அன்போடு வாழ நான் விரும்புகிறேன்!

நான்  எல்லா உயிர்களையும் அன்போடு நேசிக்க ஆசைப்படுகிறேன்!
பாம்பினை கண்டு பயம் கொள்ளாமல் என்னால் இருக்க முடியாது.
வள்ளுவரே  சொல்லி இருக்கிறார். பயப்பட வேண்டியவற்றிற்கு பயம் கொள்ளுதல் வேண்டும் என்று.

நாய் பற்றி ஒரு இடுகை இட்டு இருந்தேன்.

இன்றைய தினமலர் செய்தி பாருங்கள்.

http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=13238


விலங்கு பாதுகாப்பு சங்கத்தினர் மிக முயற்சி கொண்டு நாய்களுக்காக போராடி வருகின்றனர். இந்த உறுப்பினர்கள் பெரும்பாலும் சமூக மேல்தட்டு மனிதர்கள் ஆதலால் சாதாரண மக்கள் தெரு நாய்களால் படும் அவதி இவர்களுக்கு தெரியாது.
சாதாரண மக்களே தெரு நாய்களுக்கு உணவு அளித்து பராமிப்பவர்களாகவும் இருப்பது தான் இந்த கீழ்தட்டு மனிதர்களின் இயல்பு வாழ்வுக்கு சான்று.
ஆனால் அவர்களுக்கு  இந்த உயிர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு மருந்துகளை அளிக்க கூடிய தேவையான பணமோ, அதைப் பற்றிய விழிப்புணர்வோ இல்லை.

நம்மால் இயன்றவரை தெரு நாய்கள் பெருகாமல் செய்வோம்.(தைரியம் உள்ளவர்கள் இந்த நாய்களை தத்து எடுத்துக் கொள்ளலாம்)

தினமலர் செய்தியை இங்கு ஒட்டுகிறேன்.


உடுமலை: சுற்றித் திரியும் "வெறி நாய்'களால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவனின் கழுத்தை வெறிநாய் கடித்ததில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.


 உடுமலை நகராட்சி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கணக்கம்பாளையம், பெரியகோட்டை, கண்ணமநாயக்கனுர், போடிபட்டி உட்பட பல ஊராட்சிகளில் நூற்றுக்கணக்கான வெறி நாய்கள் சுதந்திரமாக சுற்றி வருகின்றன. ரோடுகளில் நடந்து செல்லும் மக்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் குறிவைத்து, கடித்து வருகின்றன. உடுமலை நகராட்சி பகுதிகளில், சுற்றித் திரியும் வெறி நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும், வெறிநாய்களின் எண்ணிக்கை குறையவில்லை.


 தினமும், பலர் வெறி நாயால் கடிபட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவலம் தொடர்கிறது. உடுமலை ஜீவா நகர் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய், பல நாட்களாக அவ்வழியே, சென்றவர்களை கடித்து வந்துள்ளது. நேற்று முன்தினம், ஐந்து வயதான காளீஸ்வரன், நடந்து சென்றபோது, சிறுவனின் மீது பாய்ந்து கழுத்து, முகம், உடல் பகுதிகளை வெறிநாய் கடித்தது. அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வீட்டிற்கு அழைத்து சென்றனர்.


 இந்நிலையில், இரவு, கடும் காய்ச்சலுடன், செய்கைகளில் வித்தியாசம் தெரிந்ததால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். தற்போது, உடுமலை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் காளீஸ்வரன், கடுமையான காயங்களுடன் இருப்பதோடு, அதிர்ச்சியிலிருந்து மீளாமல் வெறித்தபடியே அமர்ந்துள்ளான்.

3 comments:

கலையரசன் said...

நெஞ்சை உலுக்கும் செய்தி..!
நாமே நாயை பார்த்து பயப்படுவோம்.. 5 வயது பையன நினைச்சா?

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

நாளும் நலமே விளையட்டும் said...

கலையரசன்,
உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி. settings சரி செய்துவிட்டேன்.
என்னோட கேள்வி எல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்.
இந்த விலங்கு பாதுகாப்பு சங்கம் இந்த தெரு நாய்களை கவனிக்காமல் என்ன செய்துன்கிறது தான்.

நகராட்சி இந்த நாய்களின் எண்ணிக்கை குறைக்க எதாவது நடவடிக்கை எடுத்தா இவங்க தடை ஆணை வாங்கிடறாங்க. இவங்க சாலையில் நடந்தால் தானே தெரியும் வலி