பரிகாரம் செஞ்சிகிங்கோ!

வாக்கிய பஞ்சாங்கப்படி, சனிபகவான் இன்று மாலை 3.27 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவார்.

இவரே, மக்களின் ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயம் செய்யும் பிரதான கிரகமாக இருக்கிறார். இவர் பெயர்ச்சியாகும் ராசிகளைப் பொறுத்து, ஒவ்வொருவரின் ஆயுளும், தொழிலும் மாற்றம் பெறும்.

இது வரைக்கும் டாக்டரா இருந்தவங்க ஆசிரியராகவும் திருடனா இருந்தவங்க வக்கீலாகவும் மாற நிறைய வாய்ப்புள்ளது. இதுவரைக்கும் நல்லா இருந்தவங்க பன்னி காய்ச்சல், புற்று நோய், மேலும் பல நோய்களுக்கு ஆளாக வாய்ப்பு அதிகம். ரொம்ப வியாதி இருந்தவங்க குனமாகிடுவாங்க. இவங்க டாக்டர பாக்க தேவையில்லை. 

சனிபகவான், அவருக்குரிய சனிக்கிழமையான இன்று பெயர்ச்சியாவது விசேஷமாகக் கருதப்படுகிறது. எண் கணிதப்படி சனிபகவானுக்குரிய எண் எட்டு. இன்று 8ம் எண் ஆதிக்கம் உள்ள நாள். மேலும், இன்று எட்டாம் திதியான அஷ்டமியும் இருக்கிறது. சனீஸ்வரர், அவருக்கு உகந்த நாளில் பெயர்ச்சியாவதால், அவ்வளவாக தீய பலன் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.

சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இது ஏழரைச்சனி காலம்.  இந்த ராசியில் பிறந்தோரும், இந்த ராசிகளை லக்னமாக உள்ளவர்களும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

இதனால நாங்க சொல்றதெல்லாம் என்னனா ,  இருக்கற காச எல்லாம் சேர்த்து பக்கத்துல இருக்குற கோயில் பூசாரி கிட்ட கொடுத்து பரிகாரம் பண்ணிகிங்க. மேலும் பல தரப்பட்ட தானியங்கள வாங்கி இவங்க கிட்ட தந்தா எந்த துன்பமும் வராம பாத்குவாங்க.
2 comments:

கலகலப்ரியா said...

//இதனால நாங்க சொல்றதெல்லாம் என்னனா , இருக்கற காச எல்லாம் சேர்த்து பக்கத்துல இருக்குற கோயில் பூசாரி கிட்ட கொடுத்து பரிகாரம் பண்ணிகிங்//

ஆஹா.. பூசாரிக்கு ஒரு புரோக்கர் கிடைச்சிட்டாருயா.. நடத்துங்க..

நாளும் நலமே விளையட்டும் said...

என்னங்க கலகலப்ரியா இப்படி சொல்லிட்டிங்க!
நாமெல்லாம் சொல்லலைனா யார் சொல்வாங்க?
தொண்டு செய்வதே நமது கடன்!