சோதிடம் தனை இகல்! பத்து மாதப் பெண் குழந்தையை சோதிடம் காரணமாகக் கொன்ற தந்தை!

சோதிடத்தை நம்பாதே! என காளியை நம்பும் பாரதி, விவேகானந்தர், ராமகிருஷ்ணர் மற்றும் நமது சைவப் பெரியோர் நால்வரும் சொல்லிச் சென்றனர்!

சோதிடத்தை நம்பாதே! என நாத்திகத் தலைவர்களும், பகுத்தறிவுப் பெரியோர்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்!

நம்மில் யார் கேட்டோம்? அவர் சொல்வதை!
நம்பாதீங்கனு  சொன்னா, நீ என்ன  கடவுளுக்கு எதிரியா? எனக் கேட்கிறார்கள்!
எங்களின் ஆறாவது அறிவைக் கொண்டு இறை அருளால் நாங்கள் உனது எதிர்  காலத்தையும், அதில் ஏதாவது தீங்கு இருக்ந்தால் அதற்கான பரிகாரத்தையும் நீக்கி விடுவோம் என்று சொல்லி காசு பார்கின்றனர். இது மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கு பாடமும் சொல்லித் தந்து வாத்தியார் பட்டம் பெறுகின்றனர்.
எங்கே நாம் சொல்வது பலிக்காதோ என பயந்து இருக்கும் எல்லாவிதக் கெட்டதுகளையும் சொல்லி நம்மை பயமுறுத்திவிட்டு பின்னர் அது நடக்கவிட்டால் நீங்கள் இறைவனை நம்பியது வீண் போக வில்லை எனக் கதை அளக்கின்றனர்.

இவ்வளவும் மறுபடி எதற்கு எழுதுகிறேன்?

காரணம்: பத்து மாதப் பெண் குழந்தையை சோதிடம் காரணமாகக் கொன்ற தந்தை!
மனிதன் இந்த மட்டில் தரம் தாழ்ந்துப் போகக் காரணம்?
அவனது மூட எண்ணம் இல்லாமல் வேறு என்ன?
அன்று கம்சன் அரக்கன்! இன்று இதைப் போல் எத்துணை பேர்?
இதற்கெல்லாம் காரணம் இந்த முட்டாள் தனமான சிந்தனையை நம்மிடம் பரப்பும் இந்த சோதிடர்கள் தான்!

இவர்களுக்கு துணை நிற்கும் இந்த மீடியாக்களை யார் கேட்பது?
நித்யானந்தர் விசயத்தில் மீடியா செய்யும் அநியாயத்தை கேள்வி கேட்கும் மனிதர்கள் கேவலம் பணத்துக்காக நமது சிந்தனைக் கெடச் செய்யும் இந்த ஜோதிட நிகழ்ச்சிகளை நடத்தும் மீடியாக்களை நோக்கி விமர்சனம் செய்யாததன் காரணம்?

தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்பது அல்லாமல் வேறு என்ன?

விளக்கு வச்ச நேரத்தில!
கலைஞர் தொலைக்காட்சித் தொடரில் நன்கு படித்த சீட்டு நிறுவனம் நடத்தும் ஒரு தந்தை கேவலம் ஒரு ஜோதிடர் சொன்னதை நம்பி தன் மகள் திருமணத்தை நிறுத்திய அவலத்தை எங்கு சொல்ல?
இதைப் பார்க்கும் நம் போன்ற சாதாரண மக்கள் நிலை?

மானமுள்ள எந்த மனிதனும் நிச்சயம் ஒரு உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். ஜோதிடத்தை எந்தக் காரணம் கொண்டும் நம்ப மாட்டேன் என!
முடியுமா உங்களால்?

என்னை ஏதாவது திட்டவேண்டும் என நினைத்தால் முதலில் பாரதி, விவேகானந்தர் உள்ளிட்ட மனிதர்களைத் திட்டி விட்டு பின்னர் என்னை திட்டுங்கள்.

2 comments:

sweet said...

பாரதியின் கவிதைகளை ரசியுங்கள், ஆனால் பாரதி போல ஒரு கேடு கெட்ட தகப்பனாக இருக்காதீர்கள்...

காந்தியின் அஹிம்சை முறையை மதியுங்கள், ஆனால் காந்தி போல ஒரு கேடு கெட்ட கணவனாக இருக்காதீர்கள்...

உண்மை எப்பவும் கசக்கும்...

நாளும் நலமே விளையட்டும் said...

காந்தி ஒரு கேடு கெட்ட கணவன் என சொன்னால் நம்மில் எத்தனையோ பேர் கேடு கெட்டவர்களாகவே இருக்க வாய்ப்பு.
ஏனெனில் இந்த நாட்டில் மனைவிக்கு என்று எந்த உரிமையும் இல்லை.
அது காந்தி கண்ட அரிச்சந்திர ராஜாவாக இருந்தாலும்!
உலகின் பெரும்பாலான நாடுகளிலும் பெண்களின் நிலை இது தான்!
காந்தியை மட்டும் தனிமைப் படுத்தி நீங்கள் உத்தமர் ஆகாதீர்!

பாரதி போல் வாழ்ந்து காட்டிய மனிதர் வரலாற்றில் மிகக் குறைவு. அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியாவிட்டாலும் ஒன்றே
ஒன்று நிச்சயம் உண்மையாக இருக்கும். அவன் எப்போதும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசி இருக்க மாட்டான்!
அவன் நம்பியதை மிக்கத் திறத்தோடு நெஞ்சை நிமிர்த்தி சொன்னவன் அவன்!