளக்க முனைவது சரியா?
இந்த கேள்விக்கு விடை நேரடியாக சொல்வது சிலருக்கு வருத்தம் தரும் நிச்சயம்.
அறிவியல் கருத்துகளை ஒரு மத நூல் சொல்கிறது என்பதற்காக மதம் உயர்ந்ததாகிவிடுமா?அது சரி இது வரை எந்த மத நூல் அறிவியல் சொல்லி இருக்கிறது எனக் கேட்பவர்கள் மத நூலை துருவி துருவி தேடி மக்களைக்  கவர முனையும் அன்பு பதிவர்களிடம் சென்று கேளுங்கள் வண்டி, வண்டியாக சொல்வார்.

டார்வின் கொள்கை ஒன்று இருக்கிறது. அது நிரூபணம் செய்யப்பட்டது/ உயிரியலின் அடிப்படையே அதன் மீது தான் என ஏற்றுக் கொள்ள மறுக்கும் கொள்கையின் மீது கட்டப் பட்ட மத நூல்களில் அறிவியல் கருத்து இருக்கிறது என்று தேடும்  மனிதர் கடையில் சென்று சில நூறுகளில் கிடைக்கும் நல்ல அறிவு நூலை வாங்கிப் படித்தால் உண்மை விளங்கும் என அறியாரோ?

அறிவியல் என்பது என்ன? கேள்வியின் பதில்கள்  தானே? யார் யாரோ கேட்ட கேள்விகளின்  பயனை நாம் நுகர்ந்து கொண்டே இதை எல்லாம் நமக்கு நம் கடவுள் ஏற்கெனவே சொல்லி விட்டார் என்பது எத்தனை அறிவீனம்?

மத நூல் என்பது என்ன. நான் சொன்னது சத்தியம். நம்பு. நிச்சயம் நடக்கும் என சொல்லும் கண்மூடி மூட சிந்தனை தானே? இதுவரை எந்த மத தலைவனாவது உண்மை காண இது வழி என்று சொல்லி இருக்கிறார்களா? கேட்டால் கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்! எனும் தத்துவம்.

அதான் சொல்றவன் நிச்சயம் பார்த்திருக்க முடியாதுன்னு தெளிவா நீங்களே சொல்றிங்களே, அப்புறம் எதற்கு தெரு தெருவுக்கு பிரச்சாரம். எல்லா ஊடகங்களிலும்
எப்போதும் சொல்லி சொல்லி திரிகிறீர்கள்?. எங்கே சொல்லாமல் விட்டால் நமது வாழ்வு போய் விடும் என்ற பயம் தானே?

பெரியார் சொன்னார் மலத்தில் அரிசி தேடுவது போல்... மத நூல்களில் அறிவு இருக்கிறது என்பது என.  இந்த உண்மையும் நம்மில் பலருக்கு தெரியும். இருந்தாலும்??

கற்பனையிலேயே இருந்த நம்மை ஒளியின் வேகத்தை அறிய வைத்த அறிவியலின் துணை கொண்டே நாம் நம் அறிவை மூடும் சிந்தனைகளை வளர்த்து வருகிறோம் என்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது!

இறை தத்துவ நெறிகளைத் தேடும் மனிதர்களே, உங்கள் மன அமைதிக்கு வழி தேடும் மனிதர்களே, மறந்தும் பிறர் பொருள் மீது பற்று இல்லாமல் வாழ உங்களைப் பழக்கி கொண்டால் மனம் அமைதி பெற்று பாபா முதல், சாயா வரை கண்ட அமைதி நிலை நிச்சயம் உங்களை அடையும். அவர்கள் அமைதி கண்டார்களா என்பது வேறு விஷயம்!

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மனதில் நிச்சயம் நீங்கள் உண்மை என நம்புவது உண்மையாக இருக்க , பொய்யாக இருக்க வாய்ப்பு சம அளவு அது நிரூபணம் ஆகும் வரை!

ஐயோ! கடவுள் ஒரு வேளை இருந்துவிட்டால் நான் சொர்க்கம் போக வேண்டி விரதம் இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னால்? நான் பொறுப்பு அல்ல.

2 comments:

இறைய‌டிமை said...

nanpa kadavul entha mathathayum padaikavillai kadvul manithanukku valikadiyakathan irukirar..Darvin kolakai poi entru 100% nirupikka paddu vidathu adai padiyungal..
ungal pathippukalai nan padiththukondu irukiren intha oru pathivai parthu inimelum unga pathivai padikka manam yosikuthu arivudan elutha paddadu illai etho onrin meethana kalpunarchi karanamaka therikirathu..

நாளும் நலமே விளையட்டும் said...

இறையடிமை

நீங்கள் எழுதியது-தமிழில்?
//நண்ப கடவுள் எந்த மதத்தையும் படைக்கவில்ல கடவுள் மனிதனுக்கு வலிகடியகத்தான் இருக்கிறார் ..
டார்வின் கொள்கை பொய் என்று 100% நிருபிக்க பட்டு விடாது ஆடை படியுங்கள் ..
உங்கள் பதிப்புகளை நன் படித்துகொண்டு இருக்கிறேன்
இந்த ஒரு பதிவை பார்த்து இனிமேலும் உங்க பதிவை படிக்க மனம் யோசிக்குது
அறிவுடன் எழுத பட்டது இல்லை எதோ ஒன்றின் மீதான கல்புணர்ச்சி காரணமாக தெரிகிறது //

கடவுளையே நாம் தானே படைத்தோம்!-அவர் எங்கிருந்து மதம் படைப்பது?
உங்களுக்கு அறிவியல் பற்றி எதுவும் தெரியாது என்பது நீங்கள் சொன்ன ஒரே கருத்து'
டார்வின் கொள்கை பொய் என்று 100% நிருபிக்க பட்டு விட்டது?
உங்களுக்கு வேண்டிய நண்பர் யாராவது அறிவியல் தெரிந்தவராக இருந்தால் அவருடன் பேசி உங்கள் கருத்தை பரிசீலிக்க முயலுங்கள்!

என் பதிவை நானே படிப்பதில்லை! இதில் மற்றவர் படித்தாரா என்பது? நான் யோசிக்கவேண்டியது அல்ல.