வறண்ட நாட்கள்!

கண்ணே! நீ இல்லாத இந்த நாட்கள் என்னைத் தனியனாய் அலையச் செய்கின்றன. விழித்தெழுந்த உடன் உன் இருப்பை உணர்த்தும் உன் நடை கேளாத  எனது காதுகள் வலிக்கின்றன. அன்புடன் என்னை இழுத்து சென்று குளியலறையில் தள்ளும் நிலையன்றி என்னை நானே தள்ளி செல்லுதல் அத்தனை எளிதல்ல இப்போது.

குளித்து முடித்து வந்த உடன் என்னைக் கண்டு உன் தாமரை முகம் மலர புன்னகைப்பாய்! அது காணாமல் ஏன் கண்கள் நனைகின்றன?. உன் முகம் காணாமல் விடியலே உணர மறுக்கிறது உள்ளம்.  நான் போட்ட காப்பியை உன்னுடன் பகிர்ந்து அருந்தாமல் நானேப் பருகும் இந்த தனிமை  மிக கொடுமை.  நீ சமைத்து தரும் மணம் கமழும் பொங்கல் நான் சமைத்த  போது கழுநீரில் இட்ட கஞ்சியானது!  

உன் தோழிகள் உன்னைத் தொலைபேசியில் அழைத்த போது உன்னைக் காணாமல் வீடு முழுதும் தேடி அலுக்கின்றன கால்கள். உன் இருப்பே இல்லாமல் அலையும் இந்த நாட்கள்  நீ இந்த வீட்டில் இருந்தபோது எனக்கு அமைந்த வசந்தங்களை நினைவூட்டும் வறண்ட நாட்களாக்கி விட்டு சென்ற நீ எப்போது மீண்டும் வருவாய்?


உன்னைக் காணாமல்  வாடி நின்ற இந்த  நெஞ்சம் நீ வரும் வழி நோக்கி காத்திருக்கும்!

4 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான கவிதை; நல்லாருக்கு. வாழ்த்துகள் சரத்

சரத், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

நாளும் நலமே விளையட்டும் said...

என்னமோ நீங்கள் கவிதைன்னு சொல்லிட்டிங்க!
மண்டபத்துல இருக்கிற நக்கீறர் எல்லாம் எதோ உளறல் மாதிரி இருக்குனு சொல்றதா கேள்விபட்டேன்.
உண்மையில் இதை நான் கவிதை என கிறுக்க வில்லை.
ஒரு நேரத்து உணர்வுகளின் வெளிப்பாடு!

நாளும் நலமே விளையட்டும் said...

நன்றிகள்,

உங்கள் சரத்தில் கோர்த்ததற்கு.
நிச்சயம் உங்கள் சரத்தில் கோர்த்த மற்ற மலர்களால் என் பதிவும் மணம் பெறும்.

நாளும் நலமே விளையட்டும் said...

புளி இட்டு, பருப்பு இட்டு உணவு தயாரித்த மக்கள் தமிழர். அதன் வகைகளே சாம்பார்?
பெயர் எதுவாக இருந்தாலும் தமிழரே இந்த கூட்டு குழம்பை உருவாக்கி இருக்க இயலும்.
முளி தயிர் பிசைந்து? (புளிப்புக்காகவே) ..

சங்கத் தமிழ் சொல்லாதாது எத்தனையோ!
இந்தியத் திருநாட்டில் தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்கு இட்டுளி சுவை கொண்டு இருக்கிறது?
இதிலிருந்தே தெரியவில்லை? தமிழர் தான் கண்டு இருக்கவேண்டும் இதனை என்பதை?

ராசா? சாம்பார் எந்த மருத்துவ குணமும் இல்லாததா? நாளும் ரசமே குடித்து இருந்தால் போதுமா?