என்னுடைய ஜாதகத்தை ஒரு பிரபல ஜோதிடரிடம் கொண்டு சென்று கொடுத்தேன்.
அப்போது எனக்கு 17 வயது. +2 தப்பி தவறி பாசாகி விட்டேன். மேற்கொண்டு என்ன படிக்கலாம்? என் ஜாதகப்படி நான் என்ன படித்தால் எனது எதிர்காலம் நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்க உங்களை பார்க்க வந்தேன் என்று அவரிடம் சொன்னேன்.
முன் பின் எங்களுக்குள் எந்த பழக்கமும் இல்லை. இவர் ஒரு பிரபல ஜோதிடர் என்று எங்கள் ஊர் மக்கள் சொல்லி இருந்தனர். அதனாலே இவரிடம் வந்தேன்.
இவரைப் பார்க்க மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்துகிடந்தனர். எனவே அவர் குறிப்பிட்ட இரண்டு கேள்விகள் மட்டுமே ஒரு தடவை கேட்கலாம் என்று சொன்னார்.
அய்யா எனக்கு வக்கீல் ஆகனும்னு ஆசை. என் ஜாதகப் படி நான் வக்கீல் ஆக முடியுமா சொல்லுங்கள் என்றேன். அவர் எனது ஜாதகத்தை பலமுறை பார்த்து உனக்கு பேச்சுத்திறன் உன் ஜாதகப்படி இல்லை. ஆனால் இரும்பு தொழில் உனக்கு சரி. (கவனிக்க, அப்ப எல்லாம் engineer தொழில் இல்லை) நீ எப்படியாவது பணம் கட்டி mechanical engineer சேர்ந்துடு புதன் உன்னைக் காப்பாத்துவார். பெரிய சாதனை எல்லாம் செய்வ அப்படின்னு சொன்னதுனால
இப்ப நான் ஒரு பிரபல தனியார் கல்லூரில நாலாவது வருஷம் படிச்சிகிட்டு இருக்கேன்,
என்ன ஒரு விசயம்னா ரொம்ப அரியர் இருக்கு.
இருந்தாலும் புதன் மேல பாரத்த போட்டுட்டு படிக்கிறேன்.
பாப்போம்.
6 comments:
இவ்வளவு மூட நம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டு, உங்களால எப்படி அப்படி எல்லாம் யோசிக்க முடியுது?
இனியாவது புதன் உங்கள காப்பானாக! ஆமென்.
நன்றி truth,
நான் இருக்கும் நாடு தமிழ்நாடு. இங்கு எல்லாம் இப்படி தான். நான் மட்டும் வேறயா?
இல்லைனா இன்னும் ஜாதகம் பாத்து தன் வாழ்க்கை ஆரம்பிக்கிற இத்தனை பேர் இருப்பாங்களா?
பிறந்தா ஜாதகம் குறிச்சிட்டு இவன் என்ன ஆவான்? ஜோசியன்கிட்ட கேள்வி.
வயசுக்கு வந்துட்ட எப்ப கல்யாணம் ஆகும்?
பயனா இருந்தா என்ன வேலை கிடைக்கும்?
ஜாதி பார்த்து, ஜாதகம் பார்த்து தானே கல்யாணம் நடக்குது.
அப்புறம் பஞ்சாங்கம் பார்த்து சாந்தி முகூர்த்தம்.
பாடையில போகும்போது சாவு காலம்(எம கண்டம்)
நல்ல நாடு நான் வாழும் நாடு.
ஓ, ஒகே சார், நீங்க பாரதி சொல்றத கேட்கிறவருன்னு தப்பா நின்னைச்சுட்டேன்.
மற்றபடி, நான் வாழும் நாடு இந்தியாங்கண்ணே
நன்றி truth,
பாரதி சொன்னத இங்க யார் கேட்கறா?
india நாட்டில் மூட நம்பிக்கை இல்லையா?
ஜோதிடம் என்பதே மூட நம்பிக்கையின் அடித்தளம்.
இந்தியாவில் இது எங்கு இல்லை?
ராம் கோபால் வர்மா படங்கள் பாருங்கள் தெரியும்.
எவ்வளவு படிச்சி இருந்தாலும் இது நம்மை விட்டு போகாது.
நம் சிந்தனை நேரா இருக்கணும்.
//பாரதி சொன்னத இங்க யார் கேட்கறா
நான் கேடிகிறதில்லை. ஆனா நீங்க அவர் சொல்றத தெய்வ வாக்கு போல இல்ல சொல்லியிருக்கீங்க வேறொருவர் பதிவின் பின்னூட்டத்தில்.
நீங்க இவ்வளவு தூரம் கேட்கறது காரணமா நான் இங்க சொல்ல விரும்பறது என்னனா
நான் இந்த கதையில சொன்ன கருத்து
நம்மள புதன் காப்பாத்த மாட்டார்.
நாம தான் நம்ம எதிர்காலத்த நிர்ணயிக்கணும்!
இத நீங்க இந்த பதிவ இன்னும் ஒரு தடவை பார்த்து இருந்தால் உங்களுக்கு தெரியும்
Post a Comment