கோவில்களில் தீபம் அணைந்தது : பெண்களுக்கு ஆபத்து என வதந்தி

என்னங்க? சேதி தெரியுமா?
தமிழ்நாட்டின் பல கோவில்களில் அணையா விளக்குகள் அணைந்தனவாம்!
சாயாக்  கொடி மரங்கள் சாய்ந்தனவாம்!

வீட்டின் பெண்களுக்கு இதனால் மிகுந்த துன்பம் ஏற்படும் என செய்தி ஊர்(நாடு) முழுவதும் பரவியது. பயந்த நம் மக்கள் வீட்டின் வாசலில் விளக்கு ஏற்றி பெருமானே! எங்கள் வாழ்வைக் காப்பாற்று என பிரார்த்தனை செய்தனர்.

கோயில்களை இடியுங்கள் என்று வேண்டிய பெரியார் வாழ்ந்த நாட்டு மக்களின் அறியாமைக்கு அளவே இல்லையா?

இவை  எல்லாம் நிச்சயம் நமது அறியாமையை, மூடத் தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

பாப்போம்! இன்னும் எவ்வளவு காலம் என!

5 comments:

நிகழ்காலத்தில்... said...

\\பாப்போம்! இன்னும் எவ்வளவு காலம் என!\\\

திருந்துவது இப்போதைக்கு இல்லை:))

நாம் திருந்துவோம், வாழ்ந்து காட்டுவோம்,

எனக்கும் வதந்தீ வந்தது,

வேறு வேலையைப் பார் என சொல்லி விட்டேன்

நாளும் நலமே விளையட்டும் said...

நன்றி நிகழ்காலத்தில்,

நம்மை சுற்றி உள்ளோருடன் தொடர்ந்து பேசி இத்தகைய தீய பயங்களை போக்க முயல்வோம்.

விக்னேஷ்வரி said...

கொடுமை. வேறென்ன சொல்ல...

நாளும் நலமே விளையட்டும் said...

நன்றி விக்னேஷ்வரி,
கடவுளை நம்புவது வேறு!
இந்த மூடத்தனங்களை நம்புவது வேறு என நம் மக்களுக்கு புரியவே மாட்டங்குது.

ஜோதிடம்/ஆன்மிகம் ஒன்று என சொல்வது போல் tamilish கூட இடுகை வெளியிடுகிறது.

நாளும் நலமே விளையட்டும் said...

வாக்குகள் இட்டு இந்த இடுகையை பெரும்பாலான மக்கள் பார்வைக்கு கொண்டு சென்ற நண்பர்களுக்கு நன்றி.