என்னத்தை சொல்ல?
சமீபத்தில் தமிழிஷ் வரதக்ஷணை என்ற சமூகத்தின் புண்ணை நீக்கும் முயற்சியில் வரதக்ஷணை கொடுக்க மாட்டோம்/ வாங்க மாட்டோம் என்று வெளிப்படையாக சொல்லும் திறன் உள்ளவர்களை நாங்கள் பட்டியல் இடுகிறோம் என்று களம் இறங்கி உள்ளது.
பெரும்பாலும் உங்கள் உண்மைப் பெயர் கூட வெளியிடத் தேவையில்லை இங்கு.
இதுவரை எத்துணை பேர் தங்கள் பெயர்களை இணைத்து உள்ளனர் இங்கு?
ஒரு பெண்ணாவது தான் வரதக்ஷணை கொடுக்க மாட்டேன் என்று முன் வரிசைக்கு வருவாரா? சொல்லி விட்டால் எங்கே தனக்கு கிடைக்க வேண்டிய சரியான மணமகன் இந்த ஒரு காரணம் பற்றி கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயமா? அல்லது சமூகம் தன்னை எப்படி எண்ணும் என்ற காரணமா?
ஆண்கள் எத்துணை? தமிழிஷ் வலைத்தளம் பார்க்கும் அத்தனை பெரும் திருமணம் ஆனவரா? பட்டியலில் பெயர் சேர்ந்தால் மட்டும் நாம் வாங்காமலோ கொடுக்காமலோ இருந்து விடுவோமோ?
சாதி கல்வியில் நுழைகிறது என்று கூப்பாடு போடும் பதிவர்கள் திருமணம் என்ற இருமனம் முக்கியத்துவம் பெற்ற உறவில் இத்துணை வகைப் பட்ட சமூகக் கேடுகள் உள்ளதைக் கண்டும் காணாமல் போவது ஏன்?
கல்வி பொது சொத்து. அது பங்கிடப் படாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினற்கே வேண்டும் ?
திருமணம் தன் குடும்ப விஷயம். இங்கு சாதி பார்ப்போம்; பணம் வர்கம் பார்ப்போம்; பணம் இருந்தால் வேறு எதையும் பார்க்க மாட்டோம்?
intercaste என குறிப்பிட்ட ஒரு மணப்பெண்ணின் தந்தை கூறுகிறார். நான் நாயுடு; மனைவி பிராமணன்; எங்கள் பெண்ணை ஒரு பிராமணப் பெண்ணாக வளர்த்து உள்ளோம். எனவே எங்களுக்கு பிராமண மணமகனே வேண்டும்!
சாதி எப்படி ஊடுருவி உள்ளது? இதையும் தாண்டிப் பாயும் பணம். ஒருவேளை ஏதாவது பணம் படைத்த மணமகன் கிடைத்தால் இந்த நிபந்தனை தளர வாய்ப்புண்டு?
சமூகத்தில் எல்லோரும் பணம் படைத்தவராக இருக்க முடியாது. ஆனால் எல்லோரும் நிச்சயமாக மனிதர்களாக வாழமுடியும். இது எப்போது புரியும்?
எழையாக உள்ள உயர் சாதி மனிதன் பணம் பெற்று விட்டால் நிச்சயம் சமூக அந்தஸ்து கிடைத்து விடும்! ஆனால் பணக்கார தாழ் சாதிக்கு? சமூகத்தில் யாரேனும் ஒருவன் வேறு எந்த காரணமும் இல்லாமல் இந்த சாதி என்ற காரணத்திற்காக அவமானம் அடைவது மனித நாகரிகமா?
பணம் இல்லாத காரணத்தால் திருமணம் சில காலம் தடைபடலாம். ஜாதகம் சாதி சரியில்லாமல் திருமணம் தடைப்பட்ட பெண்களின் நிலை?
0 comments:
Post a Comment