சோதிடம்


சோதிடர்களை நம்பி தன் மானத்தை இழந்த தமிழ் மக்களில் பலரில் நீங்கள் கீழ் காணும் செய்தி மிக வியப்பளிக்கும்.

ஆடைகளை துறந்து நாடு வீதியில் நள்ளிரவில் சென்று கோயில்களில் வழிபட்டால் தன் எண்ணம் நிறைந்த தன்னை நீங்கி ஓடிய காதலன் தனக்கு கிடைப்பான் அன்று சொன்ன பொய்யே வாழ்க்கையாக கொண்ட ஒரு கயமை குணம் கொண்ட சோதிடனை நம்பி   இவள் தெருவில் இறங்கி நடந்து இருக்கிறாள்?


சோதிடம் பொய் என்று நாளும் எத்தனை தடவை சொல்லி கத்தினாலும் அது அறிவியல் என்று காசு பார்க்கும் மக்களின் குயுக்தியால் தம் வாழ்க்கை சீரழிந்த  மக்களைக் கண்டேனும் நாம் திருந்தக் கூடாதா?

என் செயல் படி தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று என்னும் குறுகிய சிந்தனை கொண்ட மனம் தான் இவற்றுக்கு எல்லாம் காரணம்! எஹ்டையும் ஏற்றுக் கொண்டு தம் வாழ்வை மிக சிறப்பாக நடத்தி சென்ற எத்தனையோ மனிதர் வாழ்ந்த இவ்வுலகில் இப்படியும் மனிதர்கள்! 


இந்த பெண் படித்து பயன். தன் அறியாமை நீக்கும் கல்வியில் காணாத உண்மையை இந்த சோதிடனின் வாக்கில் கண்டு விட்ட பைத்தியம் தான் இவள்!

காதலனை அடைவதற்காய் நிர்வாணமாய் கோயில்களுக்கு அலைந்த பெண்

ஓடம் கரையினிலே!

வாழ்க்கை!

எங்கு போய் எப்போது நிற்கும் என அறிய
முடியாத ஒரு பயணம்! 

துவங்கியதும் சில -நேரம், எடுத்த அடி வைக்கும் முன்னே
சில நேரம்!

இந்த பயணத்தின் முடிவில் என்ன இருக்கிறது? 
எதை நோக்கியது இந்த பயணம்?

நோயில்,விபத்தில்,பொறாமையில், எனப் பல காரணங்கள் 
பயணம் -விடுபட!

பயணத்தை முடித்தவர் யார்? பயணம் இந்த திசை தான் என அறிந்து
பயணித்தவர் தான் யார்?

எங்கேனும் ஒரு வழிகாட்டி நமக்கு வழிகாட்டும், திசைகள் பல!

குறிக்கோள் ஏதேனும் உண்டா நம் பயணத்திற்கு?
மாறிய குறிக்கோள்கள் எத்தனை என்று கணக்கில் வைக்க முடியுமா?

வீழும் நிலையில் இருக்கும் பலரை விடுத்து வேகமாக நகர்ந்து விட்டோம்!
நாம் வீழும்போது நம்மை கை கொடுத்து காப்பவர் யார்?

தங்கும் மடம் நிறைய வழி நெடுகும்!
அவை நம் பயணத்தை தள்ளிப் போடவா? இளைப்பாறவா?
அல்லது அந்த மடங்கள் தான் நமது பயணத்தின் இலக்கா?


இறந்து விட வேண்டும் !

பட்டினத்தார்  போல் என் மனம் எதன் மீதும் பற்று வைக்காமல் வாழ முடியுமா என்னால்?
இறப்பது நீண்ட தூக்கம் என்று சொல்லும் எல்லா மக்களும் தூங்குவது போல் மிக எளிதான ஒரு செயலாக இறப்பும் இருக்க ஒரு வழி சொன்னால் பரவாயில்லை!

இறப்பு என்பது தான் என்ன? 

இந்த உடலை விட்டு உயிர் நீங்குவதா? 
இந்த உடலில் உயிர் எங்கு உள்ளது? 
உயிர்மெய் எழுத்தில் உயிர் எங்கு உள்ளது?
எழுத்தில் உயிர் இல்லை என்பதைக் குறிக்க தான் புள்ளி வைத்து அடையாளம் செய்கிறோமே தவிர உயிர்மெய் எழுத்தில் உயிர் தனியாக, அல்லது கலந்து இருப்பதைக் குறிக்க எதுவும்  இல்லையே!

இயக்கம் இல்லாத உடலில் உயிர் இல்லை என்பதானால் ? இயக்கம் உள்ள எல்லாம் உயிர் கொண்டதா? சிந்தனை செய்யும் மனம் கொண்ட மனிதனுக்கு உயிர் இருக்கிறதா? பிற உயிர்களை நேசிக்கும் ஒருவனுக்கு இருக்கிறதா? உயிர்களை வெறுப்பவனுக்கா?
உயிர்களை வெறுப்பவனுக்கு உயிர் எதற்கு? வாழ்வியலையே எதிர்க்கும் சிந்தனை கொண்ட மனிதனுக்கு உயிர் இருப்பதன் பயன் என்ன?

இறந்து விட வேண்டும் என்று எண்ணுவது கோழைத் தனமா? அல்லது இறக்க துணிவு இல்லாததா? ஒருவேளை வேண்டும்போது எல்லாம் இறந்துவிட்டு மீண்டும் வேண்டும்போது பிறக்கமுடியுமானால் நம்மில் எத்தனை பேர் இது வரை செத்து செத்து விளையாடி இருப்பர்?

மனித மனம் ஏன் இறப்பைப் பற்றி சிந்திக்கிறது? நம்மை நேசிக்க யாரும் இல்லை என்றா? அல்லது இதுவரை தான் அன்பு காட்டிய ஒருவர் நம்மை புறக்கணிப்பதை தாள மாட்டாமையா? தனது இறப்பே தன்னை புறக்கணித்தவருக்கு  தான்  தரும் தண்டனை என்று நினைப்பது எந்த அளவில் சரி?

தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள நினைக்கும் மனதின் ஒரு போராட்டம் தான் தற்கொலையா? தான் அனுபவப்பட்டு அறியாத ஒன்றை ஏன் மனம் அடைய முனைகிறது தன்னால் மீண்டு வரமுடியாது என்று அறிந்தபின்னும்?

மானத்தின் பால் பற்று கொண்டு தன் மானத்துக்கு இழுக்கு வந்தபின்னால் வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர்நீத்த மனிதர்கள் நமக்கு சொல்ல முனைவது என்ன? இறந்து தன் இருப்பை உணர்த்தும் மாண்புடைய பெரியோர் பலர் வாழ்ந்த மண்ணில் தற்கொலை எண்ணி சிந்திக்கும் மனதை என்னவென்று சொல்வது? பல்லாயிரம் பேர் வாழும் இந்த மண்ணில் தனது வாழ்வை செம்மையாக வாழும் மனிதர்கள் எத்தனை  பேர்? அதில் எத்தனை பேர் எத்தனை முறை இறப்பை வேண்டி இருப்பர்?
 
பிறவற்றின் மீது பற்று இல்லாமல் வாழ்வது இறப்பை நோக்கிய பயணமா? அல்லது வாழ்வை நோக்கிய பயணமா? பற்று இல்லாத நிலையில் மனது எதையும் முழுமையாக நோக்குவது உண்மை தானே?  அப்படி எனில் அது முழுமையாக வாழும் வாழ்வாகுமா? அனுபவிப்பது வாழ்வா? தூர இருந்து பார்த்து உணர்வது வாழ்வா?

முழுமையான வாழ்வு என்பது எது? எப்போது மரணத்தை முழுமையாக மனது எதிர்கொள்ளும் பயமில்லாமல்?

இறப்பை நோக்கியதா? வாழ்வை நோக்கியதா? எனது இந்த சிந்தனை!
நான் சொல்ல முனைவது என்ன?


kaathalikka thodangivitten

காதலிக்கத் தொடங்கிவிட்டேன்!


அவளின் இதழ்களின் நடுவே தெரிந்த பற்களின்            
ஒளியில் கூசிய என் கண்களின் வழி புகுந்த அவளின் உருவம்
நிலைத்தது என் நெஞ்சுக்கூட்டில் (நினைவகத்தில்)  

உணர்வற்று நின்ற எந்தன் நிலை அறிந்த அவள் என்
அருகமர்ந்து என்னை சேர்த்தணைத்து உள்ளத்து அன்பெலாம்
ஒன்று  திரட்டி தந்தாள் ஒரு முத்தம் என் கன்னத்தில்!

அந்த முத்தத்தின் ஈரத்தில் என் உள்ளத்தில் பெற்ற புது உத்வேகத்தில்
அவளது இதழ் கவ்வி தேன் எடுத்தன எனது இதழ்கள்!
மலர்ந்த செந்தாமரை போன்ற அவளின் முகமலரின் பொலிந்த
அன்பினை எது கொண்டு நான் என்னுள் எடுத்துக் கொள்வேன்?

என் இதயத்தில் நிரம்பிய அன்பை முழுதும் அவளுக்கென்று சொல்லி
அவள்தரும் இனிய புன்சிரிப்பை விலையாகப் பெற்ற என் மனதில்
நிரம்பி வழியும் காதல் உணர்வை அவளின் மடியில் காணிக்கை ஆக்கி விட்டேன்!

என் கைகளில் சேர்ந்த அந்த மலர்ப் பூங்கொத்தின் நறுமணத்தை 
எப்படி முழுதும் அடைவேன் சிறிதும் மிச்சம் இல்லாமல்?
அவளின் சிறு நகைப்பில் இழந்தேனே என் வாழ்வின் வலி எல்லாம்!
அவளின் சிறு ஊடலில் தவித்தது என் மனம் ஆறாத்துயரில்!