நன்றியுள்ள நாய்கள் !

என் சிறு வயது முதல் நாய்கள் என்றால் உள்ளுக்குள் ஒரு அச்சம்.
கடித்து விட்டால் நமக்கு ராபிஸ் வந்து விடும் என்பதில் அதீத நம்பிக்கை.
எனவே நாய் இருக்கும் பக்கமே போக மாட்டேன்.

ஆனால் விதி யாரை விட்டது?
சென்னை தெருக்களில் திரியும் நாய்களிடம் இருந்து நாளும் விலகி செல்வதே மிகவும்
பயங்கரமானது. தூங்கி கொண்டு தான் இருக்கின்றன என்று மிக மெதுவாக அந்த இடத்தை விட்டு நகரும் நிலையில் ஒரு குரைப்பு செய்யும் இந்த நாய் அந்த பகுதி நாய்களை எல்லாம் தன் படை பலத்தில் சேர்த்துக் கொள்ளும். மிக வேகமாக நடக்கவும் பயம். நிற்கவும் பயம். மிக நிதான நடை வேண்டும் இங்கே!

இந்த விலங்கு பாதுக்காப்பு சங்க உறிப்பினர்கள் தெரு நாய்களை நகராட்சி பிடித்து செல்லக் கூடாது என்று சொல்வதில் நம் எத்தனை பேருக்கு உடன்பாடு இருக்க முடியும்?
சில நேரங்களில் சிறுவர்,சிறுமியரை இவை கடித்து செய்யும் இம்சைகளுக்கு அளவில்லை.

வேறு வீடு வாடகைக்கு பெயர்ந்தோம். அங்கு பக்கத்து வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தனர். அது புதிதாக யார் வந்தாலும் குரைக்க ஆரம்பித்து விடும். அதை பார்கவே மிக பயமாக இருக்கும். அதன் உயரமே நம் இடுப்பை தாண்டி விடும். அதை அவர்கள் கொஞ்சும் அழகே தனி. நான் அதன் அருகில் ஒரு நாளும் சென்றதே இல்லை.

நாய் வளர்ப்பவர் எல்லோரும் சொல்லும் ஒரு வாக்கியம் "எங்கள் ........(பெயர்) ரொம்ப நல்லது. யாரையும் கடிக்காது. (அப்புறம் எதற்கு வாசலில்)" பயப்படாதீர்கள்.

சரிதான். உங்கள் நாய் நல்ல நாய் என்று உங்களுக்கு தெரிகிறது. நாய்க்கு அது தெரியுமா?
அல்லது என் மனம் தான் அதை நம்புமா? பார்க்கும் போதே குலை நடுங்கி விடுகிறது.

சில நாட்கள் முன் சென்ட்ரல் சென்று இருந்தேன். அங்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பதற்காக நாய்களுடன் காவலர்கள் நிலையத்தை வலம் வந்து கொண்டு இருந்தனர். நான் வண்டியில் ஏறும் சமயம் உள்ளிருந்து ஒரு நாய் என் மேல விழும் வண்ணம் வந்தது.

என்னால் இந்த அதிர்ச்சியை தாளவே முடியவில்லை.


நாகரிக சமூகத்தில் வாழும் நாம் ஒரு பிள்ளைக்கு பாதுகாப்பு அளிக்க தயங்கும் நாம் நாய்கள் வளர்க்க மட்டும் தவறுவது இல்லை. அவற்றை பராமரிக்க நாம் மிக அதிக செலவு செய்கிறோம். ஆனால் ஒரு அநாதை குழந்தைக்கு உதவி செய்ய மறுக்கிறோம்.
நம் இல்லங்களில் பணி செய்யும் வேலையாட்களுக்கு ஊதியம் தருவதில் சிக்கனம் கடைப் பிடிக்கும் நாம் நம் நாய்களை சுகபோகமாக வளர்ப்பதில் குறை வைப்பது இல்லை.

2 comments:

ஜெட்லி said...

நாய் மேல் உங்களுக்கு என்ன கோபம்
என்று தெரியவில்லை....இது ஒரு
வகை போபியா தான்....
பெயர்: நாய் கடிக்குமோ கடிக்கதோ போபியா....

உங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன் நண்பரே...

நாளும் நலமே விளையட்டும் said...

அன்பு ஜெட்லி,

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!
நாய்கள் மீது எனக்கு கோபம் இல்லை.
எல்லா உயிர்களையும் அன்போடு நேசிக்க விரும்புகிறேன்.

தயவு செய்து இன்று தினமலர் செய்தி பார்க்க.
http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=13238