நட்பு சின்னங்கள் !


பிறந்தது  முதல் நம் வளர்ச்சியுடன் நமது நண்பர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. சிறு பிள்ளைகளாக தெருவில் சுற்றி திரியும்போது நமக்கு கிடைக்கும் நண்பர்களை நமது பெற்றோர் கண்காணித்து அவர் தகுதிக்கு ஏற்றது போல் நம் நட்பை மாற்றுகின்றனர். இருப்பினும் நாம் விடுவதில்லை.

பின்னர் பள்ளியில் நம் பக்கத்தில் உட்கார்ந்தவனை மிகவும் நேசிக்க கற்றுகொள்கிறோம். அவனும் எப்போதும் நம்முடனே சுற்றி வருவான் பள்ளி முழுதும்.
பள்ளி நட்பு பெரும்பாலும் இருவகை நன்றாக படிப்பவனை சுற்றி, அல்லது நல்ல செலவு செய்பவனை சுற்றி.

விளையாடும்போது ஒரு வகையான நட்பு. பின்னர் வீடு நோக்கி செல்லும்போது ஒன்று. வீட்டின் அருகில் ஒன்று. பின் உயர்நிலை பள்ளி மாறும்போது நம்மை சுற்றி இருந்த நட்பு வட்டம் களைந்து புதிய நட்பு வட்டம் உண்டாகும். பழைய நட்பு விட்ட சின்னங்களாக நம் உடலில் எங்காவது தலும்பாகவும், மனதில் ஒரு மலர்ச்சியாகவும்.

உயர் பள்ளியில் மீண்டும் கிடைத்த நட்பு பள்ளி இறுதி வரை கூட வரும். இங்கேதான் நமது வாழ்நாள் நட்புக்கான தகுதிவுடைய நண்பர்களும் கிடைக்கின்றனர். இவர்கள் எந்த காலத்திலும் நம் நினைவில் நிற்பார்கள்.

கல்லூரி காலம் எல்லோரும் சொல்வது போல் எல்லாருக்கும் மகிழ்ச்சியை மட்டும் அளித்து விடுவதில்லை. ஒவ்வொரு பழக்கம் கற்றுத்தரவும் ஒவ்வொரு நட்பு வட்டம் உருவாகும். உயர்ந்த சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு வட்டம், நமது மன விகாரங்களை வெளிக்காட்ட ஒரு வட்டம். வாழ்வின் லட்சிய முழக்கங்களை செவி மடுக்க ஒரு வட்டம்.  நம்மில் உள்ள அனைவரும் கொண்ட எந்த ஒரு பழக்கமும் நமது நட்பு வட்டத்தை பொறுத்தது.

இந்த மூன்று பருவத்தின் இறுதியில் பார்த்தால் நம் மன ஆழத்தில் ஒரு மகிழ்ச்சியை பூரிப்பை கொடுத்த நட்பு விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த நண்பர்களை நம் வாழ்வின் இறுதி வரை கொண்டு செல்லும் துணையாக கொள்ளலாம். இவர்கள் நமது மனதில் உண்டாக்கிய பதிவுகள் எளிதில் மறக்க கூடியதாக இருப்பதே இல்லை.

நமது நண்பர்களில் எத்தனை பேர் தங்கள் வாழ்வின் பாதையில் வெற்றி பெற்று இருப்பார்கள்? அவர்களின் தோல்விக்கு காரணம்? ஒரு வேளை நம்மால் அவர்களுக்கு உதவ முடியுமானால் தயங்காமல் உதவுவோம்.

2 comments:

மா.குருபரன் said...

//கல்லூரி காலம் எல்லோரும் சொல்வது போல் எல்லாருக்கும் மகிழ்ச்சியை மட்டும் அளித்து விடுவதில்லை. ஒவ்வொரு பழக்கம் கற்றுத்தரவும் ஒவ்வொரு நட்பு வட்டம் உருவாகும். உயர்ந்த சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு வட்டம், நமது மன விகாரங்களை வெளிக்காட்ட ஒரு வட்டம். வாழ்வின் லட்சிய முழக்கங்களை செவி மடுக்க ஒரு வட்டம். நம்மில் உள்ள அனைவரும் கொண்ட எந்த ஒரு பழக்கமும் நமது நட்பு வட்டத்தை பொறுத்தது//

ம் நிட்யமாக..

நாளும் நலமே விளையட்டும் said...

நன்றி திரு குருபரன்.