பெரியார்தாசன்

தாசன் இந்தப்  பெயரே அடிமைத் தனத்தின் வழியாகவும் , அன்பின் வழியாகவும் பார்க்கப் படலாம். பெரும்பாலானவர்கள் தாங்கள் யாருடைய கொள்கையின் பால் மிக ஈர்க்கப்பட்டனரோ அவர்கள் பெயருடன் இந்த தாசனை சேர்த்தனர். இவர்களில் எல்லோரும் பெயரில் மட்டுமா? என்பது வினா?

கண்ணதாசன், பாரதிதாசன், சுரதா என நிறைய பேர்கள் சமூகத்தில் உண்டு. பெரியார்தாசன் இந்த பெயரும் நம் சமூகத்தில் நன்கு அறியப் பட்ட ஒன்று. கருத்தம்மா உள்ளிட்டப் படங்களில் நடித்த பெரியார்தாசன் எனப் பெயர்கொண்ட நாத்திக வாதியாக அறியப் பட்ட ஒரு மனிதர் தான் இத்தனை நாள் கைகொண்ட ஒரு கருத்தாக்கம் தனக்கும் சமூகத்துக்கும் பயன் அளிக்காது என்பதை உணர்ந்து கூறியதாக ஒரு செய்தி வந்துள்ளது!

 ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாவுக்கே...

எங்கோ எதுவோ பிழையோ? யார் செய்த பிழை? ஒரு நாத்திகமான சிந்தனை உடையதாக சொல்லப் பட்ட ஒரு மனிதர் ஒரு குறிப்பிட்ட மத நூல் மட்டும் உயர்ந்தது என்னும் கொள்கைப் பிடிப்பு பெற எது காரணம்?

நான் இவரைப் பற்றி தாக்கி இங்கு எதுவும் எழுத முயலவில்லை. தனி மனிதனும், சமூகமும் நிறைவுடன் வாழ மதம் அவசியம் என்பது போல் ஒரு கருத்தாக்கத்தை ஒரு தத்துவ வாதி என சொல்லப் படும் மனிதர் ஏற்கிறார் என்றால்? 

இத்தனை நாள் தான் கொண்ட கொள்கையைப் பற்றி சிந்திக்காதவரா? அதைப் பற்றி எந்த ஒளிவு மறைவும் அற்ற ஆய்வு செய்தவரா? அப்படி இல்லாதவர் எப்படி அந்த கொள்கையுடன் பற்றுடன் இருந்திருப்பார்? புகழுக்காகவா? இப்போது மாறியதும் அதற்காகவா?

பெரியார் எப்போதும் தான் சொன்னதை யோசித்து சரி என கொண்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற சொல்லியக் கருத்துகளில் ஈர்ப்பு ஏற்பட்டு தன் பெயர் மாற்றிக் கொண்ட மனிதனின் உண்மை முகம் எது?

போலிச் சாமியாரைப் பார்த்த நாம்? இன்று யாரைப் பார்க்கிறோம்?

5 comments:

உமர் | Umar said...

//நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாவுக்கே...//

அவர் சில காலம் புத்த மதத்தவராக இருந்தாரே! அதைப் பற்றி ஒன்றும் கூறாமல், ஒரு நாத்திகன் இஸ்லாமியன் ஆனதாய்க் கூறுகின்றீர்.

பௌத்தராய் இருந்த ஒருவர், இஸ்லாமியராய் மாறினார் என்று கூறுங்கள் - சரியாய் இருக்கும்.

வால்பையன் said...

இஸ்லாமிராய் இருந்து கொண்டே பெயரியல் பேரரசருக்கு சொம்பு தூக்குவார், அப்போது இஸ்லாமிய நண்பர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்!

நாளும் நலமே விளையட்டும் said...

கும்மி, வால்பையன் இடுகை படித்து பின்னோட்டம் இட்டதற்கு நன்றி.
எனக்கு ஒன்று விளங்கவே இல்லை. ஒரு மனிதன் எப்படி இத்தனை மதங்களை மிக இயல்பாக மாற்றிக் கொள்ள முடிகிறது?
தான் பிறந்த மதத்தில் குறை எனில் அடுத்த மதத்தில் குறையே இல்லையா?
நாத்திகனா இருக்கும்போது 1000 பேரை நாத்திகராக மாற்றினாராம். தான் செய்த பாவம் கழுவ உம்ரா போவாராம்.
வருட வருடம் செய்தால் எத்துணை பாவம் செய்தாலும் கணக்கில் வராதாமே?
அரைகுறைகள் தான் இவர்கள்.

இஸ்லாம் பக்கத்தில் அவருக்கு மணிமகுடம் வச்சி வாழ்த்துறாங்க ? நல்லா இருக்கட்டும்.

உமர் | Umar said...

// தான் செய்த பாவம் கழுவ உம்ரா போவாராம்.
வருட வருடம் செய்தால் எத்துணை பாவம் செய்தாலும் கணக்கில் வராதாமே?
அரைகுறைகள் தான் இவர்கள்.//

இன்னும் சில "சிறப்பு" நாட்களும் இருக்கின்றன. அத்தகைய நாட்களில் தொழுதால், அனைத்து பாவங்களும் போகி விடுமாம். நான் 10 ம் வகுப்புப் படிக்கும்போது, இதனைக் கூறி என்னைத் தொழுகைக்கு அழைத்தனர். நான் அடுத்த வருடம் வந்து தொழுது கொள்ளுகிறேன், அதுவரை செய்யும் பாவமும் சேர்ந்து போகட்டும் என்று கூறினேன். :)

நாளும் நலமே விளையட்டும் said...

எல்லா மதக் காரங்களும் பாவம் கழுவ ஒரு வழி வச்சு இருக்காங்க.
இல்லனா அவங்க பொழப்பு என்ன ஆகுறது?