சில நாட்கள் முன்பு எனது நண்பர்களை என் வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தேன்.
ஆனால் அவர்கள் இந்திய உணவை உண்ண இயலாதவர்கள்(காரம் கிட்டே வரக்கூடாது)
இவர்களுக்காக நான் சமைத்த ஒரு குழம்பு இங்கே
கத்தரிக்காய் குழம்பு!
மிளகாய் ( 0 gram)
கொத்தமல்லி (2 tea spoon)
மூன்று வகை பருப்புகள்(துவரம்,உளுந்து,கடலை)
வெந்தயம், சீரகம்,மிளகு சிறிது
இவற்றை நல்ல முறையில் வறுத்து அரைத்து வையுங்கள்.
மிக முக்கியமான மாற்றமாக தேங்காய்க்கு பதில் நான் இங்கு கேரட்டை துருவி வணக்கி
அரைத்து வைத்துக் கொண்டேன்.
இப்பொழுது வெங்காயம், கத்தரிக்காயை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு எண்ணை விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் போட்டு நன்றாக வணங்கியபின் கத்தரிக்காய்களை இட்டு மேலும் சிறிது எண்ணை விட்டு வணக்கியதும் தக்காளி(நன்றாக பழுத்த) மூன்று போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இந்த வேளையில் அரைத்து வைத்த பொருட்களை(கேரட், குழம்பு தூள்) இதில் இட்டு நன்றாக கொதித்து வந்ததும் தாளித்து இறக்கவும்.( தோசைக்கு நன்றாக இருந்தது)
0 comments:
Post a Comment