மக்களின் நண்பன்

சென்னை TIDEL PARK மக்களும், தரமணி,கானகம் சேர்ந்த பகுதியில் வாழ்மக்களும் பலகாலம் பயன்படுத்தி வந்த பாலம் உடைந்தது.


மரப்பாலம் போல் எதோ ஒன்று இந்த பக்கிம்காம் கால்வாயில் இருந்ததாகவும் கயிற்றில் நடக்கும் கழைக்கூத்தாடி போல் செல்ல வேண்டும் என்பதாகவும் அறிந்து இருக்கிறேன்.

நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது இரும்பு மூலம் கட்டப்பட்ட இந்த பாலம் நடப்பவர்களுக்கும், மிதிவண்டிகாரர்களுக்கும் உருவாக்கப்பட்டது. பாலத்தின் நடுவில் கம்பங்கள் நட்டு இதை நடைமுறைப் படுத்தினர். பின்னர் நம் மக்கள் கம்பங்களை உடைத்ததன் மூலம் பைக், ஆடோ செல்ல வழி செய்தனர். நம் TIDEL பார்க் நண்பர்கள் மற்றும் படித்த பெருங்குடி மக்கள் தங்கள் காரினையும் ஒட்டி சாகசம் செய்தனர்.

ஞாயிறு இரவு பாலம் பற்றி தெரியாத யாரோ ஒரு லாரி ஓட்டுனர் வண்டி முழுதும் செங்கல் ஏற்றி வந்து இந்த பாலத்தைக் கடக்க முயன்று தோற்று பாலத்தை வெற்றிகரமாக உடைத்து மக்களின் நீண்ட கால நண்பனை கால்வாயில் நீராட்டினார்.

0 comments: