முந்திரி பர்பி!

காஜு  கத்லி செய்யலாம்னு 200 கிராம் முந்திரி வாங்கிகிட்டு வந்து  வலைபக்கங்களில்
செய்முறை தேடினேன். நிறைய வந்தது.

எல்லாவற்றின் பொதுவான விஷயம்
சர்க்கரை =முந்திரி(எடை)
சர்க்கரை ஒரு கம்பி பாகு பதம் வேண்டும்!
முந்திரி ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்து வைக்கவும்.
சர்க்கரை பாகில் அரைத்த முந்திரி கலந்து மெது வெப்பத்தில் கிண்டி
சப்பாத்தி மாவு பருவம் வந்ததும் தட்டில் கொட்டி சப்பாத்தி கட்டையால் சமன் செய்து
விள்ளல் போடவும்.இதை தான் நானும் செய்தேன். எங்கோ எதிலோ தவறு! எனக்கு குழம்பு  தான் கிடைத்தது. சற்று மேலும் கிளறி குளிர்பதனம் செய்தால் இறுகும் என்று ஒரு குறிப்பு இருந்தது. அதுவும் செய்தேன். ஆனால் எனக்கு அல்வா போல் எதோ வந்தது.

நல்ல செய்முறை யாராவது சொல்லுங்கள். இல்லாட்டி எங்க தப்புனாவது சொல்லுங்கள்.

4 comments:

நாளும் நலமே விளையட்டும் said...

யாருமே கமெண்ட் பண்ண மாட்டோம்னு முடிவு பண்ணி தான் வரீங்களா என் பக்கத்துக்கு?

மின்னுது மின்னல் said...

http://tamizhdesam.blogspot.com/2008/05/blog-post_3577.html

and

http://www.samaiyalarai.com/sweets/cashewparbi.html

:)

Jaleela said...

ம‌ன‌ம் த‌ள‌ற‌ வேண்டாம் அது ப‌ழ‌க‌ ப‌ழ‌க‌ தான் வ‌ரும்.

அரை க‌ப் அள‌விற்கு இர‌ண்டு முன்று முறை செய்யுங்க‌ள். க‌ண்டிப்பா ந‌ல்ல‌ வ‌ரும்.

நாளும் நலமே விளையட்டும் said...

மின்னுது மின்னல்
Jaleela

உங்கள் பின்னூடங்களுக்கு நன்றி.
அடுத்த முறை செய்து பார்த்து சொல்கிறேன்.