உணவு ,பண வீக்கம்-விலை வாசி நமக்கு ஏன் ?

http://www.luckylookonline.com/2010/03/blog-post_17.html

இந்தப்  பதிவில் சென்று பார்த்து இங்கு வரலாம். 

பண வீக்கம் என்ற அளவீடு தகுதிக்கு மீறி நம் கையை விட்டு எவ்வளவு அதிகம் செலவு என்பதன் அடிப்படையே. எந்த ஒரு நல ஆட்சியிலும் பண வீக்கம் 2 %க்கு  அதிகம் ஆகாமல் இருக்கும். இது வளர்ந்த நாடுகளில் சாத்தியம். இங்கு நான் சொன்ன பண வீக்க விகிதம் "நுகர்வோர் உணவுப் பொருள்" விகிதம். உலகில் பண வீக்கம் கணக்கிடுவதும் நம் நாட்டில் கணக்கிடுவதும் மாறு பட்டது.  இந்தியாவில் மொத்த கொள்முதல் விலைப் பண வீக்கம், சில்லறை விலைப் பண வீக்கம் என இரு வகை உண்டு. இரண்டுமே இப்போது இரட்டை இலக்கத்தில் நம் நாட்டில்.  நம் நாட்டு "நுகர்வோர் உணவுப் பொருள்" விலைக் குறியீடு 18% தாண்டி  விட்டது. சிலக் குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் 50%  தாண்டி.  

இதே அளவில் வருமானம் உயர்ந்திருந்தால் இந்த எண் நம் கணக்கில் வந்திருக்காது. பண வீக்கமும் , வைப்பு நிதி வட்டிக்கும் தொடர்பு செய்து பார்த்தாலும் எளிதில் விளங்கும் நம் வருமானம் எங்கோ கரைகிறது என.

இரு வருடம் முன் நான் 100 மூட்டை அரிசி வாங்கும் பணம் வங்கியில் இட்டு இருந்தால் இன்று நான் அறுபது மூட்டை தான் வாங்க முடியும்?
அதாவது என் பணம் என் கை விட்டு போய் விட்டது. அதே பணம் கொண்டு நான் இந்த அரிசி மூட்டை வாங்கி பதப் படுத்தி வைத்து இன்று விற்று இருந்தால்?
இது தான் பெரிய பெரிய நிறுவனங்கள் செய்வது. பொருள் அதிகம் கிடைக்கும்போது வாங்கி பதுக்கி (அரசு கணக்கு கேட்கும் எவ்வளவு கையிருப்பு என, இவர்கள் பொய்த் தகவல் சொல்லி விடுவர்) அதன் தேவை மிக அதிகம் ஆகும்போது விற்பது. இதை அரசு கை கட்டி வேடிக்கை பார்ப்பது. சில நேரங்களில் அரசே அளவுக்கு அதிகமாக வைத்துக் கொள்ள சட்டம் இயற்றும்.

பங்கு வணிகத்தில் இந்த பணம் இட்டு இருந்தாலும் இதே நிலை தான் ஏற்பட்டு இருக்கும். கொஞ்சம் இழப்பாக  இருந்தாலும் அது இழப்பே. அதாவது எல்லா இனங்களிலும் பங்கு பரிமாற்றம் 20% அதிகமாக
இலாபம் ஈட்டுவதில்லை. எனவே வருமானம் அல்ல. பங்கு வணிகம் பொறுத்தே நிறுவனங்களின் வருமானம். எப்படி  நிறுவனங்கள் வருமான உயர்வு அளிக்க முடியும்? அதாவது பெரும்பாலான மக்களின் வருமானம் கடந்த இரு ஆண்டுகளாக அதிகம் உயர வில்லை. அதே சமயம் பண வீக்கம் அதிகமாகிறது. அதாவது அவர்களின் அன்றாட செலவு அதிகமாகிறது. இது நிச்சயம் பொது மக்களை பாதிக்கும் விஷயம். அவனது எதிர்கால சேமிப்பு குறைவது மட்டும் இல்லாமல், அவனது சேமிப்பின் மதிப்பும் பாதாளம் செல்லும்.

உண்மை சொல்லப் போனால் நம் அரசின் கையால் ஆகா செயலே இந்த பிரச்னைக்கு காரணம். தங்கள் கையிருப்பில் நிறைய தானியம் இருந்தும் விலை ஏற்றம் சாத்தியமாகும் அளவு இருக்கிறது. எந்தப் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது? எனவும் தெரிய வில்லை. அரசு online trading கட்டாயம் தடை செய்ய வேண்டும். மேலும் ஊக வணிகம் தடை செய்யப் பட வேண்டும். நாளிக்குப் பொறக்கப் போற பிள்ளைக்கு இன்னைக்கே பேர் வைக்கறது தான் ஊக வணிகம் என்பது நீங்கள் அறிவீர். ஊக வணிகமே தேவை இல்லாத தேவையை உருவாக்கி பொருளின் விலை ஏற  காரணமாகிறது. பஞ்சாபில் விளையும் கோதுமைக்கு இங்கு இருந்தே விலை நிர்ணயிப்பது. இதன் மூலம் தேவை இல்லா போட்டி உருவாக்கி விலை உயரச் செய்வது. அந்த விலை உயர்வையும் விவசாயி பெற விடாமல் தாங்களே அனுபவிப்பது தானே ஊக நிறுவனங்களின் செயல்பாடு?

நேற்று வரை மளிகைக் கடை வைத்து தம் ஊரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு விற்பனை செய்த கடைக் காரனை துரத்தி விட்டு புதிய புதிய வணிக வளாகங்கள் உருவாக்கி விலைகளைத் தாங்களே நிர்ணயம் செய்யும் பெரிய பெரிய நிறுவனங்களினால் தெருவில் நின்ற இவர்களின் நலன் காக்க முனையாத அரசு? தெருவில் அலைந்து ஐந்து ருபாய் கீரைக் கட்டை  பேரம் காரணமாக மூன்று ரூபாய்க்கு விற்று விட்டு வீடு சேரும் மூதாட்டியின் இரவு உணவு என்ன? தமிழ் நாடு அரசின் ஒரு ரூபாய் அரிசி சோறு தானே?

2 comments:

வால்பையன் said...

//நாளிக்குப் பொறக்கப் போற பிள்ளைக்கு இன்னைக்கே பேர் வைக்கறது தான் ஊக வணிகம் என்பது நீங்கள் அறிவீர். //

பேரு வைக்ககூடாதா தல!
தெய்வகுத்தம் ஆயிருமா?

:)

நாளும் நலமே விளையட்டும் said...

அது ஆணாப் பெண்ணா எனத் தெரியாது.
அதற்குள் பேர் வைத்து கொண்டாடுவதா?

நான் சொல்ல வருவது என்னனா, ஊக வணிகத்தில் தேவையில்லாமல் ஒரு சூழல் உருவாக்கி அதை பயன்படுத்தி
பணம் செய்கின்றனர். எனவே அதை சரி செய்ய முயல வேண்டும். சமூகம் எல்லோருக்கும். அது சிலரின் ஊகத்தின் படி நடக்க கூடாது
என்பதே என் கருத்து.