தமிழ் கேட்டு என் உள்ளம் கொதிக்குது!

தமிழகத்தில் ஆங்கிலத்தில் புலமை பெற்று வாழும்  மக்கள் சாதாரண தமிழக மக்கள் பேசும் ஆங்கிலம் அவர்கள் காதில் கொடூரமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

தேள் இவர்கள் காதில் கொட்டுவது போல் உள்ளதாம் நம்மவர் பேசும் ஆங்கிலம்.

தமிழகத்தில் தமிழனுக்கு பிறந்து வாழ்ந்து வரும் பலதரப்பட்ட இந்த நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் பெருங்குடி மக்கள் பேசும் தமிழ் கேட்டு என் உள்ளம் கொதிப்படைவதை எங்கு முறை செய்வது?

பிற மொழி கலக்காமல் தமிழ் பேசு என்று சொன்னால் வந்து கடிக்கும் இவர்கள் தமிழ் நாட்டில் வாழும் மக்கள் தாங்கள் பேசும் ஆங்கில சொற்களை சரியாக சொல்லாவிட்டால் ஏன் இத்தனை கொதிப்பு அடைகின்றனர்?

வேற்று மொழிக்கு வக்காலத்து வாங்கும் இந்த வீர மனிதர்கள் தம் தாய் மொழியில் என்ன தெரிந்து வைத்து உள்ளனர்.

தம் குழந்தைக்கு பேரே தம் மொழியில் வைக்காத இந்த அறிவிலிகளை என்ன செய்யலாம்?

பாரதி இருந்தால் இவர்கள் பேசும் தமிழ் கேட்டு நாய்கள் குரைக்கின்றன என்றல்லவா தம் காதுகளைப் பொத்திகொள்வான்!

5 comments:

Ananda said...

ஐயா உங்கள் உள்ளம் கொதிப்பதை போல எனக்கும் கொதிக்கிறது,
தொலைகாட்சி பிறந்த நாள் வாழ்த்துக்களில் கூற படும் பெயர்களில் தொண்ணூற்று ஐந்து விழுக்காடு தமிழ் அல்லாத பெயர்களே,
அனால் நீங்கள் பாரதி இருந்திருந்தால் உள்ளம் கொதிதிருப்பார் என்று சொல்வது
எனக்கு உடன்பாடில்லை,
அவர் பாடிய பாடல்களில் சமஸ்கிருத கலப்பில்லாமல் பாடிய பாடல்கள் முக மிக குறைவு
கலப்படம் என்பது ஆங்கிலம் மட்டுமல்ல , எந்த மொழி கலந்தாலும் கலப்படமே (கலப்படம் தமிழ் சொல்லோ?)

இன்றும் நம் மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் சொற்களில் ஆங்கிலத்தை விட சமஸ்கிருதமே மிகுந்துள்ளது , (ஏன் என்னுடைய இந்த பின்னூட்ட வார்த்தைகளில் எத்ததனை சமஸ்கிருத சொற்களோ? )

சுத்தம்
மதியம்
முக்கியம்
சந்தோசம்
ஆனந்தம்
சம்பாஷனை
ராத்திரி
பத்திரிக்கை
சக்தி

இது போல எத்தனையோ சொல்லலாம்

இந்த கலப்பிற்கு நாளிதழ்கள், சஞ்சிகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன

முதலில் தமிழர் சமஸ்கிருத சொற்கள் நீக்கி அன்னை தமிழ் , அருந்தமிழ் பேச வேண்டும் என்பதே என் கருத்து.

ஆதிரை

பின்னோக்கி said...

//சுத்தம்
//மதியம்
//முக்கியம்

என்னங்க இவரு பீதிய கிளப்புராரு. இது எல்லாம் தமிழ் வார்த்தைன்னு தான் நினைச்சிகிட்டு இருந்தேன்

நாளும் நலமே விளையட்டும் said...

பின்னோக்கி , ஆதிரை உங்கள் பின்னூடங்களுக்கு நன்றி!
பாரதி பாடிய பாடல்களில் சமஸ்க்ரிதம் (சம கால தமிழில் இருந்த சொற்கள் மிகவும்)
உண்டு. ஆனால் நான் இங்கு சொல்ல வருவது தம் சொந்த மொழியை சரியாக பேச தெரியாதவர்கள் ஒரு அந்நிய மொழியை இன்னொருவர் தவறாக பேசும்போது நாணி, கோணிக் கொள்வது என்ன?

பாரதி தமிழ் இசையை ஆதரித்தவர்! என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
உயர் ஆரியர் என்று போற்றியவரும் கூட!

இவருக்கு பின்னால் தனி தமிழ் வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அவர்கள் மட்டும் இல்லையெனில் இன்று நாம் எல்லாம் வடமொழி தமிழ் பேசி உள்ளம் களித்திருப்போம்.

Ananda said...

பின்னோக்கி இன்னமும் நிறைய வந்தேறி சொற்கள் உள்ளன....

உத்யோகம்
சாத்வீகம்
பாவம்
புண்ணியம்
சுத்தம் - அசுத்தம்
ஆத்மா - ஆன்மா
பிரயாணம்
பிரதம

---தொடரும்

Ananda said...

இதோ வந்தேறி சொற்களின் சிறிய அட்டவணை
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D