http://www.cablesankaronline.com/2012/08/blog-post_8.html
நான் AIRTELDTH கடந்த மூன்று வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன் . இந்த முறை advance rental scheme என்று செய்யலாம் என்று south value plus standard package ஒரு வருடத்திற்கான பணம் செலுத்தி activate செய்ய சொல்லி அவர்களுக்கு போன் செய்தேன். customer care மக்களும் இன்னும் ஆறு மணி நேரத்தில் எனக்கு activate செய்வதாக சொன்னார்கள் . இதன் பயன் என்னவென்றால் 45 நாட்கள் free ஆகும் . காத்திருந்து மறுபடியும் அழைத்தேன். இன்னும் 24 மணி நேரத்தில் செய்து விடுவோம் என்றார்கள்.
இப்படியே ஒரு வாரம் கழிந்தது . ஒரு நாள் டெல்லியில் இருந்து அழைத்து எனக்கு HD செட் top box உள்ளது . எனவே நான் HD channel உள்ள package மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்றும் விருப்பம் இல்லை என்றால் connection நீக்கி விடுகிறோம் என்று சொன்னார். நானும் சரி எனக்கு எனது set top box விலையை திருப்பி கொடுத்து விடுங்கள் என்று சொன்னேன்.
set top box airtel property ஆகும். அதை நான் அவர்களிடம் திருப்பி கொடுத்து விட வேண்டும் என்றும் அதற்கு பணம் எதுவும் திருப்பி தர மாட்டோம் என்று சொன்னார் . நான் எனது package HD channel இல்லாமல் கொடுத்தால் ஏற்று கொள்வேன். இல்லையெனில் consumer court செல்வேன் என்று சொன்னேன் . அப்படி என்றாலும் செய்து கொள்ளுங்கள் என்று வைத்து விட்டார் .
மறுபடியும் customer care தொடர்பு கொண்டு பேசினேன் . அவர்கள் பழைய மாதிரியே சொன்னார்கள். பின்னர் சென்னை consumer court முகவரிக்கு complaint எழுதி அந்த கடிதத்தை nodalofficer airtel க்கு அனுப்பி வைத்தேன். மறுபடியும் டெல்லியில் இருந்து அழைத்து நான் நிச்சயம் HD channel வாங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
மீண்டும் customer chooses what he wants என nodal officer க்கு மெயில் அனுப்பி வைத்தேன் . கடைசியில் அவர்கள் எனது விருப்பம் நிறைவேற்றினார்கள் . இதற்கு எனக்கு தேவைப்பட்ட நாட்கள் 16. சேமித்த பணம் Rs 300. ஆனாலும் எனக்கு வேண்டியதை பெற்றதில் எனக்கு வெற்றி .
2 comments:
விடா முயற்சி...!
பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
thanks sir
Post a Comment