பிறர் துயரை தன் துயராய் எண்ணி வாடி
அவர் தம் துன்பம் தீர்க்க தன் நலனையும் விடுத்து
பாடுபடும் உள்ளம் கொண்ட மனிதனை மரணம்
நெருங்கவும் அஞ்சும்!
நான் இழந்த பதவி, சுகம், எல்லாம் மீண்டும் பெற அம்பாளை பிரார்த்திக்கிறேன்.
பூசாரியை கூப்பிட்டு பால்,பழம் உள்ளிட்ட பலவாறு அபிசேகம் செய்து பலதரப்பட்ட உணவு பொருட்களை நெய்யுடன் யாகத்தில் இட்டு (பட்டு, மேலும் பல ஆபரணங்களும் அடங்கும்) அம்பாளை வேண்டினால் அவள் நீ வேண்டாததையும் சேர்த்து தருவாள்.
இந்த தீபாவளிக்கு பிரத்தியங்கரா தேவிக்கு பதினாயிரம் எண்ணிக்கை கொண்ட இனிப்புகளை யாகத்தில் இட்டு எரித்து அந்த நறுமணத்தை அம்பிகை நுகரச் செய்து படைத்தால் இந்த உலக வாழ்வின் எல்லா துன்பம் நீங்கி நாம் வாழ நலம் செய்வாள்.
மனிதர்களே! நீங்கள் எப்போது உங்கள் சிந்தனை வழி செல்வீர்கள்?
இன்னொருவன் சொன்னதை சத்தியம் என்று நம்பி உங்கள் அறிவினை அடகு வைத்து
வாழும் நிலையை என்று மாற்றிக் கொள்வீர்கள்?.
பக்தி என்பது கடவுளை விலைக்கு வாங்குவதிலா? அல்லது பூசாரிக்கு படியளப்பதிலா?
வேதம்,வேதம் என்று பாடும் மனிதர்களே!
உங்கள் எதிரில், உங்கள் பக்கத்தில்
நீங்கள் வாழும் இந்த உலகத்தில்,
உண்ண உணவின்றி மடியும்
பச்சை குழந்தைகளுக்காக என்றாவது
உங்கள் கண்களில் இருந்து சிறு கண்ணீராவது வருமா?
அவன் விதி என்று எளிதில் விட்டு விடும்
உங்கள் நிலை இப்படியே இருந்து விடுமா?
0 comments:
Post a Comment